Thursday, 26 April, 2018

மனிதன் பூமியிலிருந்து படைக்கவில்லை-நவீன விஞ்ஞானம்!(டாக்டர் . பீ. முகமது அலி, பிஎச்.டி, .பீ.எஸ்()

களி மண்ணிலிருந்து மனிதப் படைப்பினை துவங்கினான்' என்றது அல்குரான் 1430 ஆண்டுகளுக்கு முன்பு(32:7)
'மனிதனை மண்ணிலிருந்து, பின்னர் விந்திலிருந்து படைத்தான் ஏக அல்லாஹ்' அல் குரான்(35:11)
'அவனை நாம் விந்திலிருந்து படைத்தோம் என்பதினை மனிதன் அறிய வேண்டாமா' என்றும் சொல்லியுள்ளது குரானில்(36:77)
காலனி ஆதிக்க ஏகாதிபத்திய இங்கிலாந்தில் தொழில் புரட்சி காலத்தில் உதித்த விஞ்ஞானி சார்லஸ் டார்வின்(  1809-1882)   மனிதப் படைப்பினைப் பற்றி தீவிரமாக ஆராய்ந்து எழுதப்  பட்ட புத்தகம், 'மனிதப் படைப்பின் ஆரம்பம்'( on the origin of species)    
அதனில், 'குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்' என்று நம்பும்படி எழுதியுள்ளார்.
அதற்கு அவர் உதாரணமாக காட்டியது சிம்பனி என்ற மனிதக் குரங்கு மனிதனைப் போல நடவடிக்கைகளில் இருப்பதாலும், சில ஆப்பிரிக்க மக்கள் குரங்குகள் போன்ற முக அமைப்பினையும் கொண்டதாலும் தான். ஆனால் அவரால் ஏன் அந்த மனிதக் குரங்குகளால் பேச முடிவதில்லை என்பதையோ அல்லது இரண்டு கால்கள் கொண்டு மனிதனைப்போல நடமாட  முடியவில்லை என்பதனையே விளக்க முடியவில்லை.
ஆங்கிலேய பகுத்தறிவாளி டாக்கின்ஸ் பித்திலி, 'நாம் மனிதக் குரங்குகள் போல தோற்றம் இருந்தாலும், நாம் மனிதக் குரங்குகளின் சந்ததிகள் என்று ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை' என்கிறார்.
            இதனையே தான் அல் குரானும் மனிதப் படைப்பான ஆதமையும்-ஹவ்வாவையும் எவ்வாறு படைத்தான் என்று விளக்கமாக கூறுகின்றது.
அதனை உறுதிப் படுத்தும் விதமாக விஞ்ஞானி டாக்டர் கெல்லிஸ் சில்வர், தனது, 'மனித இனம் தோன்றியது பூமியிலல்ல' என்ற ஆராய்ச்சி கட்டுரைகள் மூலம் நிரூபித்துள்ளார்.
            இஸ்லாம் வானுலகில் பல கண்டங்கள் உள்ளது என்றும், அதில் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்ற மலக்குகளும், ஜின்களும் உள்ளன என்று கூறுகின்றது. இதன் மூலம் கோள்களில் வேற்றுக் கிரக வாசிகள் வாழ்வது சாத்தியமே என்று கருத வேண்டியுள்ளது. சமீபத்தில் நாசா விண்கல சோதனை மையத்தின் அருகிலேயே மூன்று அதி நவீன ஒளி கொண்ட உருவ அமைப்புகள் கொண்டவை தெரிந்ததாக தரையில் உள்ள நாசா மையம் தொலைக் காட்சியில் தெரிவித்தது.
            அத்தோடு பூமி ஒரு சிறை போன்றும் அதனில் மனிதன் தனது ஆரம்பக் காலத்தில் இயற்கை, விலங்குகளோடு போராடி வெற்றியடைய வேண்டியிருந்தது என்றும் கூறுகின்றார், டாக்டர் கெல்லிஸ் சில்வர்.
            இஸ்லாத்தில் ஆதம்(அலை) அவர்களை மனிதனின் தந்தையாகவும், ஹவ்வா (அலை) அவர்களை  தாயாகவும் கருதப் படுகிறது. எல்லாம் வல்ல அல்லாஹ் பூமியிலுள்ள ஒரு பிடி மண்ணை எடுத்து வர மலக்கு மார்களிடம் கட்டளையிட்டு, பல மலக்குகள் மலைத்த போது ஜிப்ரயீல்(அலை) அவர்கள் மட்டும் பூமியின் பல்வேறு இடங்களில், பலவிதமான மண்களை சேகரித்து ஒரு பிடி மண்ணினை இறைவனிடம் கொடுத்து, அதனை இறைவன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்தான். அதனால் தான் ஆதம் அவர்களின் சந்ததி மனிதர்கள் பல நிறத்தில் இருக்கின்றார்கள் என்ற கூற்றும் உள்ளது.
            ஆதமைப் படைத்த அல்லாஹ் மற்ற மலக்குகளிடம் ஆதம் அவர்களின் கட்டளைக்கு கீழ்பணிய கட்டளையிட்ட போது இப்லிஸ் மட்டும், தான் நெருப்பினால் படைக்கப் பட்டவன், எப்படி மண்ணால் படைக்கப் பட்ட மனிதருக்கு கீழ்ப் பணிவேன் என்று மறுத்து விட்டதாகவும் சொல்லப் பட்டுள்ளது அல் குரானில்.
ஆதம் அவர்கள் நித்திரையில் இருக்கும்போது அல்லாஹ், அவரின் விலா எலும்பிலிருந்து ஹவ்வா(அலை) அவர்களைப் படைத்ததாகவும் கூறப் பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.
ஒரு குறிப்பிட்ட மரத்தின் பழங்களை பறித்து திண்ணாதீர்கள் என்ற கட்டளையினை செவி மடுக்காது இப்லிஸ் வழி கெடுத்தல் மூலம் பழத்தினைப் பறித்து அதனை உண்டு இறைவன் கோபத்திற்கு ஆளாகி பூமி என்ற சிறை அனுபவிக்க அனுப்பப் பட்டதாக கூறப் பட்டுள்ளது(2 .36 ) அதன் பின்பு ஆதம்(அலை) மற்றும் ஹவ்வா(அலை) அவர்கள் பூமியில் தனித்தனியே பிரிந்து இறுதியில் அரபாத் மலையில் சந்தித்துக் கொண்டதாகவும் கூறப் பட்டுள்ளது.
ஆகவே பூமி பல கோளங்களின் ஒரு பிரிவாக அமைந்து, அதில் மனித இனம் எதிர் நீச்சலடிக்கும் ஒரு பிறவியாக
அல்லாஹ் படைத்து வாழ்க்கை ஒன்றை அமைத்து அதில் இன்பம், துன்பம் அனுபவிக்க வேண்டும் என்றும், மற்ற விலங்குகள் போலல்லாது மனித இனம் புனிதமானது என்ற அந்தஸ்தினை வழங்கிய ஏக நாயனுக்கு நன்றி செலுத்த மட்டும் நாம் ஏன் மறுக்க வேண்டும்!

Saturday, 7 April, 2018

என்னைக் கவர்ந்த கலீபா உமர் சிறப்புப் பயான்!(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)
கி.பி.634 லிலிருந்து கி.பி.644  வரை அராபியாவில் இரண்டாவது கலிபாவாகி முஸ்லிம்கள் ஆட்சியினை அரேபியாவிலிருந்து மெசபொமோடோமியா, சிரியா, இரான், இராக், எகிப்து ஆகிய நாடுகளில் நிலை நிறுத்தியவர். முஸ்லிம் அல்லாத மகாத்மா காந்தி போன்ற தலைவர்களால் உமருடைய நீதி நிறைந்த ஜனநாயக ஆட்சி முறை பற்றி பாராட்டப் பட்டவர். அவருடைய சீரிய புகழ் பற்றி சென்ற  6 4 2018 அன்று மண்ணடி செம்புதாஸ் தெருவில் இருக்கும் பள்ளியில் சேலத்தினைச் சார்ந்த ஒரு இமாம் ஆற்றிய உரை மிகவும் சிறப்புடையதாக இருந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
            இன்று காவேரி தண்ணீருக்காக தமிழ்நாடு போராட வேண்டியுள்ளது. அது ஆட்சியினர் குறையே என்றால் மறுக்கமுடியாது. ஒரு தடவை கலிபா உமர் அவர்கள் பக்ரா என்ற ஊருக்கு வருகை  தந்தார்கள். அங்கே தண்ணிர் பஞ்சம் தலை விருத்தாடியது. அந்த ஊரில் தனது நீண்ட நாள் நண்பரினை சந்திக்க நேர்ந்தது. அப்போது அந்த நண்பரிடம் உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப் படுகிறதா கேளுங்கள் தருகிறேன் என்றாராம், அந்த நபர் வறுமையில் வாடும் நிலை கண்டு. ஆனால் அந்த நண்பரோ தனக்கும் தனது குடும்பத்திற்கும் பொன்னும், பொருளும் கேட்கவில்லை. மாறாக அந்த நகருக்கு தண்ணிர்  பஞ்சத்தினைப் போக்கும் விதத்தில் ஒரு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டாராம். உடனே அந்த நகர் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள மக்களுக்கும் உதவும் படி பக்ரா அணையினை காட்டினாராம். அதனை இன்றும் ஹஜ், உம்ரா செல்பவர்கள் காண முடியும்.
            உமர் அவர்கள் மக்கள் குறை தீர்ப்பவராக இருந்ததால் ஒரு தடவை அதிகாலை நேரத்தில் நகர் வலம் வந்தார். அங்கே ஒரு பள்ளியில் சில இளைஞர்கள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். உடனே கீழே கிடந்த கல்லை எடுத்துக் கொண்டு அந்த இளைஞர்களை பார்த்து ஏன் தொழுகை முடிந்து உடனே விரைந்து சென்று குடும்பத்திற்கு தேவையான பொருள் சம்பாதிக்க வில்லை என்று கேட்டார்களாம். அந்த இளைஞர்களோ, நாங்கள் ஏமன் நாட்டிலிருந்து நேற்று இரவு வந்து தங்கி காலையில் வியாபாரத்திற்காக செல்ல வேண்டும் என்று கூறினார்களாம். அதனைக் கேட்ட உமர் அவர்கள் நல்ல வேலையாக தப்பித்தீர்கள், இந்நேரம் இந்த நகர வேலை செய்யாமல் சோம்பேறியாக வெறுமனே கதை பேசும் இளைஞர்களாக இருந்தால் இந்தக் கல்லைக் கொண்டு தாக்கியிருப்பேன் என்கிறார்களாம். இது எதனைக் காட்டுகின்றது என்றால் பள்ளியில் தொழுகை முடிந்ததும் வீண் பேச்சுகள் குறைத்து குடும்பத்தினை காப்பாற்ற தொழிலில் ஈடுபடவேண்டும் என்ற அறிவுரையினைத் தானே காட்டுகின்றது. ஆனால் ஒரு மாத, மூன்று மாத, ஆறுமாத ஜமாத்து என்று இளைஞர்களை படிப்பு, வியாபாரம், குடும்பத்தினை புறக்கணித்து அழைத்துச் செல்வது  நியாயமா என்று கேட்காத தோனவில்லியா உங்களுக்கு. எனக்குத் தெரிந்த ஒரு ஜாமத்திற்கு சென்ற இளைஞர் தாய் நோயாய் இருக்கும்போது வயதான தந்தையினை அருகில் விட்டு விட்டு 15 நாள் ஜமாத்திற்கு சென்றதும், தாய் மவுத்தானதும் அந்த இளைஞர் எங்கே இருக்கின்றார் என்று கூட அறிய முடியா ஜமாத்தின் நிலை இருந்த ஒரு நிகழ்வுனை அறிவேன். ஜாமத்திற்கு சென்ற அந்த இளைஞரின் கைபேசியினை அந்த குழுவின் தலைவர் வாங்கி வைத்துக் கொண்டாராம் என்ற பரிதாபமான நிலையினைப் பாருங்கள். சில பள்ளியில் அஸர் தொழுது விட்டு வெட்டியாக இஷா வரும்வரை பள்ளி வளாகத்தில் அமர்ந்து வீனே வம்படிக்கும் சிலரைக் காணலாம். இதுபோன்ற நிகழ்வு தேவைதானா. ஏன் அந்த நேரத்தில் வீட்டிற்கு தேவையான காரியங்களை செய்யக்கூடாது.
            உமர் அவர்கள் மக்களிடம் குறை கேட்டு அதனை நிவர்த்தி செய்யும் ஆளுமை படைத்தவராக இருந்தார்கள். ஒரு தடவை மக்கள் குறை கேட்கும் நேரத்தில் ஒரு கவர்னர் பற்றி, 'அவர் தனது வீட்டிற்கு மிகவும் அதிகமான பொருட்ச் செலவில் கதவு அமைத்துள்ளார்' என்ற புகார் வந்ததாம். உடனே அந்த கவர்னரை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றாராம். அங்கே கலீபா உமர் அவர்களுடைய வீட்டின் முன் வாசலில் கதவு எதுவுமில்லாமல் ஒரு கோணிப் பை மறைப்பாக தொங்கியதாம். உடனே அந்த கவர்னர் வருந்தி தனது ஆடம்பர கதவினை நீக்கி விட்டாராம். ஆனால் இன்றைய ஜனநாயக நாட்டில் மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தனது காலைதேநீருக்காக ரூ 3 .5 கோடி இரண்டரை வருடத்தில் செலவு செய்திருப்பதாக தகவல் உரிமை சட்டத்தில் கேட்கப் பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப் பட்டுள்ளது.
            இன்னொருமுறை ஒரு கவர்னர் பற்றி மூன்று புகார்கள் சொல்லப் பட்டதாம். 1 ) காலையில்   குறிப்பிட்ட நேரத்தில் அலுவலுகத்திற்கு வராமல் காலந்தாழ்த்தி வருகிறார், 2 ) விடுமுறை நாட்களில் அலுவலகத்திற்கு வருவதில் லை, 3 ) இரவு நேரங்களில் அலுவல்கள் பார்ப்பதில்லை என்பதான  குற்றச் சாட்டாகும் . ஒரு தடவை உமர் அவர்கள் சபைக்கு அந்த கவர்னர் வருகை தந்ததும் மேற்கூறப்பட்ட குற்றச் சாட்டுகள் பற்றி கேள்வி கேட்கப் பட்டதாம். அந்த கவர்னர் முதலாவது குற்றச் சாட்டிற்கு ப் பதிலாக, 'கலீபா அவர்களே, என் மனைவி நோய் வாய்ப் பட்டவள், அவளுக்கும் என் பிள்ளைகளுக்கும் சமையல் செய்து, அவளுக்கு நோய்க்கான மருந்துகள் கொடுத்து விட்டு வர தாமதமாகிறது என்றாராம். உடனே கலீபா அவர்கள் அந்த கவர்னர் நெற்றியில் முத்தமிட்டாராம். இரண்டாவது குற்றச் சாட்டிற்கு, எனக்கு உடுத்த ஒரே ஆடை தான் உள்ளது அதனை விடுமுறை நாட்களில் துவைத்துப் போட்டு காயவைத்து உடுத்திக் கொள்வதிற்க்காக வருவதில்லை என்றாராம். உடனே கலீபா அவர்கள் அவருடைய நெற்றியில் இரண்டாம்முறையாக முத்தமிட்டு, 'நான் கூட இரண்டு ஆடை வைத்துள்ளேன்' என ஆதங்கப் பட்டாராம். மூன்றாம் குற்றச்சாட்டிற்கு 'நான் பகல் நேரத்தில் படைப்பினங் களுக்கு சேவை செய்து விட்டு இரவு நேரங்களில் படைத்தவனுக்கு எனது நன்றி செலுத்தி தொழுவதால் இரவு அலுவல் செய்வதில்லை என்றாராம். உடனே கலீபா அவர்கள் அவரை கட்டி அணைத்துக் கொண்டு அவர் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு எவ்வளவு அளவிற்கு விசுவாசமாக இருக்கின்றார் என்று சபையினரை நோக்கிச் சொன்னார்களாம்.
            நமது இளைஞர்கள் தற்போதைய நிலையினை மேற்கூறிய கருத்துக் களோடு ஒப்பிட்டுப் பார்க்க கடமை பட்டுள்ளோம். பெற்றோரை பேனிக் காப்பதில்லை, மனவியினை தன் உடலின் ஒரு உறுப்பாக கருதாமல் தனக்கு நோய் வந்தால் அவள் பணிவிடை செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணமும், அவள் நோய் பட்டு விட்டால் பிறந்த வீட்டிற்கு அனுப்பி அங்கே வைத்தியம் பார்த்து விட்டு வா என்று மூட்டை முடிச்சுடன் அனுப்பும் செயலும் இருக்கின்றது. எனக்குத் தெரிந்த ஒரு சம்பவம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன். ஒரு மணமக்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து அந்த மணமகள் திடீரென்று மயக்கம் அடைந்து கணவன் வீட்டில் விழுந்து விடுகிறாள். உடனே கணவன் வீட்டார் அந்தப் பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே பரிசோதித்த டாக்டர் லோ சுகரினால் மயக்கம் அடைந்துள்ளார் என்று கூறி மருந்து கொடுத்தாராம். வீட்டிற்கு வந்ததும் மணமகன் வீட்டார் பெண்ணிடம் உனக்கு ஏற்கனவே சுகர் நோய் இருக்கின்றதா என்று கேட்டதிற்கு அந்தப் பெண்ணும் வெகுளியாக ஆம் என்று சொல்லி விட்டதாம். உடனே அந்தப் பெண் மீது ஆதங்கம் படாமல் கோபப் பட்டு ஏன் திருமணத்திற்கு முன்னே அதனை சொல்லவில்லை என்று சண்டைப் போட்டு ஆடு,மாடு போல வீட்டிற்கு அனுப்பி விட்டதோடு, தலாக்கும் சொல்லி விட்டார்களாம். என்னே பரிதாபம். சக்கரை ஒரு நோய் அல்ல மாறாக அது ஒரு குறைபாடே என்று அவர்களுக்கு யார் எடுத்துக் காட்ட வேண்டும். படித்த மணமகன் தானே செய்ய வேண்டும். ஆனால் அவன் தன் பெற்றோருடன் சேர்ந்து ஒரு பெண்ணை சுவைத்து விட்டு மறு மணமகளை தேட ஆரம்பித்து விட்டானாம். 
            இஸ்லாமிய கவர்னர் உடுத்த ஒரே உடை தான் வைத்து விடுமுறை நாட்களில் துவைத்து உடுத்தினாராம். ஆனால் இந்திய பிரதமர் ரூ 10 லட்சம் மதிப்புள்ள கோட்டு அணிந்த செய்தியும் படித்திருப்பீர்கள். அதுவும் எந்த நாட்டில் மகாத்மா காந்தி இடுப்பில் ஒரு துணியும், மேலங்கி ஒரு துணியோடு வாழ்ந்து காட்டிய வரலாறு உள்ளது. ஏன் தமிழ் நாட்டிலே சுதந்திர போராட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜீவாவும், நல்லக்கண்ணும் வாழ்ந்தவர் மற்றும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் தான். அவர்கள் ஆடையினை அவர்களே தான் துவைத்துக் கொள்வார்களாம். தலைக்கு கூட எண்ணெய் தேய்க்க மாட்டார்கள். ஆனால் நமது சமுதாய தலைவர்கள் கூட தற்போது தங்களை மதிக்க வேண்டுமென்று திருமண நிகழ்ச்சிக்கு கூட கோட்டு, சூட்டு அணிந்து வருகிறார்கள் என்று எதனை காட்டுகின்றது என்றால் அவர்கள் சாமானிய இஸ்லாமிய மக்களை கீழ்த்தரமாக நினைக் கும் போலியான நடவடிக்கை  என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?
நமது சமுதாயத்தில் பணம், புகழ், படிப்பு பெரும் வரை இறைவனை வணங்குகிறோம். ஆனால் அந்த மூன்றும் கிடைத்ததும் அகம்பாவம் அடைந்து தன்னுடைய திறமையினால் தான் அத்தனையும் கிடைத்தது என்று எல்லாம் வாரி வழங்கும் வல்ல அல்லாஹ்வினை தொழ மறந்து விடுகின்றோம். ஆகவே தான் கலீபா உமர் அவர்களும், அவர் கீழ் பணியாற்றிய அலுவலர்களும் சிறப்பாக மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக ஆட்சிமுறை நடத்திக் காட்ட முடிந்தது. ஏன் அது போன்று இன்றை இஸ்லாமிய இளைஞர் படையினால் முடியாத, இழந்த பெருமை திரும்பப் பெற முடியாதா?

Wednesday, 14 March, 2018

இந்திய வரலாறு மாற்றியமைப்பு-முழு பூசணிக்காயினை சேற்றில் மறைக்கும் முயற்சி!                     (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
இந்திய துணைக் கண்டம் ‘இண்டஸ்’ நதியின் பெயரால் அமைந்துள்ளது. இந்திய அரசியலமைப்பில் இந்தியாவின் பெயர் மஹாபாரத புராணத்தில்  வரும் பரத மகாராஜாவின் பெயரினை தாங்கி பாரத நாடு என்றுள்ளது. மஹாபாரதத்தில் பரதர் கி.மு 5 வது நூற்றாண்டில் இந்தியா முழுவதும் ஆண்டதாக சொல்கிறது.

ஆனால் உலக வரலாற்று ஆசிரியர்கள் இந்திய நாகரீகம், உலகில் பழமையான நாகரீங்களான மெசொபொடோமிய, எகிப்து போன்றது என்கின்றனர். தற்போது மொகஞ்சோதர-ஹரப்பா நாகரீக நகரங்கள் பாக்கிஸ்தான் பஞ்சாப்-சிந்து மாகாணங்களில் உள்ளன. அவைகளை வரலாற்று ஆசிரியர்கள் கி.பி. 1842 ஆம் ஆண்டில் தான் கண்டுபிடித்தனர். அதேபோன்று தான் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டத்தில் பாலத்தால் என்ற இடத்தில் உள்ள பழமை நாகரிகமும் கி.பி.1962ல் கண்டுபிடிக்கப் பட்டது. அவைகளை கண்டு பிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கூறிய நாகரியங்கள் கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறினர்.
நான்கு வேதங்களை உட்பட்ட காலங்கள் வேதிக் காலங்கள் என்கின்றனர். அவை கி.பி.150லிருந்து-கி.பி.1700 ஆண்டுகளுக்குட்பட்டது என்கின்றனர். இந்த காலக் காட்டத்தில் தான் ஆரிய வம்சாவளியினர் தங்களுக்கென்று ஒரு மதமாக 'சனாத்தான் தர்மம்'(இறைவன் கட்டளை) என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அது காலப் போக்கில் ஹிந்துயிசமாக மாறிவிட்டது. ஆரியரிகள் ஒன்று கூடும் இடத்திற்கு 'சிந்துஸ்' என்று அழைத்தார்கள். ஆரம்பத்தில் 'ஒரு கடவுள்' என்ற கொள்கையினை கொண்டாலும் பிற்காலங்களில் பல உருவ வழிபாடுகள் உள்ளே புகுத்தப் பட்டது. 


நான்கு வேதங்களை தவிர்த்து  ஹிந்து மத இலக்கிய படைப்புகளான உபநிஷம், புராணம், மஹா பாரதம், ராமாயணம் இவையெல்லாம் கி.பி. 6வது நூற்றாண்டினைச் சார்ந்ததாகும். மகாவீரரும், கௌதம புத்தரும் இந்த காலக் கட்டத்தில் தான் 'சனாத்தான் தர்மத்திலிருந்து' பிரிந்து ஜைன, புத்த மதங்களை நிறுவினர்.
இந்தியாவின் வளத்தினை பற்றி கேள்விப்பட்ட பாரசீக சாம்ராஜ்ய சக்கரவர்த்தி 'சைரஸ்' கி.மு. 530ல் ஆக்கிரமிப்பு தொடங்க முதலாம் டாரஸ் ஆட்சி காலத்தில் பாரசீக சாம்ராஜ்யம் வட இந்தியாவில் ஆட்சி கொண்டது. அதன் பின்பு தான் கிரேக்க சக்கரவர்த்தி அலைக்ஸாண்டார் கி.மு.327ல் தனது ஆதிக்கத்தினை வட இந்தியாவில் செலுத்தினார்.
முதல் முதலில் முஸ்லிம் ஆதிக்கம் கி.பி. 712ல் முகமது பின் காசிம் காலத்தில் இன்றைய பாகிஸ்தானில் நிலை நிறுத்தப் பட்டது. அதன் பின்னர் பல குறுநில மன்னர் ஆட்சிகளாக, பல்வேறு மொழி, இன, மத மக்களை ஒருங்கிணைத்து முகலாய சாம்ராஜ்ய இந்தியா முழுவதும் நிருவப் பட்டது. அதன் பின்பு வந்த போர்த்துகீசியர், பிரெஞ் நாட்டினர் ஒரு சில பகுதிகளை பிடித்து ஆட்சி செலுத்தினர். இங்கிலாந்தில் உருவான  தொழில் புரட்சியின் காரணமாக நவீன ஆயுதங்களைக் கொண்டு பிரிட்டிஷ் ஆட்சி இந்தியா முழுவதும் நிலை நிறுத்தப் பட்டது ஒரு வரலாறு என்று உங்களுக்குத் தெரியும்.
ஆனால் சில இந்திய வரலாற்று மற்றும் மேற்கத்திய ஆசிரியர்கள் இந்திய நாட்டு நாகரியமே வெளி உலகிற்கு  தெரியக் கூடாது என்று பல நூல்களை கறுப்புக் கண்ணாடி பார்வையுடன் எழுதியுள்ளது வரலாற்று மாணவர்களுக்குத் தெரியும். சிவகங்கை மாவட்டம் கீழடி கிராம ஆராய்ச்சி இந்திய பழமை நாகரிகம் பறைசாற்றுகிறது. அதனை வெளிக்கொணராமல் பார்த்துக் கொள்ளும் முயற்சியும் எடுக்கப் பட்டதும் உங்களுக்குத் தெரியும். முதலில் ஆராய்ச்சி அதிகாரிகள் மாற்றப் பட்டனர். இப்போது அந்த கிராம மக்களில் சிலரைப் பிடித்து ஆராய்ச்சிக்கு எதிராக குரலும் எழுப்பியுள்ளதினை ஊடகங்கள் வாயிலாக நீங்கள் படித்து இருப்பீர்கள். ஆதிகால இந்திய திராவிட மக்கள் வட இந்தியாவிலிருந்து விரட்டபட்டதாக அவர்கள் தெற்கே தஞ்சம் புகுந்ததாகவும் கூறப் படுகிறது. தற்போதைய அமெரிக்காவினை செவ்விந்திய மக்கள் ஆட்சி செய்தனர். அவர்களை ஸ்பெயின், பிரிட்டிஷ் ஆட்சியினர் மலை பகுதிகளுக்கு அனுப்பி விட்டதும். ஒரு காலத்தில் ஸ்பெயின் நாட்டினவருக்கும், பிரிட்டிஷ் மக்களுக்கும் போர் ஏற்பட்ட பின்பு ஏக அமெரிக்காவை பிரிட்டிஷ் ஆட்சி கோலோச்சியது. அதன் அடையாளமான கோட்டைகள் இன்னும் அங்கே உள்ளது.

நான் மேலே சுட்டிக் காட்டிய வரலாற்று செய்திகளை மாற்றியமைத்து 'ஹிந்துக்கள்' தான் இந்திய துணைக்கண்டத்தின் ஆதிகால மக்கள் என்பதினை நிரூபிக்கும் விதமாக ரகசியமாக ஹிந்துத்துவ கொள்கைகைக் கொண்ட வரலாற்று ஆசிரியர்களைக்கொண்ட 14 உறுப்பினர் கொண்ட ஒரு குழு அமைத்து, அதன் தலைவராக 'பழமை இந்திய வரலாற்று' பேராசிரியர் கே.என் டிக்சித் தலைவராக நியமனம் செய்து அதற்கான முதல் கூட்டமும் நடத்தப் பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதனைப் பற்றி நிருபர்கள் கேட்டபோது மைய அமைச்சர் மகேஷ் சர்மா ஒத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், '12,000 ஆண்டுகளுக்கு முன்பே ஹிந்து கலாட்சாரம் கோலோச்சி இந்தியாவில் இருந்ததாக கூறுவது' வரலாற்று உண்மைகளை சோற்றில் முழு பூசணிக்காயினை' மறைப்பது போன்று உங்களுக்குத் தெரியவில்லையா?
லக்னோவினைச் சார்ந்த ரொமிலா தாப்பர் என்ற பெண் இந்திய வரலாற்று ஆசிரியர் தனக்கு இரண்டு தடவை பத்ம பூஷன் விருது வழங்க ஒப்புமை கேட்டதில்லை ஏற்க மறுத்தவர், உலக வரலாற்று ஆசிரியர்களால் மிகவும் மதிக்கப் பட்டவர் நடு நிலையானவர்.  ம்  ஆண்டு பி.ஜே.பி  அரசு மைய ஆட்சியில் இருந்தபோது, பள்ளி மற்றும் கல்லூரி பாட புத்தகங்களில் ஒரு மாற்றம் கொண்டு வந்தனர். அது என்னவெனில் ஆதிகால ஹிந்து மக்கள் மாட்டு உணவை உட்கொண்டதில்லை என்பது தான். ஆனால் ரொமிலா ஹிந்து மதத்தினர் ஆனாலும் ஆதாரங்களுடன் அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டார். அத்தோடு இந்திய மக்களை மதத்தின் பெயரால் முஸ்லிம்கள் மற்றும் ஹிந்துக்கள் என்று பிரிக்கவேண்டாம் என்று கடுமையாக சாடினார்.அவர் ஏன் அவ்வாறு சொன்னார் என்பதிற்காக அமெரிக்கா 'லைப் ராகி காங்கிரஸ் கிளப் சேர்' என்ற சிறப்பு இருக்கைக்கு பரிந்துரைக்கப் பட்டவுடன் ஹிந்து அமைப்புகளால் அதற்கு எதிர்ப்பு கணை தொடுத்து அது சம்பந்தமாக துறைக்கும் கடிதம் எழுதினார்கள் என்றால் பாருங்களேன். அவர்கள் மனதில் உள்ள வெறுப்பினை மற்றும் சதித் திட்டத்தை.
அது மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி புத்தகள் மாற்றவும் முயற்சி கொண்டுள்ளதாக கூறியுள்ளார். தற்போதைய மைய அரசு ஹிந்துத்துவா கொள்கைகளைக் கொண்ட மாநில ஆளுநர்களையும், பல்கலைக் கழக துணை வேந்தர்களையும் நியமனம் செய்திருப்பது உங்களுக்குத் தெரியும். தமிழகம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் போன்று அன்றாட அலுவல்களில் தலையிடுவதும் நீங்கள் அறிந்ததே. அந்த முயற்சிக்கு மகுடம் சூடுவதுபோல் ஆர்.ஆர்.எஸ். முக்கிய பிரமுகர் மன்மோகன் வைத்யா, 'இந்தியாவின் கலர் காவி நிறம் தான், அதனை நிரூபிக்க இந்திய வரலாறு மாற்றியமைக்கப் படும்' என்று கூறியிருப்பது அதிர்ச்சியான செய்திதானே! இந்தியாவினை ஜனநாயக நாடாக உள்ளத்தினை அமெரிக்கா போன்று குடியரசாக மாற்றி மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே தேர்தல் நடத்தி இந்த திட்டத்தினை நிறைவேற்ற போவதாகவும் கூறப் படுகிறது.
இந்த முயற்சிக்குப் பின்பு இந்திய நாடு, 'ஹிந்துஸ்தானாகவும்' முஸ்லிம்களும், கிருத்துவர்களும் இரண்டாம் தர குடி மக்களாக மாற்றி ஒரு புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப் பட்டாலும் ஆச்சிரியப் படவேண்டாம்.  எனது தலைப்பில் சேற்றில் பூசணிக்காய் மறைக்க வேண்டாம் என்று கூறினேன். ஹிந்துஸ்தான் என மாற்றும் முயற்சியினைத் தான் சேறு என்று குறிப்பிட்டேன். ஆகவே  இந்திய வரலாற்றினை மத அடிப்படையில் பொய்யாக மாற்றி அமைக்கும் மைய அரசின் முயற்சியினை, சமூக ஆர்வலர்களும், வரலாறு படித்த மாணவர்களும், பொது சிந்தனையாளர்களும் குரல் எழுப்ப வேண்டும் என்றால்  சரிதானே!


Thursday, 15 February, 2018

விஞ்ஞான மனித படைப்பின் தத்துவமும்-குரானின் வாசகமும்
(ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ), பிஎச்.டி)
‘களி மண்ணிலிருந்து மனிதப் படைப்பினை துவங்கினான்' என்றது அல்குரான் 1430 ஆண்டுகளுக்கு முன்பு(32:7)
'மனிதனை மண்ணிலிருந்து, பின்னர் விந்திலிருந்து படைத்தான் ஏக அல்லாஹ்' அல் குரான்(35:11)
'அவனை நாம் விந்திலிருந்து படைத்தோம் என்பதினை மனிதன் அறிய வேண்டாமா' என்றும் சொல்லியுள்ளது குரானில்(36:77)
காலனி ஆதிக்க ஏகாதிபத்திய இங்கிலாந்தில் தொழில் புரட்சி காலத்தில் உதித்த விஞ்ஞானி சார்லஸ் டார்வின்(  1809-1882)   மனிதப் படைப்பினைப் பற்றி தீவிரமாக ஆராய்ந்து எழுதப்  பட்ட புத்தகம், 'மனிதப் படைப்பின் ஆரம்பம்'( on the origin of species)    
அதனில், 'குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்' என்று நம்பும்படி எழுதியுள்ளார்.
அதற்கு அவர் உதாரணமாக காட்டியது சிம்பனி என்ற மனிதக் குரங்கு மனிதனைப் போல நடவடிக்கைகளில் இருப்பதாலும், சில ஆப்பிரிக்க மக்கள் குரங்குகள் போன்ற முக அமைப்பினையும் கொண்டதாலும் தான். ஆனால் அவரால் ஏன் அந்த மனிதக் குரங்குகளால் பேச முடிவதில்லை என்பதையோ அல்லது இரண்டு கால்கள் கொண்டு மனிதனைப்போல நடமாட  முடியவில்லை என்பதனையே விளக்க முடியவில்லை.
ஆங்கிலேய பகுத்தறிவாளி டாக்கின்ஸ் பித்திலி, 'நாம் மனிதக் குரங்குகள் போல தோற்றம் இருந்தாலும், நாம் மனிதக் குரங்குகளின் சந்ததிகள் என்று ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை' என்கிறார்.
சமீபத்தில் மத்திய மந்திரி சாத்தியபால் சிங், 'சார்லஸ் டார்வினின் கண்டு பிடிப்பு முற்றிலுமாக விஞ்ஞானத்திற்கு மாறுபட்டது' என்று கூறியதோடு மட்டுமல்லாமல், 'அவ்வாறு பள்ளி. கல்லூரி பாடப் புத்தகங்களில் கூறப் பட்டவைகளை நீக்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார்.
ஆகவே மனிதன் எப்போதுமே மனிதனாகவே இருப்பான் என்று ஆணித்தரமாக கூறுகின்றது அல் குரான் ஒன்றே. மேலும் ஆதம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களை எப்படி படைத்தான் மற்றும் அவர்களிடமிருந்து எப்படி மனித சமுதாயத்தினை உருவாக்கினான் என்று மேற்கூறிய ஆயத்துகளிடமிருந்து தெள்ளத் தெளிவாக கூறப் பட்டுள்ளது.
மனிதன் குரங்கிலிருந்து வந்தவனென்றால் எங்கே அவனது குரங்கு வால்கள், எப்போது மறைந்து விட்டது, ஏன் மறைந்து விட்டது என்றாவது விஞ்ஞான ஆராய்ச்சியின் போது டார்வின் எண்ணியிருக்க வேண்டாமா? மனிதனின் முதுகு தண்டு வட கடைசிப் பகுதி வால் போல் இருந்தாலும் அது எப்போது சிறுத்து விட்டது என்று எண்ண வேண்டாமா?  ஒரு மனிதன் இறந்து அவன் மண்ணோடு மண்ணாக மாக்கிப் போனாலும் அல்லது தீயிட்டுக் கொளுத்தினாலும் அழிக்க முடியாது என்பது முதுகு தண்டு வட்டத்தின் வால் போன்ற பகுதி தான். ஆகவே அது ஒரு காலும் வளர்ந்ததும் இல்லை, மனிதன் இறந்து விட்டதும் மறைந்து விட்டதுமில்லை.
குழந்தை இல்லாதவர்களுக்கு நவீன முறையில் கருத்தரிக்க முயற்சி செய்பவர்கள் கூட ஆண் விந்து மற்றும் பெண் கரு முட்டைகள் இணைத்துத் தான் கருத்தரிக்க செய்கிறார்கள். அவைகள் இல்லாமல் கருத்தரிக்க முயற்சிகள் விஞ்ஞானிகள் மேற்கொண்டு இருந்தாலும் அது ஒரு மனித அடையாளங்கள் கொண்டு அமைந்திருக்குமா(டி.என். ஏ) என்று சந்தேகமே!
சத்துக் குறைவான விந்துகள் குழந்தை தறிப்பதிற்கு  தடையாக இருக்கும் என்று விஞ்ஞானப் பூர்வமாக சொல்கிறது. அதனைத் தான் குரானிலே சற்று அழுத்தமாக, 'இன்றும் அவன் தான் மனிதனை (ஒரு துளி) நீரிலிருந்து படைத்தான்(25:54) கூறுகிறது.அல் குரான்.
என்னதான் விஞ்ஞான காலங்களில் வாழும் நாம் மனிதனைப் போன்று இயங்கக் கூடிய ரோபோக்கர்களை உருவாக்கினாலும், அல்லாஹ் அருளிய மனிதப் படைப்புப் போன்று அவைகளால் பகுத்தறிந்து தனியே செயலாற்ற முடியுமா என்றால் அது முடியாதுவே ஆகும். ஏனென்றால் அந்த ரோபோக்களை இயக்கக் கூடிய ஒரு சக்கி வேண்டும். மனிதப் படைப்பினுக்கே உரித்தாகுவதான அன்பு,ஆசை, பண்பு, பாசம், நேசம், பற்று போன்ற எண்ணற்ற அறிவு சான்ற செயல்களை எந்த நவீன ரோபோக்களோ, அல்லது எந்த விலங்குகளோ செயலாற்ற முடியாது என்பது தான் உண்மை.

மனிதனை தோற்றுவித்த விஞ்ஞானிகளுக்கெல்லாம் சிறந்த விஞ்ஞானியாக எல்லாம் வல்ல அல்லாஹ் நீக்கமற நிறைந்து இன்றும் என்றும் நிறைந்து நிற்பான் என்பது தான் திருக்குரானில் வேத வாக்கும், எம்பெருமானார்(ஸல்) அவர்களின் வாக்கும் ஆகும். அதனை எந்த விஞ்ஞானியும் வெல்ல முடியாது என்பது தான் உண்மை என்பதினை உறக்கச் சொல்வோமா நமது தொழுகையின் மூலம், நன்றிக் கடனாக!