Friday 23 December, 2011

ஏன் இந்த குரோத மெயில் சகோதரரே?

சென்ற 2010 ஜூலை மாதம், 'சகோதர யுத்தம் சமுதாயத்திற்கு தீங்கு' என்ற கட்டுரையும், அதே வருடம் நோன்பு நேரத்தில், 'தஞ்சை மாவட்டத்தில் திருவிடைசேரி கிராமத்தில் நடந்த வன்முறை சம்பந்தமாக, 'கண்கள் குலமாகுதம்மா சகோதர யுத்தம் கண்டு' என்ற கட்டுரையும் மின் அஞ்சலில் வெளியிட்டும், சமுதாய ஊடகங்களிலும் வெளி வந்தன பலர் அறிந்திரிப்பீர்கள்

முபெல்லாம் கதைகள், கட்டுரைகளைப் பத்திரிக்கைகளிலும், புத்தகங்களிலும் காசு கொடுத்து வாங்கிப் படிப்போம். தற்போது அசூர வேகத்தில் சுழலும் மின்சார உலகில் பல்வேறு அலுவல்களுக்கிடையே
சில நிமிடங்களிலேயே பல்வேறு நாடுகளிலிருந்து நண்பர்கள்,
உறவினர்கள், உடன் பிறந்தோர், அறிவு ஜீவிகள், மார்க்க அறிஞர்கள் போன்றோர்களிடம் இருந்து செய்திகளைப்
பெற மின் அஞ்சல் மிக இன்றியமையானதாக ஆகி விட்டது. ஆனால் அதேமின் அஞ்சலை தங்களது சொந்த விருப்பு, வெறுப்பினை தரம் தாழ்ந்து கொட்டித் தீர்ப்பது சரிதானா என்பதே என் கேள்வியே?

20.12.2011 அன்று மின் அஞ்சலை திறந்து ஒவ்வொன்றாக படித்துக் கொண்டு வந்தேன். அதில் புனித குரான் தமிழ் விளக்கம்,ஹதீசுகள், தவா நடவடிக்கைகள், நோயிற்றிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு மருத்துவ உதவி, துவா கேட்டல், பல்வேறு
மவுத்து செய்திகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கான விளம்பரங்கள், வெளி நாட்டில் வாழும் ஈமான்தார் ஆக்கப் பூர்வமான செயல்கள்
போன்றன வந்திருந்தது கண்டு, ஆகா மின் அஞ்சல் எந்த விதத்தில் நமது சகோதரர்களை இணைக்கும்
பாலமாக அமைந்துள்ளது என்று எண்ணி மகிழ்ந்து இருக்கும்
வேலையில்,அனைவருக்கும்அனுப்பட்டஒரு மின்அஞ்சல் மட்டும்
என்னை
திடுக்கிடச் செய்தது. அது என்ன என்று நீங்கள் அறிய உங்களுக்கு
ஆவல் இருப்பது நியாயமே!
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் கடைப் பிடிக்க தமிழ் இலக்கியம் கூறுவது, 'இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகும்'
ஏன் ரசூலல்லாவும் அவர்களது தோழர்களும் எந்த நேரத்திலும் தரம் தாழ்ந்த வார்த்தைகளை உபயோகித்ததில்லையே!
ஆனால் ரசூலல்லா வழி வந்த நாம் மட்டும் நல்ல சொற்கள் இருக்க நாறச் சொற்களை மின் அஞ்சலில் உபயோகிக்கலாமா
என்பதே என் கேள்வியே!
அதுவும் எப்படிப் பட்ட கடுஞ் சொற்கள் என்றால் ஒரு இயக்கத்தினர் அடுத்த இயக்கத்தினவரினை காதில் கேட்க முடியாத
சொற்களைக் கொண்டு வசை பாடி இருந்தனர். அது என்ன காதில் கேட்க முடியாத சொற்கள் என்று கேட்கலாம். வேற்று இயக்கத்தின் தொண்டர் ஒருவரின் மனைவியினை அடுத்தவருக்கு தாரை வார்த்துக் கொடுத்ததாகவும், அந்த நபர் அடுத்தவருடன் ஹோமோ செக்ஸ்சில் ஈடுபட்டதாகவும்,
அந்த இயக்கத்தினர் காதல் களியாட்டங்களில் ஈடு படுவதாகவும்,
மின்அஞ்சல் திருட்டுச் செய்வதாகவும் மனம் போன போக்கில்
சொல்லப் பட்டிருந்தது.
கல்லூரி மாணவனாக இருந்திருந்தால், 'மஞ்சள் பத்திரிக்கை மற்றும் கிளு கிளுப் பூட்டும் செய்திகள்
படிபதிற்கு மிகவும் சுவையாக இருந்திருக்கும்.
ஆனால் வயது முதிர்ச்சியடைந்து, 'வீடு போ போ என்றும் காடு வா வா' என்றும் சொல்லும் நிலையில் இருக்கும் என் போன்றவர்களும், அறிவில் முதிர்ச்சியடைந்த பல்வேறு நாடுகளில் வேலை பார்க்கும் இளைஞர் உங்களுக்கும் அதிர்ச்சியாக இருந்ததில் நியாயம் இருக்கத் தான் செய்திருக்கும்!
சமுதாய இயக்கங்கள் அனைத்தும் ஏக அல்லாவினையும் அவனுடைய இறுதித் தூதரையும் ஏற்றுக் கொண்டு ஒரே கோடையில் வாழ்பவர் தானே!
சமுதாய இளைஞர் பட்டாளத்தினை வழி நடத்த விரும்பும் இயக்கங்கள் தாங்கள் கடைப் பிடிக்கும் வழிகள் பலவாக இருக்கலாம். ஆனால் வெறுமையில் ஒற்றுமை உள்ள இயக்கமாக ஏன் மாறக்கூடாது என்பதே என் கேள்வியே!
ஏக இறைவன் அஹிலத்தினை 'பிக் கோலுசன்' என்ற செயல் மூலம் பல கிரகங்கள் படைத்து அவைகள் அத்தனையும் அதன் அதன் பாதையில்
சுழல விடவில்லையா என்ன? பின் ஏன் நாமும் நமது
இயக்கங்களிடையே உள்ள வேற்றுமை மறந்து அவரவர்
கொள்கையில்
இளைஞர்களை வழி நடத்திச் செல்லக்கூடாது?
அந்தரத்தில் உள்ள சில விசயங்களை ஏன் அரங்கத்திற்கு கொண்டு வர வேண்டும்? பிறரைப் பற்றி உண்மை தெரிந்தால் அதனை கூட்டம் போட்டு
பறை சாற்றுவது நல்லது தானா? பிறரைப் பற்றி புறம் பேசுவது மனித மாமிசத்தினை தின்பது போன்றது என்று ஹதிசுகளில் சொல்லவில்லையா?
பின் ஏன் அதுபோன்ற மின் அஞ்சலை எல்லோருக்கும் அனுப்ப வேண்டும்?
உலகில் குறை இல்லா மனிதர் உண்டா? கடைக் கண் பார்வையில் கூட கற்பிற்கு களங்கம் விளைவிற்காதவர் ஊர் முச்சந்தியில் உள்ள
பானையில் பாலைக் கொட்டுங்கள் என்று சொல்லி ஒருவர் கூட ஊற்றவில்லை என்ற கதையினை அனைவரும் படித்திருகின்றோம்., மாசில்லா தங்கம் உண்டா? அல்லது துருப் பிடிக்கா ஆயுதம் உள்ள ஆர்மேரி உண்டா?
ஆகவே சமுதாய இயக்கங்களிடையே உள்ள குறைகளை பூதக் கண்ணாடிப் போட்டு பெரிதாக்காமல் சமுதாயதினவர்க்கு நாம் என்னென்ன நல்லது
செய்யலாம் என்று சிந்தனை செய்து அதனை முயற்சிக்கலாம்.
இந்த நேரத்தில் சமுதாயத்தினர் ஒற்றுமை பற்றி தன்னல மற்ற தலைவர் காயிதே மில்லத் அவர்கள் 5.5.1970 அலிகார் பொதுக் கூட்டத்தில்
பேசிய உரைகள் உங்கள் முன் வைக்கின்றேன், 'நாம் சிறுபான்மை மக்களாக வாழ்கிறோம். நமக்குள் ஒற்றுமை மிக மிக அவசியம்.
பெரும்பான்மை சமுதாயம் எப்படியும் பிரிந்து இருக்கலாம். ஆனால் சிறுபான்மையினர் ஒன்று சேர்ந்து வாழ்வது குரானின் கட்டளையாகும்' என்றார்கள்.
சிறுபான்மையினர் ஒற்றுமையுடன் வாழ்ந்தபோது அதிக பலத்துடன் இருந்தனர். ஆனால் வேற்றுமையுடன் இருந்ததால் சிறுபான்மையினரை கால் தூசுக்கு
மதிப்பில்லாதவர் என பெரும்பான்மையினத்தவர் சிலர் நினைக்கின்றனர்.
உதாரணத்திற்கு, லோக் பால் மசோதாவில் 50 சதவீத கோட்டா கொண்டு வருவதினை திண்ணைப் பேச்சு அண்ணாச்சி ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் பாருங்களேன்!
அது மட்டுமா தேசிய சிறுபான்மை கமிஷன் மைனாரிட்டி மக்களுக்கு கோட்டா வழங்க வேண்டும் என்ற சிபாரிசின் பேரில் மத்திய அரசு மைனோரிட்டி சட்டம் 1992 பிரிவு 2(சி) யில் உள்ளபடி 4.5 சதவீத கோட்டா
வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இது மிஸ்ரா கமிஷன் பரிந்துரையான 10 சதவீதத்திற்கும் குறைவானதானாலும் அதனைக் கூட பி.ஜே.பி
சட்டத்திற்கு புறம்பானது என
சொல்லி ஆர்பாட்டம் செய்கிறது.
அது மட்டுமா? ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகத் சொல்கிறார் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடத்தில் நிச்சியமாக தாவா நிலம் அத்தனையிலும் பெரிய
ராமர் கோவில் அயோத்தில் கட்டவேண்டும் என்கிறார்.அதற்குத்
தான் அவர்களின் சாதகமான ஆட்சி மத்தியில் வேண்டும். அதற்கு முன்னோடிதான் திண்ணைப் பேச்சு அண்ணாச்சியின் ஆர்ப்பாட்டம் என்றால் மிகையாகாது.
ஆகவே சமுதாய இயக்கங்கள் தங்களுக்குள் சுயக் கட்டுப் பாட்டுகளை ஏற்படுத்திக் கொண்டு தங்களுக்குள் தரம் தாழ்ந்து சண்டையிடாமல், அத்துடன் பொது நலன்
சமுதாய மக்களை வழிப் படுத்தினால் நலமாக இருக்கும்.
2) சமுதயத்திற்கு மாறுதலாக அடுத்தவர் நடந்தார் என்றால் அந்த
நபருக்கு தனிப் பட்ட முறையில் மின் அஞ்சல் அல்லது தபால்
எழுதலாம். அல்லது அவர் நடவடிக்கையினை அந்த இயக்க முன்னோடிகளின்
கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.
3) அரசு அலுவலங்களிலும் நமது முஸ்லிம் கல்வி தொழில் அமைப்புகளிலும் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் படுகிறதா என்று கவனித்து அவைகள்
கிடைக்க இணைத்து நடவடிக்கை எடுக்கலாம்.
4) பல்வேறு நகரங்களில் கிராமங்களில் சமுதாயத்தினவற்கு ஏற்படும் இன்னல்களை அனைவரும் இனைந்து தட்டிக் கேட்கலாம்.
அதற்கான கிரிடிட் தங்கள் இயக்கம்தான் என்று பறைசாற்றி அடுத்த இயக்கங்கலினை அனாவசியமாக வெறுப்பேற்றத் தேவையில்லை.
5) நமது நாடு ஜனநாயக நாடு. ஆகவே மக்கள் பிரதிநிதிகளுக்குத் தான் முக்கியம் கொடுக்கப் படும். ஆகவே இயக்கங்கள் தேர்தல் நேரத்தில் பொது கொள்கையுடன் இணைந்து சமுதாயம் சார்பாக பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கலாம்.
6) புராதான வழிபாட்டு தளமான பாப்ரி மஸ்ஜிதை இருந்த இடத்திலே கட்டும் வரை தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும்.
சமீபத்தில் மின் அஞ்சல்களையும், தொலை பெசிகளையும் மத்திய உளவு நிறுவனங்கள் முன் அனுமதியின்றி ஆறு மாத காலத்திற்கு
கண்காணிக்கலாம் என்று அனுமதிக்கப்
பட்டுள்ளது. உங்களுடைய மின் அஞ்சல்களை வேற்று மத உளவு
அமைப்புகளும் கண்காணிக்கின்றன. ஆகவே மின் அஞ்சல்களை அனுப்புவதில் எல்லை மீறாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும்.
தனிப் பட்டவர் உரிமை மின் அஞ்சலில் மீறினால் 'சைபர் கிரைம்' சட்டத்தின் மூலம் தண்டிக்கப் பட வாய்ப்புண்டு என்று சுட்டிக் காட்டி
சமுதாய இயக்கங்களிடையே
உள்ள குரோதத்தினை அடியே ஒழிப்போமா!

Friday 9 December, 2011

சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை!

பணம், பதவி, புகழ் இருந்தால் சுகத்தோடு வாழலாம் என்ற தவறான எண்ணம் நம்மிடையே இருக்கிறது. ஆனால் பணம், புகழ், பதவி இருந்தால் மட்டும் வாழ்க்கைக்குப் போதுமானதல்ல. ஒரு மனிதன் தன் நிலை தவறாது, தனித்தன்மையுடனும், சிந்திக்கும் ஆற்றலுடன் இருந்தால் மட்டுமே சிறப்பாக வாழ முடியும். அதற்கு உதாரணமாக ஒரு பட்டு வியாபாரியும் அவனுடைய சக நான்கு வியாபாரிகளின் கதையினை
இங்கே சொல்லுவதுப் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். ஒரு பட்டு வியாபாரி நல்ல தொழில் செய்து நாலு காசு சம்பாதித்தார். ஆனால் அவர் போல தனது நான்கு வியாபாரிகளுக்கும் வருமானமில்லை. அந்த பட்டு வியாபாரி மீது பொறாமைப் பட்ட மற்ற வியாபாரிகள் அவரை குழப்பத்தில் ஆழ்த்த முடிவு செய்தார்கள். ஒரு நாள் காலை பட்டு வியாபாரி தனது வீட்டிலிருந்து வெள்ளை பைஜாமா மற்றும் குர்த்தா அணிந்தும் தலையில் வெள்ளைத் தொப்பியுடனும் புறப் பட்டார் அவர் கடைக்கு. வழியில் அவர் மீது பொறாமைப் பட்ட சக வியாபாரி முதாலமவர் அவரை வழிமறித்து உங்கள் ஆடை பிரமாதம் ஆனால் சிகப்புத் தொப்பிதான் சரியில்லை என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார். பாட்டு வியாபாரிக்கு தொப்பியின் நிறம் பற்றி சந்தேகம் வந்து எடுத்துப் பார்த்து உறுதி செய்து விட்டு கொஞ்ச தூரம் நகன்றார். இரண்டாவது வியாபாரி அவரைப் பார்த்து உங்கள் உடை நேர்த்தியாக உள்ளது ஆனால் பச்சைத் தொப்பிதான் சரியில்லை என்று சொல்லி விட்டுச் சென்றார். மறுபடியும் பட்டு வியாபாரி தொப்பியினை எடுத்துப் பார்த்தார். அவர் சொன்னது சரியில்லை என்று தெரிந்து தன் நடையினைக் கட்டினார். மூன்றாம் வியாபாரி அவரைப் பார்த்து உங்கள் உடை அழகாக உள்ளது ஆனால் மஞ்சள் தொப்பிதான் சரியில்லை என்றார். பட்டு வியாபாரி குழம்பி கடைப் பக்கத்தில் சென்றதும் நான்காம் வியாபாரி அவரை பார்த்து உங்கள் வெள்ளை டிரஸ் மிகவும் நேர்த்தியாக உள்ளது ஆனால் மஞ்சள் தொப்பிதான் பொருத்தமாக இல்லை என்று
சொன்னாரேப் பார்க்கலாம் தன் தொப்பியினை கீழே தூக்கி எரிந்து விட்டுக் கடைக்குச் சென்று குழம்பிக் கொண்டு இருந்ததால் அன்று வியாபாரம் சரியாக செய்ய முடியவில்லை. அதன் பின்பும் வீட்டுக்கு போன பின்பும் சரியாக சாப்பிடாமல் தன் மனதினை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டார். கடைக்கும் சரியாக போகவில்லை. அவர் வியாபாரம் நொடித்து மற்ற வியாபாரிகளின் வியாபாரம் மிக விமரிசையாக நடந்ததால் அவர்களுக்கு எல்லாம் சந்தோஷம். ஆகவே மனிதன் எப்போதும் சுய சிந்தனையோடும் தன் நிலை தடு மாறாமலும் இருந்தால் சிறப்பாக வாழலாம் என்ற கருத்தினை வலியுறுத்தி எழுதப் பட்டுள்ளது இந்த கட்டுரை.
எதிலும் தனித்தன்மையுடன் விளங்குங்கள் :
ஒரு கருத்தினை இருவர் சொல்லும்போது ஒருவருடைய பேச்சில் சுவை இருக்காது, மற்றொருவர் பேச்சில் கவரும் தன்மை இருக்கும். ஒரு கருத்தருங்கில் ஒரு கருத்தினை இருவர் சொல்லும் விதத்தில் மாறுதலினைப் பார்க்கலாம். ஒருவர் கருத்தை நாம் ஏற்க முடியாது அடுத்தவர் கருத்து ஏற்கும்படி இருக்கும். ஒரு பள்ளிகூடத்தில் இரு ஆசிரியரிடையே வேற்றுமை இருக்கும். ஒரு ஆசிரியரை மாணவர்கள் மொய்ப்பார்கள், இன்னொருவரைப் பார்த்தால் மாணவர் ஒதிங்கிச் செல்வர். வீட்டில் ஒரு தந்தை நுழையும்போது அவருடைய மகன்கள் சிங்கம் புலியினைப் பார்ப்பதுபோல் ஓடி ஓளிவார்கள். இன்னொரு தந்தையினைப் பார்த்தல் பாசத்துடன் குழந்தைகள் வந்து கழுத்தைக் கட்டிக்கொள்ளும். ஆகவே நீங்கள் ஓடி ஓடி உழைப்பதுடன் பாசத்துடனும் இருங்கள். "செல்வத்தினை பெருவதிர்க்காக பாசத்தினை இழந்து விடாதீர்கள்".
அன்புடன் பழகுங்கள்:

நீங்கள் உங்கள் தாயாரின் அன்பு மழையில் நனையும் பொது உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் இருந்திருக்கும். அதே பாசத்தினை நீங்கள் உங்கள் குடும்பத்தில் காட்டினால் நீங்கள் சிறந்த குடும்பத் தலைவனாக கருதப் படுவீர்கள்.
நீங்கள் ஒருவரை ஒரு இடத்தில் பார்க்க நேரிடுகிறது. அந்த ஒரு தடவையிலும் அவர் நேசிக்கும் நபராக இருக்க வேண்டும். வெளியில் அன்புடன் பழகும் நீங்கள் வீட்டில் கடுகடுப்பாக இருக்கக் கூடாது. மின்சார தட்டுப்பாட்டில் கரண்ட் போய் விட்டால் யாரையும் திட்டுவதினை தவிர்த்து மண்ணெண்ணெய் விளக்கினை பொறுத்த தயாராக விட வேண்டும்.
ஏழைகளிடம் அன்புக் காட்டுங்கள்:

"ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்றார் சான்றோர்" ஆனால் சிலர் ஏழைகளைக் கண்டால் காத தூரம் விலகிச் செல்வர். சிலர் ஒரு கூட்டத்தில் ஏழை ஒரு சிரிப்புச் சொனனால் சிரிக்க மாட்டார்கள். அனால் ஒரு பணக்காரர் ஒரு செய்தியினைச் சொனனால் விழுந்து விழுந்து சிரிப்பர். சிலர் ஏழைகள் சிறு தவறு செய்தாலும் பூதக் கண்ணாடி கொண்டு பெரிதாக்குவர். ஆனால் அதே தவறை தன் உற்றார் உறவினர் செய்தால் அமுக்கப் பார்ப்பர். நீங்கள் ஏழையிடம் அன்பு செலுத்தினால் உங்கள் தரம் உயரும் அல்லவா ?
வீட்டுப் பெண்களைக் கண்ணியமாக நடத்துங்கள்:
ஒரு கிராமப் பழமொழியுண்டு. "ஒரு பெண் ஆட்டினைப் புறக்கணித்தால் ஒரு ஆண் ஆட்டின் துணையினை அது நாடும் என்று". இன்று பெண்கள் வழி தவறும் பெரும்பாலான குடும்பங்களில் அவர்களுக்கு அன்பும் பாசமும் பரிவும் கிடைப்பதில்லை என்றக் குற்றச் சாட்டினை சொல்கிறார்கள். வீட்டில் கணவன் மனவியினைப் புறக்கணித்தால் மனைவி தடம் புரள வைப்புக் கொடுதவர்கலாவோமல்லவா? ஆண்கள் கட்டு மஸ்தான உடல்கள் கொண்டவர்கள் தான். ஆனால் பெண்கள் மென்மையான இதயம் கொண்டவர்கள். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் தன் கணவனுடைய வறுமை, அழகின்மை, ஓய்வற்ற வேலை, அல்லது வேலையின்மை ஆகிய கஷ்ட நஷ்ட காலங்களில் உறு துணையாக இருக்கும்போது, ஆண்கள் ஏன் பணமும், புகழும் பெற்றால் பெண்களை கொடுமைப் படுத்துவதும், புறக்கணிப்பதும் எந்த வகையில் நியாயம்? பெண்கள் ஆண்களுக்கு ஆடையாகவும், ஆண்கள் பெண்களுக்கு ஆடையாகவும் இருக்கக் கூடாதா?
குழந்தைகளின் செயல்களுக்கு உங்களின் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள்:

உங்களது குழந்தை வீட்டில் சுட்டி செய்யும்போது, பள்ளியில் சண்டையிட்டு புகார் வரும்போது நீங்கள் அடிக்கப் பாய்வீர்கள். ஆனால் நீங்கள் பள்ளியில் படிக்கும் பொது செய்த சுட்டிகளையும் வீட்டில் பிடித்த அடத்தினையும் எண்ணி சாந்தம் அடையுங்கள். குழந்தை களிமண் போன்றவர்கள். ஒரு குயவன் எவ்வாறு களிமண்ணைப் பிடித்து உருளையில் வைத்துச் சுற்றுகிறானோ அது போன்றுதான் நீங்கள் உங்கள் குழந்தைகளை எவ்வாறு உருவாக நினைக்கின்றீர்களோ அதேபோன்று தான் அவன் உருவாவான்.
மக்கள் மனதினைக் கவரும் விதம்:

மனிதர்கள் ஒரு விதம் ஆனால் மக்கள் மனதினை கவருவது பல விதம்'. ஒரு வியாபாரி தன் பொருளை விற்பனை செய்வதிற்கு பல விதத்தில் விளம்பரம் செய்வார். ஓர் டி.வீ. சானெல் பிரதானமாக்க பல்வேறு நிகழ்ச்சிகளை புகுத்துவார். அதேபோன்றுதான் மனிதர்களின் மனதினைக் கவருவதும் ஒரு கலையென்றால் மிகையாகாது. நீங்கள் ஒரு சபைக்குள் நுழையும்போது தெரிந்த முதலாமவருக்குக் கை கொடுக்கிறீர்கள்.அவர் விருப்பமில்லாமல் கை கொடுக்கிறார். இரண்டாமவருக்கு கை கொடுக்கும்போது அவர் செல் போனில் பேசிக்கொண்டே கை கொடுக்கிறார், மூன்றார்மவர் அடுத்தவரிடம் பேசிக் கொண்டே கை கொடுப்பார். ஆனால் நான்காமவர் உங்களுக்குத் தெரியாத நபராக இருந்தாலும் தனது இருக்கையிலிருந்து எழுந்து உங்களுக்கு கைகொடுத்து நீங்கள் உட்கார இடம் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதில் யார் இடம் பிடிப்பார். உங்களுக்கு அறிமுகமில்லாத நபரினைதான் பிடிக்குமல்லாவா. ஆகவே அடுத்தவர் உள்ளத்தில் இடம் பிடிக்க உங்கள் செல்வத்தாலோ, பதவியாலோ அல்லது அதிகாரத்தாலோ முடியாது. மாறாக அன்பினாலேதான் முடியும். ஒரு செலவந்தர் தனது செல்வத்தின் மூலம் மனைவி, மக்களுக்கு நல்ல உணவினைக் கொடுத்ததின் மூலம் அவர்களுடைய வயிற்றினை நிரப்பலாம். ஆனால் அவர்களை கீழ்த்தரமாக நடத்தினால் அவர்களின் அன்பைப் பெற முடியுமா?
பொருத்தமான விஷயங்கள் தெரிந்து பேசுங்கள்:

பேசும் பொது சரியான தலைப்பினை எடுத்துப் பேசுங்கள். ஒருவரிடம் பேசும்போது அவருக்குப் பொருத்தமான விஷயம் அறிந்து பேசுங்கள்.ஒரு அறிஞரிடம் பேசுவதை போல மனைவியிடம் பேசாதீர்கள். மனைவியிடம் பேசும் தகவல்களை சகோதரிகளிடம் பேசாதீர்கள். இளைஞர்களுக்குச் சொல்ல வேண்டிய கருத்துக்களை வயதானவர்களிடம் சொல்லாதீர்கள். அதேபோல் குழந்தைகளிடம் சிரிப்பான செய்திகள் சொன்னால் அவர்களை சந்தோசப் படுத்தலாம். ஒரு விதவைத் தாய்க்கு நன்கு மகன்கள். நால்வரும் திருமணமாகி தனித்தனியே வசிக்கிறார்கள். வாரத்தில் ஒரு நாள் அவர்கள் வந்து தாயைப் பார்த்துச் செல்வது வழக்கம். மூன்று பேர் தாயைப் பார்க்க வந்த கொஞ்ச நேரத்தில் திரும்பி விடுவார்கள். ஆனால் ஒரு மகன் மட்டும் தாயிடம் வெகு நேரம் பேசிவிட்டுச் செல்வாராம். அதனைக் கவனித்த பக்கத்து வீட்டுக்காரர் ஒரு நாள் அவரை அழைத்து 'ஏன் தம்பி உங்கள் உடன் பிறப்புகளில் நீங்கள் மட்டும் வெகு நேரம் உங்கள் தாயிடம் பேசிக் கொடு உள்ளீர்களே அப்படி என்ன பேசுவீர்கள்' என்றுக் கேட்டார். அதற்கு மகன் 'என் தாய் எங்கள் அப்பாவினை இழந்து தனியே இருக்கிறார். அவர் பேச்சைக் கேட்பதிற்கு யாருமில்லை. ஒவ்வொரு தடவை நான் அவரைப் பார்க்க வரும்போதெல்லாம் புதுப் புது உலக, கிரமாத்தின் மற்றும் குடும்பத்தின் பழங்காலத் தகவல்களைச் சோவார். அதனை நான் காது கொடுத்துக் கேட்டால் அவர் மனது சந்தோசப் படும் அவரும் தந்தையும் எப்படியெல்லாம் சோகங்கள், துக்கங்கள், தழும்புகளினைத் தாங்கிக் கொண்டு எங்களை வளர்த்தார்கள் என்ற விபரத்தினை அறிந்து வியப்படைந்தேன். ஆகவேதான் நாம் அதிக நேரம் அவர் பேச்சினைக் கேட்டு விட்டுச் செல்கிறேன்' என்றார். ஆகவே சிலர் நம்மை மதித்து பேசும் பொது அவரைப் புறக்கணிக்காதீர்கள்.
கலந்துரையாடலில் அன்பாக இருங்கள்:

உங்களில் பலர் நிறுவன மேலாளராக இருப்பீர்கள். அல்லது கல்வி நிலையங்களில் ஆசிரியராக இருப்பீர்கள். உங்களிடம் இருக்கும் பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் அன்பாக இருங்கள். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தினை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும். ஒரு தொழிச்சாலையில் பல்வேறு இடங்களில் வேலைப் பார்க்கும் தொழிலார்களுக்கான ஒரு கருத்தரங்கிற்கு நடத்தினார்கள். அதில் பேசுவதிற்காக மேலாளர் வருமுன் கருத்தரங்கில் உள்ள தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே இரச்ச்சலாக இருந்தது. மேலாளர் உள்ளே நுழைந்ததும் ஒருவரைப் பார்த்து ஏன் இறைந்து பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். வெளியே போங்கள் என்று அனுப்பி விட்டார். அதன் பின்பு ஒவ்வொருவராக அங்கு வந்தவர்களிடம் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் என்றார். தனது பேச்சினைத் துவங்குமுன் அங்கிருந்த தொழிலாளர்களிடம் ஒவ்வொரு தாளிணைக் கொடுத்து தனது பேச்சின் தன்மையினை எவ்வாறு இருந்தது என எழுதுங்கள் என்றார். ஆனால் அந்த தாள்களில் உங்கள் பெயர் இருக்கக் கூடாது என்றார். அதன் பின்பு தனது பேச்சினைத் துவங்கி முடித்தார். தான் கொடுத்த தாள்களில் கருத்துக்களை எழுதித் தாங்கள் என்றார். அதன் பின்பு அங்கிருந்தவர்களிடம் நீங்கள் இந்தக் கருத்தரங்கிற்கு பல இடங்களில் இருந்து குடும்பத்தினை விட்டு வந்துள்ளீர்கள். நான் வெளியே அனுப்பிய நபர் மட்டும் ஏன் வெளியே நிற்க வேண்டும் ஆகவே அவரை உள்ளே அழைக்கலாம் என்று அவரை அழைத்து அறிவுரை சொல்லி உள்ளே உட்கார வைத்து விட்டு தனது பேச்சினை மேலும் தொடர்ந்து முடித்தார். இப்போது வேறொரு தாள்களை அவரிகளிடம் கொடுத்து இப்போது தான் ஆற்றிய உரையின் மதிப்பினை எழுதித் தாருங்கள் என்றார். எல்லாத் தொழிலாளியும் பெயர் போடாது எழுதித் தந்தார்கள். அப்போது மேலாளர் தான் ஒரு தொழிலாளரை வெளியே அனுப்பி விட்டு கருத்துக் கேட்ட்தினையும் அதன் பின்பு வெளியே நின்ற தொழிலாளியினை உள்ளே அழைத்து தனது உரைக்க கருத்து வித்தியாசத்தினை தொழிலாளர்களுக்கு படித்துக் காண்பித்தார். முதலில் எழுதிய கருத்துக்களில் தொழிலாளர்கள் பெரும்பாலும் மேலாளரை கொஞ்சம் கூட இரக்கமில்லாதவர் என்றும் ஆனால் மறு கருத்துக்களில் அவர் மனிதாபமானவர் என்றும் எழுதி இருந்தது. அப்போது மேலாளர் சொன்னார் இதேபோன்று தான் நீங்கள் உங்கள் சக தொழிலாளர்களிடமும், வீட்டிலும் மற்றும் வாடிக்கையாளர்களிடமும் அன்பாக பழக வேண்டும் என அறிஉரை சொன்னார்.
மனிதன் பலவிதம், அவர் ஒவ்வொருவரும் ஒரு விதம்:

பூமியில் இருக்கும் தாதுப் பொருள்கள் பல விதமாக இருப்பதுபோல மனிதர்களும் பல விதமாக இருப்பார். அவர்களுடைய குணாதிசயங்களை அறிந்து அவர்களுடன் நட்பினை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு மனிதனிடம் தீய செயல்கள் குறைவாக இருந்து நல்ல செயல்கள் அதிகமாக இருந்தால் நல்ல செயலுக்காக அவருடன் பழகுங்கள். மறைந்த முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த பக்கரி முகம்மது கோவையில் நீதிபதியாக இருந்தபோது நான் டி.எஸ்.பீ யாக இருந்தேன். அவர் ஒரு தீர்ப்பு எழுதுமுன் இரண்டு இரக்காது தொழுது விட்டு தனது தீர்ப்பு நேர்மையாக இருக்க வேண்டும் என்று எழுதுவாகச் சொல்லுவார். அதுபோன்றே உங்களிடம் ஒரு பஞ்சாயத் சம்பந்தமாக ஒரு வழக்கு வந்தால் பசியுடனோ அல்லது தாகத்துடனோ அல்லது கோபத்துடன் இருக்கும்போதோ அல்லது இயற்கை உபாதை ஏற்படும்போதோ தீர்ப்புக் கூறாதீர்கள். மன அமைதியுடன் இருக்கும்போதே எந்த தீர்ப்பும் சொல்ல வேண்டும்.


தீயை தீயால் அணைக்க முற்படாதீர்கள்:

தீயினை தீயால் அணைக்க முற்ப்பட்டால் அது தீயின் வேகத்தினை அதிகரிக்குமல்லவா?
இதற்கு உதாரணமாக இரண்டு ஆசிரியர்களின் வழிமுறைகளின் வேறுபாடுகளைச் சொல்லி விளக்கலாம் என நினைக்கின்றேன். ஒரு ஆசிரியர் தனது வகுப்பில் நுழைந்து மாணவர்களைப் பார்த்து ஆளுக்கு ஒரு பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள் நான் ஒரு பாடம் சம்பந்தமாக உங்களிடம் டெஸ்ட் வைக்கப் போகிறேன் என்றார். மற்ற மாணவர்கள் பேப்பரை எடுத்து எழுத தயாராக இருக்கும்போது ஒரு முரட்டு மாணவன் மட்டும் திடீர் என்று சொன்னால் எப்படி எழுதுவது என்றான். உடனே அந்த ஆசிரியர் அந்த மாணவனை 'மடையா, முட்டாள், நீ மாடு மேய்க்கத தான் லாயக்கு என்று திட்டினார். வெட்கப்பட்ட அந்த மாணவனும் ஆசிரியரை பதிலுக்குத் திட்ட ஆரம்பித்தான். புகார் பள்ளி நிர்வாகத்திற்குப் பொய் அந்த மாணவனுக்கு அபராதம் விதிக்கப் பட்டது. ஆனால் அந்த ஆசிரியர் ஒரு மாணவனிடம் திட்டு வாங்கிய செய்தி காட்டுத் தீபோல் மாணவர் மற்றும் ஆசிரியர்களிடையே பரவி அந்த ஆசிரியரை பள்ளியில் எல்லோரும் ஒரு மாதிரியாக பேச ஆரம்பித்தால் வெட்கப் பட்ட அந்த ஆசிரியர் பள்ளியினை விட்டு வேறு பள்ளிக்குச் சென்று விட்டார். அதே வேலைக்கு இன்னொரு ஆசிரியார் வந்தார். அவரும் ஒரு திடீர் டெஸ்ட் வைத்தார். முரட்டு மாணவனும் முன்பு நடந்ததுபோல் மறுத்தான். ஆனால் ஆசிரியர் உன்னால் எழுத முடியா விட்டால் வகுப்பினை விட்டுப் பொய் விடலாம். விருப்பமுள்ள மாணர்கள் எழுதட்டும் என்றார். எல்லா மாணவர்களும் பேப்பரினை எடுத்து எழுதும் பொது அந்த மாணவனும் வேறு வழியில்லாமல் எழுத ஆரம்பித்தான். ஆகவே ஒரு முரம்பாடான முரண்பட்ட நடத்தையினை தவிர்ப்பது நல்லதல்லவா?
ஒரு கொலையாளி சிறு கோபத்திற்குக் கூட தன் சொந்த பந்தங்களை நண்பர்களை கொலை செய்வார்கள். ஒரு மனிதன் பலசாலி என்பது ஒருவரை தரையில் வீழ்த்துவதில்லை. மாறாக ஒருவடைரு கோபத்தினை அடக்குவதுதான்
நெஞ்சம் திறக்கும் சாவிகள்:

ஒவ்வொரு வீட்டின் கதவிற்கும் ஒரு சாவி உள்ளது. அதேபோன்று மனிதர்களின் மனதினைத் திறக்க அவர்களின் குணாதிசயங்கள் அறிந்தும், அவர்களுடைய பிரச்சனைகள் தீர்க்க வழி செய்வதின் மூலம் அவர்கள் அன்பினைப் பெற முடியும். உதாரனத்திற்க்கு ஒரு மகனுக்கும், தகப்பனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மகனை தந்தை வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லி விட்டார். அதனை அறிந்த அவருடைய நண்பர் தந்தையிடம் சென்று அவர் மகனை வளர்க்க எவ்வாறெல்லாம் பாடுபட்டார் என்பதினையும், அவர் மகன் தற்போது படும் துன்பத்தினையும் அவர் மனதினைத் தொடும் அளவிற்கு எடுத்துச் சொன்னதின் மூலம் அவர் மனம் இலக வைத்து விட்டார். உடனே அவரிடமே சொல்லி மகனை அழைத்து வரச் சொல்லிவிட்டார். .
மனநிலை அறிந்து செயலாற்றுங்கள்:

ஒரு மனிதனுடைய மனநிலை அவனுடைய இன்பம், துன்பம், செல்வம், வறுமை ஆகியவையினைப் பொறுத்தே அமையும். ஒரு மனிதன் ஒரு ஜோக்கினைக் கேட்டால் அவன் சிரிப்பது அவன் மன நிலையினைப் பொறுத்தே அமையும். அவன் வருத்தத்தில் இருந்தால் சிரிக்க மாட்டான். அவன் சந்தோசத்தில் இருந்தால் சிரிப்பான். நாம் மனிதர்களின் இதயங்களுடன் பேச வேண்டுமே ஒழிய அவர்களின் உடல்களிடம் பேசக் கூடாது.

மற்றவர்களின் நலனில் அக்கறைக் காட்டுங்கள்:

ஒரு தந்தைக்கு நான்கு மகன்கள். அவர் வேலைக்குச் சென்று விட்டு களைப்புடன் வீட்டுக்குள் நுழைகிறார். முதல் மகன் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தான். இரண்டாவது மகன் ஹோம் ஓர்க்கு செய்து கொண்டு இருந்தான். மூன்றாமவன் பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். கடைப் பையன் தந்தையுனைப் பார்த்தும் அவரிடம் ஓடி வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டான். இப்போது செல்லுங்கள் தந்தை யார் மீது பிரியமாக இருப்பாரென்று? நீங்கள் அன்பினை யாரிடம் காட்டுகிண்றீர்களோ அதேபோன்று நாம் அவர்களிடமிருந்து அன்பினைத் திரும்பப் பெரமுடுமல்லவா?

உங்களுடைய தகப்பனார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக இருக்கிறார்.அவரை நீங்கள் அருகில் இருந்து கவனித்துக் கொண்டு இருக்கின்றீர்கள். உங்கள் நண்பர் அதனை அறிந்து உங்களுக்குப் போன் செய்து 'நான் உனக்கு அல்லது உன் குடும்பத்திற்கு எதாவது உதவி செய்யவா? என்று கேட்கின்றார். தன் நண்பன் கஷ்ட காலத்தில் உதவ முன் வந்ததினைக் கண்டு நீங்கள் உண்மையிலே சந்தோசப் படுவீர்கல்லவா? இன்னொரு நண்பர் உங்களுக்கு போன் செய்து வார விடுமுறையில் சந்தோசமாக கழிக்க வெளியே செல்லலாமா? எனக் கேட்கின்றார். நீங்கள் உங்கள் தந்தையின் நிலைமையினை சொல்லியும் கூட விடாது உங்களை வற்புறுத்துகிறார் இப்போது சொல்லுங்கள் யார் உங்களின் உண்மையான நண்பர் என்று! ஆகவே நீங்கள் மற்றவர்களின் நலனில் அக்கறை செலுத்துவதின் மூலம் அவர்களின் அன்பினை பெறமுடியும்.

ஒரு சில மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் வெறும் எம்.பி.பி.எஸ். மட்டும் படித்திருப்பார்கள் ஆனால் அவர்களின் மருத்துவ மனைகளில் கூட்டம் அலைமோதும். அனால் சில மேல்படிப்பு படித்த மருத்துவ மனைகளில் ஈ ஓட்டிக்கொண்டு இருப்பார்கள். காரணம் டாக்டர்கள் வைத்தியம் செய்வதில் பாதி குணம் அன்பாக பேசுவதில் பாதி குணம் நோயாளிகள் அடைவரில்லையா?




பெயர்களை ஞாபகபடுத்திக் கொள்ளுங்கள்:

நீங்கள் பலரை ரயில், பஸ், விமானங்கள், நடைப் பயிற்சியின்போது, கூட்டங்களில் பார்த்து பேசி விட்டு அவரி பெயரினை கேட்டுத் தெரிந்து ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். அடுத்த தடவை அவரைப் பார்க்கும்போதோ அல்லது தொலை பேசியில் பேசும்போதோ அவர் பெயரினைச் சொல்லி அழைத்தால் உங்களுடன் அவர் நெருக்கத்தினை ஏற்படுத்திக் கொள்வார்.அதற்காக தேவை இல்லாதவர் பெயரினை ஞாபகப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
விழிப்போடு கவனிப்பவராகவும், மற்றவர்களை பாராட்டுவராகவும் இருங்கள்:

உங்களை மற்றவர் எப்படி நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களோ அதேபோன்று நீங்களும் அடுத்தவர்களை நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பது இயற்கைதானே! உங்களை ஒருவர் சாப்பாட்டுக்காக அழைக்கின்றார். அந்த சாப்பாட்டில் உள்ள குறைகளை பொறுத்துக் கொண்டு நிறைவினை பாராட்டினால் உங்களுக்காக கால் கடுக்க அடுக்களையில் நின்று சமைத்த அவரது தாய்க்கோ, அல்லது மனைவிக்கோ அல்லது சகோதரிக்கோ மனம் சந்தோசப்படுத்துமல்லவா? சில துர்மனங்கொண்ட பூக்களில் கூட நீங்கள் தேந்துளிகளை சேகரிக்கும் தேனீக்களாக இருக்க ஆசைப் படுங்கள். நீங்கள் புண்களில் மொய்க்கும் ஈக்களாக இருக்காதீர்கள்.
ஒரு சொர்ப்பழிவிற்க்குச் செல்லுகிறீர்கள், பேச்சாளர் தான் தயார் செய்து வந்த பேச்சினை ஒரு மணி நேரம் பேசுகிறார். அவர் பேச்சில் நீங்கள் விரும்பினால் அவரை நேரில் பாராட்டுங்கள். அவர் ஒரு மணி நேரம் தயார் செய்த பேச்சின் பலனை அடைவார். அதே நேரத்தில் அளவோடு பாராட்டுங்கள். நீங்கள் ஒரு நோயாளியினைப் பார்க்க மருத்துவமனை செல்லுகிறீர்கள், அவருக்கு மகிழ்ச்சியாக சில வார்த்தைகளை செல்லுவதினை விட்டு விட்டு நீங்கள் மிகவும் மெலிந்து உள்ளீர்கள், உங்கள் முகம் வெளிரியிருக்கிறது என்று சொல்லி அவரை மேலும் கலவரப் படுத்தார்தீர்கள்
குடும்பத்தில் சர்வாதிகாரியாக மாறாதீர்கள்:

ஒரு பள்ளி செல்லும் மாணவன் டி.வி. வீட்டில் பார்த்துக் கொண்டிருப்பான். அதனை மூன்று தகப்பனார்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்றுப் பாப்போம். ஒரு தந்தை அதிகாரத்துடன், 'டி.வியினை ஆப் செய்து விட்டு படத்தினை திருப்பிப் பார் என்று அதிகாரத் தோரணையில் சொல்லுவார்.

இரண்டாவது தந்தை, 'நீ பாடத்தினை திருப்பிப் பார்க்கவிட்டால் உன்னை அடிப்பதோடு, உன் பாக்கெட் செலவிற்கு ஒரு காசு தரமாட்டேன் என மிரட்டுகிறார்.

மூன்றாமவர் சொல்வார், 'பாடத்தினை திருப்பிப் பார்ப்பது உனக்கு உசிதமாக தெரியவில்லையா?' என கேள்வி எழுப்புகிறார். இந்த மூவரில் மூன்றாமவரின் அணுகுமுறை பலனைக் கொடுக்கும். நீங்கள் தேன்கூட்டைக் கலைக்காமல் தேனைப் பருக முயலுங்கள்

அனாவசிய சம்பவங்களில் உங்கள் மூக்கை நுழைக்காதீர்கள் ஒரு சபையில் நீங்கள் இருக்கின்றீர்கள். உங்கள் நண்பருக்கு ஒரு போன் வருகிறது. அவர் பேசி முடித்ததும் அது யார் போன், என்ன விஷயம் என்று கேள்விக்குமேல் கேள்விக் கேட்டுத் துளைக்காதிஈர்கள். ஒரு நபர் அடுத்தவருடைய பொருள்களை அனுமதியில்லாமல் எடுத்து உபயோகிப்பாது நல்ல பண்பாடு இல்லை?
குச்சியினை நடுவில் பிடியுங்கள்

ஒருவரின் குறைகளை சுட்டிக் காட்டும்போது அவரின் நிறைகளைப் புகழ்ந்து குறைகளைச் சொன்னால் அவர் குறைகளைத் திருத்திக் கொள்வார். ஒரு பெட்டிக் கடைக்கு நீங்கள் செல்கிறீர்கள். கடைக்கு முன் வாழைப் பழத் தோல், சிகரெட் அட்டை, பாதி எறிந்த சிகரெட் போன்றவை அசுத்தமாக கிடந்தன. அந்தப் பெட்டிக்கடைக்காரரிடம் உங்கள் கடையில் மிகவும் பிசியாக வியாபாரம் நடக்கிறது. ஆனால் மற்ற கடைகளெல்லாம் அப்படியில்லை என்று சொல்லுங்கள் அவர் மிகவும் சந்தோசப் படுவார். இப்போது அவரிடம் சொல்லுங்கள் உங்கள் வாடிக்கையாளர்கள் கழிவுப் பொருளைப் போடுவதிற்கு ஒரு அட்டைப் பேட்டியினை வைத்தால் நலமாக இருக்கும் என்று சொல்லுங்கள். உடனே உங்கள் பேச்சுக்கு மதிப்பு அளித்து ஒரு அட்டைப் பெட்டி வைத்து விடுவார். ஆகவே குறைகளைச் சொல்ல நேர்ந்தால் நிறைகளை முதலில் சொல்லுங்கள். அவர் திருத்திக் கொள்வார்
தவறினை திருத்த முயலுங்கள்:

மனிதனின் உருவப் படைப்பில் பல வேறுபாடுகளைப் பார்க்கலாம். அதேபோன்று தான் அவர்களின் கருத்தும் வேறுபடும். முடிந்தவரை அடுத்தவரின் தவறினைத் திருத்த முயலுங்கள். அவ்வாறு முடியாவிட்டால் அவரை உங்களின் எதிரியாகக் கருத வேண்டாம். ஆனால் அவரின் தவறை திருத்தும் நம்பிக்கையிலிருந்து தழன்று விடாதீர்கள்.
உங்களை மட்டமாக நினைத்தவர்களிடமும் கருணைக் காட்டுங்கள்:

மென்மையான அணுகுமுறை உங்களுக்குப் பெருமை சேர்க்கும். கடுமையான அணுகுமுறை உங்கள் புகழைக் கெடுக்கும்.
சிலர் பலனை அனுபவிக்க மட்டும் வருவார்கள். ஆனால் உடல்,பொருள் பங்களிப்பில் அவர்கள் ஈடுபடமாட்டார்கள். அதற்காகக அவர்களை கடிந்து கொண்டால் நீங்கள் அவர்களுக்கு விரோதியாக மாறுவீர்கள்.
ஒரு காட்டில் இரு வழிப் போக்கர்கள் ஒரு வார பயணம் கொண்டார்கள். முதல் வழிப் போக்கர் தனது உடமைகளுடன் தனக்கு வேண்டிய உணவு தயாரிக்கத் தேவையான பொருக்களையும் சுமந்து சென்றார். அனால் இரண்டாம் வழிபோக்கர் உணவுப் பொருள் எதனையும் எடுத்துச் செல்லவில்லை. இரண்டு நாட்கள் நடந்த களைப்பில். இருவரும் ஒரு மர நிழலில் தங்கினார்கள். முதலாமவர் தான் கொண்டு வந்த உணவுப் பொருளை வெளியே எடுத்து வைத்தார். இரண்டாமவரிடம் நீங்கள் இதனை சூடு செய்ய சில காய்ந்த விறகுகளை எடுத்து வரச் சொன்னார். அதற்கு இரண்டாம் வழிப் போக்கர் தான் மிகவும் களைப்பாக இருப்பதாகவும், நீங்கள் போய் எடுத்து வாருங்கள் என்றார். முதலாமர் சிரமம் பார்க்காது விறகு சேகரித்து வந்து அடுப்பினை பற்ற வைத்து சமைத்து முடித்தார். அதன் பின்பு இரண்டாமவரிடம் நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் நீங்கள் குடிக்க கொஞ்சம் தண்ணீர் எடுத்து வாருங்கள் என்றார். இரண்டாமவரோ மறுபடியும் களைப்பாக இருக்கிறது என்றார். சிரமம் பார்க்காது முதலாமவர் தண்ணீர் கொண்டுவர கிளம்பி விட்டார். இந்த சந்தர்ப்பத்தினை சாதகமாக எடுத்துக் கொண்ட இரண்டாமவர் சமைத்திருந்ததினை சாப்பிட ஆரம்பித்து விட்டார். முதலாமவர் தண்ணீர் எடுத்து வந்ததினையும் வாங்கிக் குடித்து தூங்கச் சென்று விட்டார். இரண்டாமவர் போன்று வேட்டிகுமேல் சொரியும் கனத்த தோளினைக் கொண்டவர்களை அடித்தா திருத்த முடியும். ஆகவே உங்கள் மென்மையான அணுகுமுறையின் மூலமே திருத்த முடியும்.
அடுத்தவரை குறை சொல்லாதீர்கள்:

ஒருவரின் குறைகளை திரும்ப, திரும்ப குத்திகாட்டாதீர்கள். அதுவும் பலர் முன்னிலையில் குறை சொல்லுவது பிறருக்குப் பிடிக்காது. ஆனால் தனியாகச் சொன்னாள் ஏற்றுக் கொள்வார்கள். ஒரு லாரி டிரைவர் தன் குடும்பத்தினைக் காப்பாற்ற இரவில் பல நாட்கள் கண்விழித்து ஓட்டுகிறார். ஒரு நாள் அவ்வாறு ஓட்டும்போது கண் திறந்து கண் திறப்பதிற்குள் ஒரு சைக்கிள் ஒட்டி மீதி மோதி லாரியும் விபத்துக்குள்ளானது. பாத சாரிகள் காயம் பட்ட சைக்கிள் ஒட்டியினையும் லாரி டிரைவரையும் மருத்துவமனையில் சேர்க்காது லாரி டிரைவரை ஏக வசனத்தில் பேசி விட்டுச் சென்றார்கள். ஒரு சிலர்தான் உதவ முன் வந்தனர். வசை பாடுவர்கள் அந்த லாரி டிரைவர் நிலையில் இருந்து பார்த்தால் அவரை திட்ட மாட்டீர்கள்.
குரங்கு தனக்கு ஒரு புண் வந்தால் அதனை சொரிந்து சொரிந்து பெரிதாக்குமாம். அதேபோன்று அடுத்தவர் குறையினை ஊதி பெரிதாக்காதீர்கள்
அதேபோன்று ஒரு மனிதரைப் பற்றி தவறான செய்தி உங்கள் கவனத்திற்கு வந்தால் அதன் நண்பகத்தன்மையினை ஆராயுங்கள். காதில் விலும் செய்தி எல்லாம் உண்மையில்லை
காலத்திற்கு கட்டுப் படுங்கள்:

நீங்கள் எதிரியின் கையை முருக்க முடியவில்லையா, அவரின் கையைப் பற்றி வாழ்த்து தெரிவியுங்கள்.
உங்கள் மனைவி பல நல்ல குணங்களைக் கொண்டவராக இருக்கலாம். ஆனால் அவரின் சில நடத்தைகள் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அவரின் நல்ல குணங்களுக்காக அவரை நேசியுங்கள். அவரின் மறைவான குறைகளையும் வலை போட்டு அலசாதீர்கள். பழம் பழமொழி ஒன்று இங்கே சொல்லுவதுப் பொருத்தமாக இருக்கும், 'அமுங்கிக் கிடக்கின்ற தூசியினை கிளப்பாதீர்கள். அப்படி தூசி மேலே கிளம்பினாலும் உங்கள் கைகுட்டையால் மூக்கை மூடிக் கொள்ளுங்கள்'.
இன்னொரு பழமொழி, 'உங்களுக்குக் காலம் கட்டுப்படட்டும், அல்லது காலத்திற்கு நீங்கள் கட்டுபடுங்கள்'
குடும்ப பாங்கானவராக இருங்கள்:

ஒரு கணவன் தன் மனைவியிடம், 'பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சீக்கரம் சாப்பாடு செய், அவர்களுக்கு சீருடை அணிந்து விடு, வீட்டினை சுத்தமாக வை, ஆபீஸ் துணிகளை துவை' போன்ற உத்தரவுகளை அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போவார். ஆனால் அவர் மட்டும் ஆபீஸ் முடிந்து சீக்கிரமாக வராமல் நண்பர்களுடன் அரட்டை அடித்து விட்டு வீட்டுக்கு கால தாமதமாக வருவார்.
ஒரு பள்ளி விடுமுறை நாளில் மனைவி, அவரிடம் ஏங்க இன்று பிள்ளைகளுக்கு விடுமுறை தெரியுமுள்ள, நீங்கள் ஆபீஸ் முடிந்ததும் உங்கள் நண்பர்களுடன் வழக்கம்போல் அரட்டை அடித்துவிட்டு லேட்டாக வராதீர்கள் என்றால் அது எனக்குத் தெரியும் என்று ஒரு முறைப்புடன் பார்த்து விட்டுச் செல்லாதீர்கள். குடும்ப பாங்கானவராக இருங்கள்.
சோகத்தில் உங்களை இழந்து விடாதீர்கள்:

ஒருவருடைய தந்தையோ, தாயோ,மனைவியோ, குழந்தையோ இறந்து விட்டால் விழுந்து விழுந்து அழுது அதனால் நீங்கள் மயக்கமுற்று அல்லது நெஞ்சு வலித்து அதனால் ஏற்கனவே துக்கத்தில் இருக்கும் வீட்டில் மேலும் சோகத்தினை ஏற்படுத்தாதீர்கள். ஆகவே சோகத்திலும் உங்களைத் தேற்றிக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.

1980 ஆம் ஆண்டு சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்ததும் அதனைக் கேள்விப்பட்ட உலகத் தலைவர்கள் புது டெல்லி அன்னை இந்திரா இல்லத்தில் துக்கம் விசாரிக்க வந்து விட்டனர். சோகத்திலும் இந்திரா அனைவரையும் வாசலில் நின்று வரவேற்ற காட்சியினை தொலைக்காட்சியில் காட்டினார்கள். அந்த நிகழ்ச்சி அனைவரின் உள்ளத்தினையும் தொட்டது. ஆகவே சோகத்தில் உங்களை இழந்து விடாதீர்கள்.
இறைவன் கொடுத்ததை வைத்து நிறைவோடு வாழுங்கள்:

ஒரு சிலர் பணக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு மன நோய் ஏற்பட்டால் அவர்களை மற்ற மன நோயாளிகளுடன் தான் தங்க வைப்பர். ஆகவே மன தைரியத்தினை தவற விடாதீர்கள். நாம் மன தைரியத்துடன் இருப்பதினை அறிந்து சந்தோசப் படுங்கள். ஒருவருக்கு பல கோடி சொத்து இருக்கலாம். ஆனால் அவருக்கு இனிப்பு நீர் இருந்தால் எந்த பொருளும் ஆசையுடன் சாப்பிட முடியுமா? ஆகவே நீங்கள் வாழ்க்கையின் பிரகாசத்தினை எண்ணி எங்காது உங்கள் வாழ்வின் இருண்ட காலத்தினை எண்ணி மகிழ்ச்சியோடு வாழுங்கள்



மலைபோல் எதிர்ப்பில் எழுந்து நில்லுங்கள்:

உங்களுடைய நல்ல முயற்சியினை தொடரவிடாமல் எதிர்ப்பு ஏற்பட்டால் மலைபோல் நின்று சமாலியுங்கள். காற்று மணல், தூசிகளைதன் இடம் பெயர்க்கச் செய்ய முடியும். ஆனால் மலையினை அசைக்க முடியுமா? நீங்கள் ஒரு சபையிலோ, வீட்டிலோ, விரிவுரையாற்றும்போதோ, டி.வி. நிகழ்ச்சியிலோ பங்கேற்கும்போது ஒருவர் வேண்டும் என்றே சீண்டினால் அதற்காக கோபம் அடையாதீர்கள். உங்கள் கருத்தினை பொறுமையாக எடுத்து வையுங்கள். 'பொறுத்தவர் பூமியாழ்வார் என்ற பழமொழி என்றும் பொய்த்ததில்லை'
இருக்கின்றதினை வைத்து சிறப்புடன் வாழுங்கள்

உங்கள் கார் பழையது, ஏர் கண்டிஷன் பழுதாகிவிட்டது, சீட் கவர் பழுதாகிவிட்டது. தற்போது அதனை சீர் செய்ய போதிய பண வசதியில்லை. கார் ரிப்பேராக இருக்கிறதே என்று வருந்துவதி விட, குறைந்த பட்சம் அந்த பழைய காராவது இருக்கிறதே என எண்ணி மகிழ்ச்சி அடையுங்கள். ஒருவர் சக்கரை நோயாளியாக இருப்பதினால் டீயில் சக்கரை இல்லாமல் குடிக்கலாம். ஆனால் அந்த டீகூட குடிக்க காசு இல்லாதவர் எத்தனையோ பேர் உள்ளனர் என்று எண்ணி சந்தோசப்படுங்கள்.
நீங்கள் ஒரு கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கச் செல்கிறீர்கள். ஆனால் அந்தப் பாடத்தில் இடம் கிடைக்கவில்லை. மாறாக ஆங்கில இலக்கியத்தில் இடம் கிடைத்து சேர்ந்து விட்டீர்கள். அதன் பின்பு மூன்று வருடமும் விருப்பப் பாடமான கம்ப்யூட்டர் சயன்ஸ் கிடைக்க வில்லையே என வருத்தப் பட்டே ஆங்கில இலக்கியத்தினை படிக்காமல் இருந்து விடப் போகிறீர்களா என்ன
கருத்து வேருபாடுகளிடையே நல்ல நண்பர்களாக இருக்க முடியும்

சில டி.வி. நிகழ்சிகளில் பங்கேற்பவர் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதினை பார்க்கலாம். ஒருவருடைய கருத்து அடுத்தவருக்கு ஏற்புடையதில்லாது இருக்கலாம். அதற்காக அவரை எதிரியாக கருதாது நிகழ்ச்சியின் முடிவில் ஒருவருக்கொருவர் சிரித்த முகத்துடன் கைகுலுக்கிக் கொண்டு இனியும் நண்பர்களாக இருப்போம் என்று சொல்லி விடை கொடுங்கள்.அவர் உங்களை என்றும் மதிக்கும் நண்பராக இருப்பார்.
மென்மையாக இருத்தல் உங்களை அழகுப் படுத்தும்:

ஒருவரை மிகவும் அமைதியானார், பண்பாளர்:என்று பாராட்டுவதுடன், இன்னொருவரை அவசரப் படுபவர், குரோதம் நிறைந்தவர் என்றும் தூற்றுகிறோம். ஒருவரின் குறையினைச் சொல்லும்போது அவரை பகைத்துக் கொள்ளாமல் சொல்லுங்கள். திருமணமான தம்பதிகள், பொற்றோர், ஒரு நிறுவன நிர்வாகிகள், ஆட்சியாளர்கள் மென்மையாக நடந்து கொண்டால் பெரும்பாலான குழப்பங்கள் தவிர்க்கலாம்.. ஒரு கிராமிய பழமொழி, 'மென்ன்மை அழகு படுத்தும், கடுமை அதனை சிதைக்கும்'
சுவையுடன் வாழுங்கள், உயிரில்லாதவர் போல் வாழாதீர்கள்:

ஒரு மனிதர் தன வீட்டரிடமோ, பக்கத்து வீட்டரிடமோ, உடன் பிறந்தவர்களிடமோ, நண்பர்களிடமோ, குழண்டைகளிடமோ பாச பிடிப்பில்லாமல் வாழ்வார். ஒரு கல்லூரியில் பி.ஏ முதலாண்டு படிக்கும் மகன் தந்தையிடம் வந்து தனது லெக்சரர் வைத்த மாடல் பரிச்சையில் ஒரு திருத்தம் இல்லாமல் வினா எழுதியிருப்பதினைக் காட்டுவான். ஆனால் தந்தையோ அவனை பாராட்டாது 'ஆமாம் இவர் பி.எச்.டி. பரிச்சையில் மார்க் வாங்கிவிட்டது போன்ற மகிழ்ச்சியாக்கும்' என்று பாரா முகமாக இருந்தால் மகனுக்கு எப்படி இருக்கும்., ஒருவர் தன உறவினர் வீட்டுக்குச் செல்கிறார். அந்த உறவினரும் அவரை வரவேற்று டீ கொடுக்குறார். அதன் பின்பு வீட்டுக்குள் சென்று சமீபத்தில் பிறந்த தனது பேரனை ஒரு போர்வையில் வைத்து எடுத்து வந்து உறவினருக்குக் காட்டுகிறார். உறவினர் குழந்தையினை வாங்கி ஒரு முத்தம் கொடுத்து திரும்ப டீ. குடிப்பதிற்குப் பதிலாக குழந்தையினை ஏறப் பார்த்து விட்டு டீ யை மடக் மடக் என்று குடிப்பதிலேயே கவனமாக இருக்கிறார்.
ஆகவே உயிரில்லாதவர் போல வாழாது சுவையுடன் வாழ்ந்து உங்கள் இன்ப, துன்பங்களை வெளிக்காட்டுங்கள்

உங்கள் நாவினை சுவையுள்ளதாக ஆக்குங்கள்:

மனித உடல் பகுதியில் மிகவும் காக்கப்பட வேண்டிய சதைபிண்டம் நாக்குதான்.
உங்கள் மனைவி உங்களுக்காக சுடச்சுட வஞ்சரம் மீன் குழம்பு சமைத்து சாப்பிடப் பரிமாறுகிறார். நீங்கள் முதல் கவள சாப்பாட்டினை எடுத்து வையில் வைக்கிறீர்கள். குழம்பில் உப்பு அதிகமாக இருக்கிறது. அதற்காக வானத்திற்கும் பூமிக்கும் குதித்து உங்கள் கோபத்தினைக் காட்டினால் உங்கள் மனைவி மனம் வருந்தும். ஆகவே, உன் மீன் குழம்பு மிகவும் ஜோர், கொஞ்சம் உப்பை குறைத்திருந்தால் இன்னும் சுவையாக இருக்கும் என்று சொல்லிப் பாருங்கள். அடுத்தத் தடவை மிக கவனமாக சாப்பாடு உங்கள் மனைவி தயாரிப்பார்.
ஒரு நண்பர் மற்றொரு நண்பரிடம் ஒரு புத்தகத்தினை படிக்க இரவல் வாங்கிச் சென்றார். பல நாள் கழித்து அதனை திருப்பிக் கொடுத்தார். அப்போது அந்தப் புத்தகத்தில் பல பக்கங்கள் தண்ணீரில் நனைத்தும், சிறு சிறு உணவுப் பொருளும் இருந்ததால் அழுக்காகவும் மற்றும் கசங்கியும் இருந்தது. அதே நண்பர் சில நாட்கள் கழித்து திரும்ப வந்து இன்னொரு புத்தகத்தினைப் படிக்கக் கேட்டார். நண்பர் தன் வீட்டுக்குள் சென்று அவர் கேட்ட புத்தகத்தினை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்து எடுத்துச் செல்லுங்கள் என்றார். இரவல் கேட்ட நண்பர் சொன்னார் நான் புத்தகம் மட்டும் தானே கேட்டேன், நீங்கள் தட்டையும் சேர்த்துக் கொடுக்கிறீர்களே என்றார். அதற்கு புத்தக நண்பர் சொன்னார், புத்தகம் நீங்கள் படிப்படிற்கு, தட்டு நீங்கள் படிக்கும்போது சாப்பிடும் உணவுப் பொருள் வைப்பதிற்கும், தண்ணீர் மூடுவதிற்கும் என்று சொன்னாரே பார்க்கலாம், இரவல் கேட்ட நண்பர் நாணப் பட்டு இனிமேல் அதுபோன்று நடக்காது என்று சொல்லி தட்டுவினைத் திருப்பிக் கொடுத்து விட்டு நகன்றார்.
'ஒவ்வொரு கனிவான வார்த்தையும், ஒரு அன்பளிப்பாகவும் அருளிரக்கச் செயலாகவும் அமையும்' என்பது முன்னோர் பழமொழி
அடுத்தவர் குறை சொல்லுவார்கள் என அஞ்ச வேண்டாம்:.

குறை சொல்லுபவர் பல விதம்:

1) சிலர் உண்மையிலேயே அறிவுரை சொல்ல வேண்டும் என நினைப்பர். ஆனால் அவருக்கு திறமை போதாது.

2) சிலருக்கு உங்கள் மீது பொறாமை கொண்டு உங்களை அவர்களின் வார்த்தைகளால் வருந்தச் செய்வர்.

3) சிலருக்கு தாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாது குறை சொல்வர்.
4) சிலர் இருண்ட உள்ளம் கொண்டவர். எப்போதுமே குறை சொல்லுவதையே வழக்கமாகக் கொண்டவர் ஆவர்.

சீன பழமொழி, 'மக்களுக்கு ஒரே சுவையுணர்வு இல்லாவிட்டால் உலகில் வியாபாராமே நடக்காது'

ஆகவே வேண்டு என்றே குறை சொல்லுபவர் உலகில் ஏராளம். அவர்கள் கூற்றினை சட்டை செய்யக் கூடாது.

ஒருவர் தனது பழைய காரை விற்றவுடன் நண்பர் ஒருவர் வந்து விற்ற விபரம் கேட்டுவிட்டு எனக்குத் தெரிந்திருந்தால் இன்னும் அதிக விலைக் கொடுத்து வாங்கி இருப்பேன் என்று. உடனே உங்கள் மனம் சஞ்சலப்படும். அதனைத் தவிர்க்க நீங்கள், 'காரை விற்றாகி விட்டது பின்பு அதைப் பற்றிய பேச்சை விடுங்கள்' என்று சொல்லவேண்டும்,

மனிதனுக்கு பகையில்லாத இவ்வுலகமில்லை. அதற்காக நீங்கள் இமயமலைக்குப் போய்யா தனியாக வாழ்ந்து உங்களை வருத்த வேண்டும்?
சிரித்துக் கொண்டே இருங்கள்:

சிரிப்பது கோபம் கொள்வதினை தவிர்க்கும். துணிச்சலானவர் யார் என்றால் கோபத்தினை அடக்கி துன்பத்திலும் சிரிப்பவர் ஆவர்.

மகாத்மா காந்தி, கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுக்கு இறையானபோதும், நபிகள் நாயகத்தின் கழுத்தில் கிடந்த துண்டினை முறுக்கிய கடன் கொடுத்தவர் கண்டு பலர் கோபப்பட்டும் அவர்கள் கோபம் அடையவில்லை. ஆகவே தான் அவர்கள் உலகில் உயர்ந்தவர்களாக கருதப் படுகிறார்கள்.

கிராமப் பழமொழி, 'வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்'
ரகசியம் காக்க:

எந்த ஒரு ரகசியமும் ஒருவரினை மீறிப் போகிறதோ அவை ரகசியமாக இருக்க முடியாது. எது அந்த இருவர் என்பதிற்கு பலர் பல விளக்கங்களை சொல்வர். ஆனால் உண்மையில் அந்த இருவர் ஒரு மனிதனின் இரு உதடுகளே என்றால் மிகையாகாது.

ஒருவர் ஒரு இரகசியத்தினை சில காலம் பத்திரமாக பூட்டுப் போட்டு வைத்திருப்பார். காலச் சக்கரம் சுழல சுழல அந்த ரகசியம் வெளி வரத் தொடங்கும். அது பல நபர்களை அடைந்து பல்வேறு உருவம் கொடுக்கப்பட்டு பூதாகாரமாக கிளம்பும்.

ஒருவர் இரகசியத்தினை காக்க திறனில்லாதவராக இருந்தால் அது மனைவியே ஆனாலும் அவரிடம் சொல்லாதீர்கள்.

நீங்கள் ஒரு இரகசியத்தினை எவ்வளு தூரம் காபாத்துகிரீர்கள் என்பதினைப் பொருத்து உங்கள் மீது பிறர் வைத்து இருக்கும் நண்பகத்தன்மையும், மதிப்பும் அதிகர்க்கும்.

எவர் ஒருவர் உங்கள் இரகசியத்தினை அறிவாரோ அவர் உங்களை சீக்கிரமே அடிமைப் படுத்தி விடுவார்.
மக்களுக்கு உதவி செய்யுங்கள்:

பலன் நோக்கா உதவி செய்பவர் புகழ் என்றுமே மறைவதில்லை:

அடுத்தவர்களுக்காக வாழ்ந்தவர் பிற்காலத்தில் வறுமையில் வாழலாம். ஆனால் அவர் பிறர் மனதில் நீகா இடம் பிடித்து புகழுடன் மறைவார்.
உங்கள் திறமை மீறி உங்கள் தொழில் பழுவினை ஏற்றாதீர்கள்
சிலர் எந்தக் காரியத்தையும் நான் நான் என்று அள்ளிப் போட்டுக் கொண்டு செய்வர். அதனால் சில குறைபாடுகள் ஏற்படும்.

ஒரு பொது சேவை நண்பரினைத் தேடி பலரும் உதவி கேட்டு வருவர். அத்தனை உதவியையும் ஒருவர் செய்து கொடுக்க முடியாது. முடிந்த காரியத்தினை செய்து கொடுத்து
விட்டு முடியாத காரியத்தினை தவிர்த்து விடுங்கள். இல்லையென்றால் பலரின் பகையினையும் பெற வேண்டியிருக்கும்
'மக்களுக்கு உதவி செய்பவர்களுக்கு இறைவன் உதவி செய்வான்', பல வேதங்கள் கூறும் பொன்மொழி.

'அடுத்த வீட்டுப் பிள்ளைக்கு ஊட்டி வளத்தால் தன் பிள்ளை தானே வளரும்' கிராமிய பழமொழி.


உங்கள் சோம்பேறித்தனம் பலரைப் பாதிக்கும்:

ஒரு கம்பனி மேனேஜர் சோம்பேறியாக இருக்கிறார். அவர் மேஜையில் பைலுக்கு மேல் பைல் தேங்கிக் கிடந்தது. ஒரு நாள் அவருடைய எம்.டி இடமிருந்து தொலைபேசி வந்தது. அதில் அந்த அலுவலகத்திற்கு அடுத்த நாள் காலையில் ஆய்வுக்காக வருவதாகச் சொன்னார். உடனே மேனேஜர் சுதாரித்துக் கொண்டு முயல் வேகத்தில் தன் பி.ஏ வினைக் கூப்பிட்டு 'ஏன் இத்தனை பைல்கள் தேங்கிக் இடக்கின்றன என்று சொல்ல வில்லை என்று சப்தம் போட்டு அதனை பைல்களையும் எடுத்துச் சென்று இன்று மாலைக்கும் அனைத்து ஊழியர்களும் முடித்துக் கொடுத்து விட்டுத்தான் வீடு போக வேண்டும் என்று கட்டளையிட்டார். பி.ஏவும் அனைத்து பைல்களையும் எடுத்துச் சென்று எரிச்சலுடன் ஒவ்வொரு மேசையாக வீசி விட்டு மேனேஜர் கட்டளையினைச் சொன்னார். அப்போது ஒரு ஊழியர் சொன்னார், 'சார், என் மகனுக்கு இன்று பிறந்த தினம், மாலை சீக்கிரமாக வீட்டுக்குப் போக வேண்டும் என்றார். அதற்கு பி.ஏ முடியாது என்று சொல்லி விட்டார். அந்த ஊழியரும் மற்றவர்களைப் போல முனு முணுத்து விட்டு வெகு நேரம் இருந்து வேலையினை முடித்துக் கொடுத்து விட்டுச் சென்றார். வீட்டுக்குள் சென்றதுமே செருப்புகள் ஒரு பக்கமும், ஆபீஸ் பை ஒரு பக்கமும் பறந்தது. அதற்கு மேல் மனைவி,' ஏங்க கொஞ்ச சீக்கிரம் வரக்கூடாதா பிள்ளை நீங்கள் வருவீர்கள் என எதிர்பார்த்து ஏமாந்து தூங்கி விட்டான்' என்று சொன்னது தான் தாமதம் தன் மேனேஜர் மேல் உள்ள கோபத்தினை தன் மனைவியிடம் காட்ட ஆரம்பித்து விட்டார். அத்தனைக் குழப்பதிற்கும் சோம்பேறி மேனேஜர் தான் காரணம். ஆகவே வேலையினை பலரிடம் பகிர்ந்து கொடுத்து குறிப்பிட்டக் காலத்திற்குள் முடிக்கப் பாருங்கள். நீங்கள் சோம்பேறியாக இருந்தால் அடுத்தவர் உங்கள் மீது சவாரி செய்ய நினைப்பார். .

குறிப்பறிந்து உதவுங்கள்

உங்களை ஒருவர் அவமதிக்கும்போதோ, அல்லது சீண்டும்போதோ உங்கள் நண்பர் உங்களுக்கு உதவிக்கு வருகிறார் என்றால் உங்கள் முகம் எவ்வளு பிரஹாசம் அடையும். அதேபோன்று நீங்களும் அடுத்தவருக்கு உதவுங்கள். ஒருவனுடைய வேஸ்டி ஆற்றில் அடித்து செல்லும்போது கரையில் இருக்கும் நண்பர் தனது வேஸ்டியினைக் கொடுத்தால் எவ்வளவு மகிழ்வார்.
உங்களது நண்பர் வீட்டுக்குச் செல்கிறீர்கள். உங்கள் வருகையினை பார்த்து மகிழ்ச்சியில் உங்கள் நண்பரின் ஒன்பது வயது மகன் அவனது தாயார் கொடுத்த டீயினை தட்டில் வைத்து எடுத்து வருகிறான். அப்போது உங்கள் முன் டீயினை வைக்கும் பதட்டத்தில் டீயினை சிந்தி விடுகிறான். அப்போது அவனை உங்கள் நண்பர் திட்டுகிறார். நீங்கள் அந்தப் பையனுக்காக பரிந்து பேசினால் அந்த சிறுவனுடைய மகிழ்ச்சிக்கு அளவே இருக்காதல்லவா?
அறிவாளிகள் எப்போதும் அடுத்தவர் மனங்கவர்ந்து அன்பைத் தேடுவர்.:

வெளித்தோற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்:
நீங்கள் ஒரு நண்பருடைய வீட்டுக்குச் செல்கிறீர்கள். அவர் வீட்டில் செருப்புகள் பல பக்கத்திலும், ஸ்கூல் பைகள் மற்றும் புத்தகங்கள் வீட்டு ஹாலுக்குள் இரைந்தும், பாத்திரங்கள் சில பக்கங்களில் அலங்கோலமாக கிடக்கின்றன என்றால். அந்த நண்பர் வீட்டினைப் பற்றிய நன் மதிப்பு உங்களிடம் வருமா? நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகம் சுத்தமாக வைக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
அதே போன்று தான் உங்களைப் பார்க்கும் முதல் பார்வையிலே உங்கள் தோற்றத்தினை வைத்து அடுத்தவர் எடை போடுவார். நீங்கள் நல்லாடைகளை உடுத்த எப்போதுமே ஆர்வமாக இருங்கள். 'ஆள் பாதி ஆடை பாதி என்பது' கிராமிய பழமொழி இன்றைய நவீன உலகத்திற்கும் பொருந்தும்.
பொய் சொல்லுவதினை தவிர்ங்கள்:

சிலர் பொய் சொல்ல்வதினையே வாடிக்கையாக வைத்திருப்பார். பொய் சொல்லுவது உங்களுடைய நண்பர்களையும், உறவினர்களையும், சக ஊழியர்களையும் உங்களிடமிருந்து பிரித்து விடும். 'புலி வருது, புலி வருது' என்று விளையாட்டாக சொல்லி உண்மையிலே ஆபத்து வந்தால் யாரும் காப்பாற்ற மாட்டார்கள்.

சிலர் சில சம்பவங்கள் சுவாரிசமாக இருக்கவேண்டும் என்று கண்ணும் காதும் வைத்து பலர் ரசிக்கச் சொல்லுவார்கள். அவர்கள் எத்தனை காலத்திற்குத்தான் மிகை படுத்திச் சொல்ல முடியும். அவர்களுடைய சாயம் சீக்கிரமே வெளுத்து விடும்.
கொண்ட கொள்கையில் உறுதியாக இருங்கள்:

ஒரு மனிதனை எடை போடும்போது அவன் கொள்கையில் எவ்வாறு உறுதியாக இருக்கின்றான் என்பதினைப் பொறுத்தே அமையும். ஒரு ஊழியர் லஞ்சம், கையூட்டு, மது, மாது, அடுத்தவர் விருந்தோம்பலை விரும்புவதில்லை என்றால் அவர் மீது சக ஊழியர் மதிப்புடன் பழகுவர்.

ஒரு கணவர் மது, புகைத்தல், சூதாடுதல், விலை மாதர்களில் நாட்டம் கொண்டவர் என்றால் மனைவி அவரை கண்டிக்க தவறக் கூடாது. கணவரின் ஊதாரித் தனத்தினை முளையிலே கட்டுபடுத்த வில்லை என்றால் பிற்காலத்தில் ஒரு குடும்பமே பாதிப்பினை அடைய நேரிடும்.

நீங்கள் பொய் சொல்லுபரின் செயலை ஆதரிக்காதீர்கள். அப்படி நீங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தால் உங்கள் மீது உள்ள நன்பகத் தன்மையும் போய்விடும்
வறியவருக்கு தீங்கு விளைவிப்பதினைத் தடுப்போம்:

ஒருவர் பிறரைப் பற்றி அவதூறு பேசுவதால் பலருக்கு அவரைப் பிடிப்பதில்லை. அவரை யார் விரும்புவார் என்றால் அவர் போன்று புறம் பேசுபவரே!

வசதிப் படைத்தவர் வறியவரின் சொல்லை சட்டை செய்வதில்லை. ஒரு சிலர் சிங்கம் போல ஏழைகளை அடிப்பதும், வறியவரை ஓட, ஓட விரட்டுவதுமாக இருப்பார். ஆனால் அவர்களுக்கு ஒரு சங்கடம் வந்தால் தீக்கோழி தன் தலையினை மணலுக்குள் புதைத்துக் கொள்வதுபோல் மறைந்து விடுவர்.

'ஒரு நாள் அகங்காரம் கொண்டவர் ஓய்வு எடுக்கும்போது ஒடுக்கப் பட்டவர் வீறு கொண்டு எழுவர்' என்பது உலக நியதி.
எதிரிகளின் எண்ணிக்கையினை அதிகமாக்காதீர்கள்:

நீங்கள் பலரிடம் பழகும்போது, சிலர் கோபம் கொள்பவராக இருப்பார், சிலர் அறியாமையின் சிகரங்களாக இருப்பார், சிலர் தீய எண்ணங்கள் கொண்டவராக இருப்பார், சிலர் விதண்ட வாதம் செய்பவர்களாக இருப்பார். அவர்கள் எல்லோரையும் நீங்கள் பகைத்துக் கொள்ள முடியாது. நீங்கள் உலகில் வாழும் நாள் குறுகியதே ஆனதால் அதிகமான எதிரிகளை தேடிக்கொள்ளதீர்கள்.
தாராள மனப் பான்மை கொள்ளுங்கள்:

உற்றார், சுற்றத்தார்,மிகவும் விரும்பக் கூடியவர், விருந்தோம்பலுக்குப் பெயர் போனவர், அடுத்தவர் கேட்காமலே உதவுவர்தான் தாராள மனப் பான்மை கொண்டவர்.
ஆனால் புகழுக்காகவும்,, தலைமைப் பதவிக்காகவும், அடுத்தவர் புகழ வேண்டும் என்று தாராள மனப் பான்மையுடன் நடந்து கொள்பவர் சாயம் சீக்கிரமே வெளுத்து விடும்.
அதே நேரத்தில் கையினை ரெம்போ தாராளமாக விரிக்கவும் கூடாது, கஞ்சதனத்தில் இறுக்கிப் பிடிக்கவும் கூடாது
உணர்வுப் பூர்வமாக இருங்கள்:
ஒரு மனிதர் உங்களை கடைத் தெருவில் பார்கிறார். அவர் முகம் இறுகிப் போயிருந்தது. அதே நபரை சில நாட்கள் கழிந்து ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்கிறீர்கள்., அப்போதும் அதே இறுகிய முகத்துடன் காட்சி தருகிறார். நீங்கள் உங்கள் வீட்டுக்குச் சென்றால் அந்த இறுகிய முகம் தான் நினைவுக்கு வரும். அதே நேரத்தில் ஒருவர் உங்களை நடை பயிற்சியின் பொது ஹல்லோ என்று சிரித்த முகத்துடன் சொல்லி விட்டு செல்கிறார். நீங்கள் வீட்டுக்குச் சென்றாலும் அந்த சிரித்த முகம் தான் நினைவுக்கு வரும்.
ஆனால் அன்றாடம் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் உங்கள் மனைவி, குழந்தை, பெற்றோர், உற்றார், உடன் பிறந்தோர், அலுவலக நண்பர்கள் ஆகியோர்களை சிரித்த முகத்துடன் அதே நேரத்தில், கோபத்திலும், வாக்குவாதத்திலும், குறை சொல்லும்போதும் சந்திக்க நேரிடும். ஆனால் அவர்களுக்கும் நாம் காட்டும் அன்பும், பரிவுமே என்றென்றும் நிலைத்து இருக்கும்.
ஆகவே வாழ்கையில் உணவுப் பூர்வமாக இருங்கள்.
முடிந்தவரை உதவுங்கள்:
ஒரு மனிதர் உங்களிடம் ஒரு உதவியினை பெற நினைத்து அதைப் பெற முடியாமல் திரும்பும்போது உங்களது மனம் வருந்துமல்லவா?
ஆகவே கூடியமானவரை உதவி கேட்டு வரும் நபரின் தேவைகளை குறைந்தளவாது நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். இல்லை என்றால் உங்களிடம் உதவி பெற முடியாதவர் உங்களைப் பற்றி அவதூறு பரப்புவார். ஒருவர் கேட்ட உதவியினை கொடுக்க முடியாவிட்டால் அவரை உபசரித்து ஒரு கிளாஸ் தண்ணீராவது கொடுத்து கனிவாகப் பேசி அனுப்பி வையுங்கள்.
இரண்டு கண்களாலும் பாருங்கள்:

நாம் இயற்கையிலேயே குறைகளை கண்டு பிடிப்பவர்களாக இருக்கின்றோம்.
ஒரு பள்ளி ஆசிரியர் சோம்பேறி மாணவரை குறை சொல்லுவதும், ஒழுங்காக படிக்கும் மாணவனைப் பாராட்டுவதும், ஒரு வீட்டில் சுட்டி செய்யும் மகனை தந்தை கண்டிப்பதும், அமைதியான பிள்ளைகளை செல்லமாக நடத்துவதினையும் காணலாம். அதே நேரத்தில் மக்கு மாணவனின் வேறு திறமையினை ஆசிரியர் அறிந்து பாராட்டியும், சுட்டி செய்யும் பிள்ளைகளின் நல்ல குணங்களை கண்டறிந்து பலர் முன்னிலையில் தந்தை பெருமை கொள்ளும்போது அவர்கள் திருந்தி வாழ வழி பெறக்கும். அத்துடன் நீங்கள் அவர்கள் மனதில் என்றும் நீங்காமல் இருப்பிஈர்கள்.
காரியம் சாதிக்க தாராளமாக புகழுங்கள்:

ஒரு குழந்தை தன் காரியத்தினை சாதிக்க தந்தையின் கழுத்தைக் காட்டிப் பிடித்துக் கொண்டு கொஞ்சி தனக்கு வேண்டியதினைப் பெறும். அதேபோன்று ஒருவரிடம் உதவியினை நாட வேண்டுமென்றால் அவரை தாராளமாக புகழுங்கள்.
உங்கள் நண்பரை உங்கள் வீட்டுக்கு சாப்பிடுவதிற்காக அழைக்க எண்ணினால் உங்கள் மனைவிடம் எவ்வாறு கெஞ்சி ஒத்துக் கொள்ள வைக்கிறீர்களோ அதேபோன்று வார்த்தைகளை தாராள உபயோகிங்கள்.
'பெரிய கவலை சாப்பாடு முழுங்குமுன் பற்களால் அரைத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அந்த உணவு செரிக்காது'.
நீங்கள் எப்போதும் வெற்றியினை அடைய முடியாது:
மேலே குறிப்பிட்ட பல பண்பாட்டுச் செயல்களால் வாழ்க்கையினை சிறப்புடன் நடத்த முடியும். அவ்வாறு முடியா விட்டாலும் உங்கள் முயற்சியினை விட்டு விடாதீர்கள்,
ஏனென்றால் நான் சொல்லாத பண்பாடுகள் பல இருக்கின்றன. அவை மேலும் அனுபவத்தில் தெரிந்து கொள்ள வேண்டியவை.

தீராத விளையாட்டுப் பிள்ளை தண்ணீர், தீர்வென்ன தமிழகமே

தமிழக மக்களின் தாகம் தீர்க்கவும், தமிழக விவசாயிகள் வாழ்வாதாரத்தின் அடித்தளமாகவும், பறவைகள், விலங்கினங்கள் துள்ளி விளையாடவும் வழி வகை செய்யும் ஆறுகளாக வற்றாத காவேரி, முல்லைபெரியார், பாலாறு, தாமரவரணி உள்ளன. அவை அத்தனையுமே கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநில எல்லையிலுள்ள மலைபகுதியிளிருந்து புறப்படுகின்றன. ஆனால் அவை அத்தனையுமே கடைசியில் சங்கமமாவது பெருங்கடலேயாகும்.
உப்புகரிக்கும் கடலில் மக்களுக்கும், பறவைகளுக்கும், வனவிலங்குகளுக்கும், வனங்களுக்கும், பயிர்களுக்கும், நதி நீர் கலந்து வீணாகக் கூடாது என்று தொலை நோக்குடன் இந்தியாவினை ஆண்ட பென்னி குய்க் போன்ற ஆங்கிலேயர் அரசு பணத்துடன், தங்கள் சொந்த சொத்தினை விற்று பல அணைகள் கட்டி தமிழக மக்களின் வயிற்றில் பாலை வார்த்தனர்.

தொலைநோக்கு பார்வை கொண்ட சோழ மன்னன் கரிகால் வளவன் காவரி நதிநீர் கரைபுரண்டு ஓடுவதினைத் தடுத்து 1900 ஆண்டுகளுக்கு முன் திருச்சியில் கல்லனைக் கட்டினான். ஆகவே அவன் புகழ் இன்றும் நிலைத்துள்ளது. அசோக மன்னரை ஆங்கிலத்தில் 'தி கிரேட்' என்பார்கள். காரணம் மக்கள் பயனுக்காக ரோடுகள் அமைத்தும், மரங்கள் நட்டும், குளங்கள் வெட்டியதால் அவரை சிறந்த மன்னராக இன்றும் சரித்திரத்தில் புகழ் வாய்ந்தவராக கருதப் படுகிறார்.

அதுபோன்ற திட்டங்கள் தற்போதைய அரசுகளிடம் இல்லையே அது ஏன்?
ஒரே தெருவில் வாழும் பக்கத்து வீட்டுகாரர்கள் ஆளுக்கு ஒரு குடம் தண்ணீர் தெருக் குழாயில் பிடிப்பதிற்கு குடுமிப் பிடி சண்டை,

பக்கத்தில் இருக்கும் நிலத்தில் வாய்க்காலில் ஓடும் தண்ணீரை வயலுக்கு பாய்ச்சுவதில் சொந்த உடன் பிறப்பிற்குள் தள்ளு, முள்ளு, சம்பந்தம் செய்து கொள்ளும் பக்கத்துக் கிராமவாசிகள் வாய்க்காலில் ஓடும் தண்ணீரை தங்கள் கண்மாயில் நிரப்புவதிற்கு வெட்டுக் குத்து என்று ரத்தம் சிந்தும்போது, பக்கத்து மாநிலங்களான கர்நாடகா , ஆந்திரா மற்றும் கேரளா தமிழகத்துடன் சண்டை போடுவது ஆச்சரியமில்லை தானே!

ஏனென்றால் வல்லமைப் படைட்ட்தவன் போட்டியில் தன் வலிமையினை கடைசி வரை நிலை நிறுத்தப் பார்ப்பான் என்பது பொது நியதி.

அதனையே தான் கர்நாடகமும், ஆந்திராவும், கேரளாவும் தமிழ் நாட்டிடம் பம்மாத்துக் காட்டுகின்றன
.எனினும் அண்டை மாநிலங்களின் நதி நீர்ப் பிரச்சினையில் மத்திய அரசும், உச்ச நீதி மன்றமும் ஒரு உறுதியான முடிவினை எடுக்க முடியவில்லையே என்று பார்க்கும் பொது பரிதாப நிலையாக உங்களுக்குத் தோன்றவில்லையா?

வியாபாரிகளாக வந்த ஆங்கிலேயர்கள் குறு மாநிலங்களாக இருந்த இந்திய தேசத்தினை தன் கட்டுப் பாடுகள் கொண்டு வந்து பிரிட்டிஷ் சாம்ராஜியதினை நிலை நாட்ட தங்களுடைய ராணுவ தளவாடங்களை பல பகுதிகளுக்குக் கொண்டு செல்ல நீண்ட ரயில் பாதைகளை வனப்பகுதிகளிலும், மலையினைக் குடைந்தும் அமைக்கவில்லையா?

அதேபோன்று சுதந்திர இந்தியாவில் வட மாநிலங்களில் ஓடும் வற்றாத கங்கை, பிரமபுத்ர நதிகளை வரண்ட தென் மாநிலங்களுக்கு ஏன் கொண்டு செல்ல முடியவில்லை என்ற கேள்வி உங்களுக்கு எழாமலில்லைதானே? அதற்கு தேசிய அரசியல் வாதிகள் சொல்லும் நொண்டிச் சாக்கு, இயற்கைச் சூழல் கெட்டு விடுமாம். அவ்வாறு ஆங்கிலேயர்கள் நினைத்து இருந்தால் இந்தியாவினை இணைக்கும் தண்டவாளங்களை அமைத்து இருக்க மாட்டார்களே!

ஏன் வாஜ்பாய் பிரதமாராக இருந்த போது உருவாக்கப் பட்ட 'தங்க நாற்காலி' என்ற நான்கு வழி ரோடு அமைக்கும் திட்டம் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஏற்பட்டிருக்காதே!

சென்னை,ஹைதராபாத் இடையே உள்ள தூரம் 664 கிலோ மீட்டர்.
அதனிடையே தனி ரயில் பாதை அமைத்து ஜப்பானில் உள்ளதுபோல் புல்லெட்ரயில் இயக்க திட்டமிட்டு கன்சல்டன்சிக்கு ஷிஹான் என்ற ஜப்பான் கம்பெனிக்கு மூன்றக்கோடி முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அப்படி பாதை அமைக்க ஒரு கிலோ
மீட்டருக்கான செலவு ரூபாய் நூறு கோடியாம். அப்படி என்றால் புல்லெட் ரயில் அமைக்க ரூபாய் 66400 கோடியாகுமாம். அதுபோன்ற திட்டங்கள் செயல் படுத்தும் போது சுற்றுப்புற சூழல் கெடாதா?


மக்கள் வறட்சியால் பட்டினியில் வாடும்போது 'நதிகளை இணைத்தால் இயற்கை சூழல் பாதிக்கும்' என்பது கை எழாதவர் சொல்லும் நொண்டிச் சாக்காக சொல்லுவது போல உங்களுக்குத் தெரிய வில்லையா?
மேலை நாடுகளில் அதுபோன்று நதிகளை இணைத்து மக்களுக்கு பயன் படும் வகையில் செய்துள்ளார்களே! உதாரணத்திற்கு அமெரிக்காவில் ஓடும் கொலோரோடோ நதி அமெரிக்காவின் கலிபோர்னியா, நவேடா மாநிலங்களோடு பக்கத்து நாடான மெக்ஸிகோவிற்கும் செல்கின்றதே,. ஏன் இந்தியாவில் ஓடும் பிரமபுத்ர நதி அண்டை நாடான பங்களாதேசுடன் பகிர்ந்து கொள்ள வில்லையா? பின் ஏன் வட மாநில நதிகளை தென் மாநிலங்களுடன் இணைக்கக் கூடாது? ஏன் வற்றாத நதிகளை தேசிய மயமாக்கக் கூடாது?
கர்நாடகமும், ஆந்திராவும், கேரளாவும் முடிந்த மட்டும் காவேரி, பாலாறு, முல்லைபெரியார் நதிகளை தங்கள் கட்டுப் பாடுகள் வைத்துக் கொள்ளும் முயற்ச்சியில் இறங்கி உள்ளன என்று சமீப கால நடவடிக்கைகள் எடுத்தியம்புகின்றன. அதனை அடுத்து நமது பரபரப்பு அரசியல் வாதிகள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல், வன்முறை போன்ற விரும்பத்தகாத சம்பவங்களால் அண்டை மாநில மக்கள் ஒருவருக்கொருவர் மனக் கசப்புடனும், அச்ச உணர்வுடனும் வாழ்கின்றனர். நாட்டினை துண்டு போடத் துடிக்கும் சில பிரிவினை வாத சக்திகள் இதனை ஒரு சக்கரைப் பொங்கலாக எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடு படுகின்றனர். எரியும் நெருப்பில் என்னை ஊற்றுவது போல சில ஊடகங்கள் ஊதி பெரிதாக்குகின்றன
ஆனால் நாம் தண்ணீர் வளத்தினை பெருக்க எடுத்துக் கொண்ட முயற்ச்சிகள் பற்றி எப்போதாவது சிந்தித்தது உண்டா?

சமீப காலமாக வானம் பொத்துக் கொண்டு கொட்டோ கொட்டு என்று மழை பொழிந்து தள்ளியது. அதன் விளைவாக ஆறுகளின் கரையோர கிராமங்கள், நகரங்கள் வெள்ளத்தில் மிதந்தன. கூரைகள் காற்றில் பறந்தது, வீதிகளில் இடுப்பளவு தண்ணீர் நின்றது, போக்குவரத்து ஸ்தம்பித்தது. வெள்ளத்தால், அடை மழையால் வீதிகளில் ஓட்டை விழுந்தது, ஆற்றின் கரையோர மக்கள் திருப்பூர் போல பலர் அடித்துச் செல்லப் பட்டனர். ஆனால் மழைக் காலத்திலாவது அனைத்து கிராமங்களிலும் கண்மாய்கள், குளங்கள் நிறைந்ததா என்றால் இல்லையே!

பின் எங்கே சென்றது அத்தனை தண்ணீரும் என்று உங்கள் மனதில் கேள்வி எழுவது இயற்கைதானே!

கடலிலிருந்து மேகமாகி மழையாகி அந்த மழை வெள்ளமாகி கடலில் சங்கமானது தான் மிச்சம்.;

மழைக் காலத்தில் மழை நீரை சேமித்து வைக்காது பல்வேறு அணைகளின் உபரி நீரை திறந்து பல மக்களுக்கு இன்னல் ஏற்பட்டு கடலில் போய் சேர்ந்தது என்றால் வருத்தமாகத்

தெரியவில்லையா?
அதற்கு வழிதான் என்ன என உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம்.

கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மூலம் மழை காலத்தில் தண்ணீர் வீனாகுவதினைத் தடுக்கலாம்.
1) காவேரி, பாலாறு வைகை, முல்லைப் பெரியார் ஆறுகளின் பாதைகளில் மழை காலத்தில் திறந்து விடப்படும் உபரி நீரை ஏன் 'செக் டாம்ஸ்' கட்டி விவசாயிகளின் பயனுக்காக சேமித்து வைக்கக் கூடாது. அது போன்ற 15 டாம்ஸ் பாலாற்றில் ஆந்திரா மாநிலம் கட்டிவிட்டு மறுபடியும் ஒரு டாம்சை கணேசபுரத்தில் கட்டத்துவங்கி உள்ளதாக கூறப்படுகிறதே!
2) அது போன்ற அணை மதுரை டூ ராமேஸ்வரம் சாலையில் விரகனூரில் கட்டியதால் அதன் சுற்று ஊர்களின் விவசாயிகள் பயன் அடைந்திருக்கிறார்களே!
3) ஆற்றின் கரை ஓரங்களில் உள்ள கண்மாய்கள், குளங்கள் மழை காலத்தில் நிரம்பிவிடும். ஆனால் ஆற்றினை விட்டு பாத்து மைல்களுக்கு மேலுள்ள கண்மாய், குளங்கள் நிறையாது. ஏனென்றால் ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லும் வாய்க்கால் மண் மேவியும், காட்டுச் செடிகளினாலும் தூந்து போய் இருக்கும். அப்படிப் பட்ட கால்வாய்களை மழைக்கு முன் தூர் எடுத்தால் தான் ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு செல்ல முடியும். இல்லையென்றால் அடை மழை பெய்தாலும் அப்படிப் பட்ட குளங்களும், கண்மாய்களும் நிறையாது. உதாரணத்திற்கு எங்கள் ஊர் இளையான்குடி கண்மாய்க்கு இந்த மழை சீசனிலும் தண்ணீர் வைகை ஆற்றிலிருந்து வரவில்லை. ஆகவே இளைஞர் பலர் ஒரு வாரம் ராத்திரி பகல் என்று பாராது கால்வாயினை தூரெடுத்து பதிமூன்று தொலைவிலுள்ள பரமக்குடியிலிருந்து எங்களூர் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வந்துள்ளனர். இப்போது ஆர்ப்பாட்டம், நடை பயணம், மறியல் செய்யும் ஆயிரகணக்கான இளைஞர்கள் கரை சேவையின் மூலம் தூந்த வாய்க்கால்களை தூரேடுக்கலாமே!
அல்லது மத்திய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தினை பயன் படுத்தி வேலை இல்ல இளைஞர்கள் கண்மாய், குளங்களை தூரேடுக்கும் பணியில் ஈடு படுத்தலாமே

கண்மாய்களை தூரேடுக்கலாம். மற்றும் கண்மாயில், குளங்களில் கிணறுகள் வெட்டி சிமென்ட் உரைகள் அடுக்கி கொஞ்சம் நஞ்ச நீரையும் வெயில் நேரங்களில் ஆவியாகப் போகாது மக்கள் உபயோகத்திற்காக ஏற்பாடு செய்யலாம்.

4) தமிழலகத்தில் எண்ணற்ற காட்டாறுகள் உள்ளன. ஆனால் மழை காலத்தில் மழை நீர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டு கடலில் கலந்து விடும். ஆகவே அரசு புறம்போக்கு நிலங்களில் புதிய குளங்கள், கண்மாய் வெட்டி தண்ணீரை சேமித்து வைக்கக் கூடாது?
5) ஏற்கனவே வீடுகளில் மழை நீர் சேமிப்பு திட்டம் தமிழகத்தில் உள்ளது. அதன் மூலம் நிலத்தடி நீர் அதிகரிக்கும் என்பது தான். ஆனால் வீதி, நகரங்களில் ஓடும் மழை நீரால் ரோடுகள் பள்ளமானதும், இடுப்பளவு தண்ணீரில் மக்கள் கஷ்டப் பட்டதும் தான் மிச்சம். ஆஸ்திரேலிய நாட்டில், வீட்டில் புழங்கும் கழிவு நீரைக்கூட மறுசுழற்சி முறையில் வீடுகளின் பயன்பாடு களுக்கு பைப்புகள் மூலம் வழங்குகிறார்கள். பின் ஏன் நாமும் மழை காலத்தில் நகரங்களில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரை மறுசுழற்சி முறையில் சுத்தப் படுத்தி சேகரித்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கக் கூடாது? கடல் நீரை குடி நீராகப் பயன்படுத்தும் திட்டத்தினை விட மிகவும் செலவு குறைவானதாகுமே!
ஆகவே நதி நீர்களை தேசிய மயமாக்கும் வரை, மாநிலங்களின் நதி நீர் பிரச்சனையில் மத்திய அரசு கண்டிப்பான முடிவு எடுக்காத வரை, நீதி மன்றங்கள் நதி நீர் பங்கீடில் உறுதியான அமல் செய்யக்கூடிய தீர்ப்பு வழங்காத வரை நமது மாநிலத்தில் நதிநீர் பிரச்சனை தீராத பிள்ளையாகவே இருக்கும். ஆகவே நாம் மாற்று திட்டங்கள் மூலம் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும், பறவை, விலங்கினங்கள் பயன்பாடிக்கும் விரைந்து மாற்று திட்டங்களை உருவாகியே தீர வேண்டும் என்பது சரிதானே சகோதர சகோதரிகளே!

Sunday 23 October, 2011

பணம் பாதாளம் பாய்ந்த பஞ்சாயத் எலெக்சன் ! (டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ

இந்தியா 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததும் மகாத்மா காந்தி, 'அரசியல் சுதந்திரம் அடைந்தால் மட்டும் போதாது, மாறாக பொருளாதார சுதந்திரமும் அடைய வேண்டும்' என்றார். அவர் கனவு கண்டது சிலர் சொல்வதுபோல ராம ராஜ்யமில்லை, மாறாக கிராம ராஜ்யம் பெற வேண்டும் என்றார். அதாவது கிராமம் தன்னிலை அடைய வேண்டும் என்றார். செல்வம் ஒரு சிலரிடமே பிரமீடு போன்று குவியாது, கடல் போன்று பறந்து அனைவரும் பலன் பெற வேண்டும். இஸ்லாத்திலும் வறியவர் மேன்மைப்பட சொத்து வரி என்ற சக்காத், சதகா, பித்ரா போன்ற பொருளாதார உதவிகள் செல்வந்தர் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. மகாத்மா கூட கலிபா ஓமர் போல ஜனநாயக நல்லாட்சி செய்ய வேண்டும் என்று ஆசைப் பட்டார்.
சங்க தமிழ் இலக்கியங்களில் கிராமங்களில் எவ்வாறு ஜனநாயகம் தளிர்த்திருந்தது என்று விரிவாக செல்கிறது. சோழ மன்னன் ராஜேந்திரன் காலத்தில் கிராமத்தில் குடக்கூலி முறையில் பஞ்சாயத் உறுப்பினர்கள் தேர்தெடுத்து கிராம நிர்வாகம் செயல்பட்டு வந்தது. அதேபோன்று அனைத்துக் கிராமங்களும் முன்னேற தங்களால் தேர்ந்தேடுக்கும் பிரதிநிதிகளால் நிர்வாகம் நடத்தும். சுதந்திரத்திற்குப் பின் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 40 இன் படி மெட்ராஸ் கிராம பஞ்சாயத் சட்டம் 1959 இயற்றப்பட்டது. அதில் 500 பேர் மற்றும் அதற்கு அதிகமாக வாழும் மக்களைக் கொண்டது ஓர் கிராமப் பஞ்சாயத்தாக மற்றும் பஞ்சாயத் யூனியன் ஆக அறிவிக்கப்பட்டது. இந்திய மக்கள் 80 சதவீதம் பேர் கிராமத்தில் வாழ்வதால் அவர்கள் ஜனநாயகத்தின் பயனை உண்மையாக சுவைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆசைப் பட்டார். அதன் விளைவாக அரசியல் சட்டம் 73 மற்றும் 74 திருத்தங்கள் கொண்டு வரப் பட்டது. அந்த திருத்தங்களின் விளைவு கிராமப் பஞ்சாயத், பஞ்சாயத் யூனியன், மாவட்ட பஞ்சாயத் போன்ற மூன்று அடுக்கு பஞ்சாயத்து அலுவலகங்கள் தோன்றின.
2006 ஆம் ஆண்டு உள்ளாச்சித் தேர்தலுக்குப் பின்பு 17, 19.10.2011 ஆகிய நாட்களில் இரண்டு அடுக்கு தேர்தல் வந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய பலத்தினைக் காட்டுவதிற்கு தனித்தனியே போட்டியிட்டன. அதேபோல் சமுதாய அரசியல் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. சில சமுதாய இயக்கங்களும், உதுரி சமுதாய அரசியல் கட்சிகளும் வலியச்சென்று பிற அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தன. சென்ற 2011 மே மாதம் நடந்த தேர்தலில் சில சமுதாய அரசியல் கட்சிகளுடன் வந்து சேர்ந்தவர்கள் திரும்பவும் தாங்கள் முன்பு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிக்கே திரும்பவும் காவடி தூக்கச் சென்று விட்டன.இந்தத் தேர்தலில் போட்டியிடுவதிர்க்காக பல லகரம் கொடுத்துத்தான் அரசியல் கட்சிகளிடம் சமுதாயத்தினைச் சேர்ந்தவர்கள் போட்டியிட சீட்டு வாங்கினார்களாம். அப்படி சீட்டுக் கிடைக்காதவர்கள் முறையான அரசியல் கட்சி வேட்ப்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டிபோட்டர்களாம். போட்டிப்போடுவது ஒன்றும் புதிதல்லத்தான். ஆனால் முஸ்லிம்கள் ஊரில் பணம் பாதாளம் வரை பாயும் என்பதினை இந்தத் தேர்தல் காட்டிவிட்டதாம்.
பல இடங்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கும், அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் சுடச்சுட பணியாரத்திளிருந்து, கொத்திப் போட்ட முட்டப் புராட்டா,சுவையான பிரியாணியில் தொடர்ந்து, மப்பேற்ற மேன்சன் ஹவுஸ் பிராந்தியினை வயிறு முட்ட ஏத்திவிட்டு, சுருட்டிய ரூபாய் 500 நோட்டினை காதில் வைத்துக்கொண்டு,சுருள் சுருளா புகை விட்ட கோல்ட் பிளாக் சிகரெட்டினை புகைத்துக் கொண்டு, வீட்டுக்குச் சென்ற காட்சி எல்லாம் ஜெக ஜோதியாக இருந்ததாம். சில ஊர்களில் காலையில் பற்ற வாய்த்த அடுப்பு நடு இரவு வரை பற்றி எரிந்து கொண்டு இருந்ததாம். இவை எல்லாம் சாதாரண வார்டு தேர்தலுக்குக் கூட இருந்ததாம். ஒரு கடல்கரை சமுதாய ஊரில் இரு தரப்பிதனரிடையே சண்டை உச்சக்கட்டத்தில் போய் உன்னை ஒழித்துக்கட்டுகிறேன் பார். உன் வண்டவாளங்களை எல்லாம் காட்டிகொடுக்கிறேன் பார் என்று ஒலிப் பெருக்கி மூலம் சவால் விட்டார்களாம் நமது சமுதாய சகோதரர்கள் என்றால் அந்த ஊரில் வாழும் மற்ற சமுதாயத்தினர் எப்படி எல்லாம் மகிழ்ச்சி அடைந்து இருந்து இருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள். சமுதாயதினவரை தோற்கடிக்க வேறு வெளி ஆட்களை நாம் தேட வேண்டாம். மாறாக நமக்குள்ளே இருக்கின்றார்கள் என்று அரபு மற்றும் ஆப்ரிக்க முஸ்லிம் நாடுகளில் ஏற்படுகின்ற கொந்தளிப்புகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம். அழிந்த குட்டையில் மீன் பிடிக்கவா தெரியாது அன்னியருக்கு?அதன் விளைவினை முஸ்லிம்கள் அதிகமுள்ள மேட்டுப் பாளைய நகராட்சியில் நாம் பி.ஜே.பி. வேட்பாளரிடம் தோற்கடிக்கப் பட்டோம் என்றால் கேவலமாகத் தெரியவில்லையா?
அப்படி நடந்த தேர்தலில் நாம் சாதித்தது என்ன? ஒரு சில வார்டு தேர்தலிலும், கிராமப் பஞ்சாயத்துகளிலும் தான் வெற்றிப் பெற்றுள்ளோம். ஏன் இந்த வெக்கக் கேடு. ஏழு சதவீதம் உள்ள நாம் இணைந்து ஒரு கூட்டமைப்பு ஏற்ப்படுத்தி தேர்தலில் நமக்கென்ற ஒரு தனி அங்கீகாரம் பெற முடியாதா? இன்று பெரும்பாலான சமுதாய இயக்கங்களில் இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். அந்த இளைஞர் பட்டாளத்தினை ஒன்று திரட்டி, ஓர் அணியினை உருவாக்கக் கூடாது? பலர் இணைய தளங்களில் அதற்க்கான கட்டுரைகள் எழுதுகிறார்கள். ஆனால் பூனைக்கு மணி கட்ட யாரும் முன் வரவில்லையே ஏன் என்று உங்களுக்கு ஆச்சரியமாகத் தோணவில்லையா? காரணம் அந்த சமுதாய அரசியல் கட்சிகளிடம் இருக்கின்ற சிலரின் வரட்டுக் கௌரவமே காரணம் என்றால் மிகையாகாது. ஆகவே பொய்யான வரட்டுக் கௌரவத்தினை விட்டு சமுதாய நலன் கருது சமுதாய ஒருங்கிணைப்புக் குழு ஒன்றினை மாநிலத்திலும், மாவட்டத்திலும், நகரங்களிலும், ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஏற்ப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். நாம் அடுத்துவர்களுக்கு வெண்சாமரம் இனி மேலும் வீசத் தான் வேண்டுமா, கஷ்டப்பட்டு சம்பாதித்த நாலு காசுகளை மார்கத்துக்குப் புறம்பான காரியங்களில் நான் முன்பு குறிப்பிட்டதுபோல வீண் செலவு செயத் தான் வேண்டுமா, அதனை ஏழை எளிய சமுதாய மக்களுக்கு வழங்கினால் என்ன என்று சிந்திக்க வேண்டாமா சொந்தங்களே?

Saturday 15 October, 2011

இளம் சிட்டுகளின் தடம் புரண்ட வாழ்க்கை!

நான் 1.10.2010 அன்று இளையங்குடியிக்கு சென்டிருந்தபோது பேஷ் இமாம் அவர்கள், 'சார், நீங்கள் பல கட்டுரைகள் எழுகிறீர்கள், ஆனால் சமீப காலமாக நமது சமுதாயத்தில் இளம் பெண்கள் வழி தவறிப் போகிரதினை தடுக்க கட்டுரைகள் எழுதுங்கள் என்றார்'. அவர் கூறிய சொற்கள் என் காதுகளில் ரீங்காரம் இட்டபோது உண்மையில் நடந்த நிகழ்ச்சியினை உதாரணமாக வைத்து இந்தக் கட்டுரையினை வடித்துள்ளேன்!
சமீப கால செய்திகளில் அதிகமாக அடிபடுவது காதல் மற்றும் காமம் பற்றிய செய்திகள் தான். ஆண், பெண் பழகும் இடங்களான கல்வி நிலையங்கள், வேலைபார்க்கும் அலுவலகங்கள், குடும்பத்தினைப் பிரிந்து வாழும் விடுதிகள் இளம் சிட்டுகள், தங்களுக்குக் கிடைக்கும் இனக்கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு, வரட்டுத் துணிச்சலுடன் திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணத்திற்குப் பின்போ கற்பினை இழக்கும் சோகக் கதையினை நாள் தோறும் வந்த வண்ணம் இருகின்றது. ஆரம்பத்தில் காதலில் ஊஞ்சலாடும் உள்ளம் காதல் தடம் புரண்டு மானம் கப்பலேறுவது அவர்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. மாறாக அவர்கள் குடும்பத்திற்கும் இழுக்கு ஏற்படுத்துகிறது என்று அவர்கள் ஆரம்பத்தில் உணருவதில்லை. வெள்ளம் தலைக்கு மேல் போனபின்பு தான் கண்ணை மறைத்திருந்த காதல் பித்து தெளிவடைகிறது.
2011 செப்டம்பர் கடைசி வாரத்தில் செய்திகளில் பரபரப்பான வந்த தகவல் கேரளா மாநிலம் மூணாறில் விடுதியில் மூன்று நாட்கள் தங்கியிருந்த இளம் ஜோடிகளில் பெண் கழுத்தினை அறுத்து கொலை செய்யப் பட்டு இறந்தது தெரிய வந்ததும், அந்தப் பெண்ணோடு தங்கி இருந்த ஆண் தலை மறைவான செய்தியும் வந்தன. போலீஸ் விசாரணையில் அந்தப் பெண் சென்னை கால் சென்டரில் வேலை பார்த்த ஷமிலா என்றும் அவருடன் தங்கி இருந்தவர் அவருடைய காதல் கணவர் மகேஷ் தலை மறைவாகி விட்டதாகவும் மறு தகவல் வந்தது. சிறிது நாள் கழித்து மகேஷும் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் மணியக்காரன் பட்டியில் மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதெல்லாம் செய்திகள். ஆனால் அதில் என்ன சுவாரிஸ்யமான விஷயம் என்ன வென்றால் அவர் தனது காதல் மனைவி பற்றி எழுதி வைத்திருந்த கடிதம் தான்.
தான் கைபிடித்தவளுக்காக தன் பெற்றோர்களை புறக்கணித்தார் அந்த மகேஷ். அப்படிப் பட்டவருக்கு கிடைத்த பரிசு தன் காதல் மனைவி செய்த நம்பிக்கை மோசம். மகேஷ் தான் இறக்குமுன் போலிசுக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:
படித்த பெண்கள் தங்களை முழுமையாக வெளி நாட்டுக் கலாச்சாரத்திற்கு தங்களை மாற்றிகொள்கிறார்கள். வாழ்கையே வெறும் இன்பத்திற்காகத் தான் என நினைக்கின்றார்கள். அவர்களுக்கு உண்மையான, உணர்வுப் பூர்வமான உணர்வு தேவையில்லை. அவர்களுக்கு கலாச்சாரம், கணவர், சமூகம், குடும்பம் என்ற கவலையே கிடையாது. படிப்பு, பணம், கொஞ்சம் அழகு இருந்தால் போதும் எதுவும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது. எல்ல பந்த பாசத்தினையும் மறந்து குறுகிய காலத்தில் தங்கள் வாழ்க்கையினை அவர்களே தேடிக் கொள்கிறார்கள். அந்த காதல் கணவரை விட்டுவிட்டு பத்துப் பேர்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக சொல்லி அவர்கள் பெயர்களையும் சொல்லி அதற்கு ஆதாரமாக தன் மனைவியின் செல் போனுக்கு வந்த அழைப்புகளையும் பேஸ்புக் இணைய தளத்தில் வந்த தகவல் பரிமாற்றங்களையும் ஆதாரமாக காட்டியுள்ளார். இதனை நான் எதற்கு இங்கே குறுப்பிடுகிறேன் என்றால் பெண்கள் வெகு சீக்கிரத்தில் தங்கள் உணர்வுகளுக்கு அடிமை ஆகி விடுகிறார்கள்.
அடிப்படை கோளாறு: நான் மேலே குறிப்பிட்ட செய்தி ஒரு சம்பவமாக பார்க்காது இன்றைய வெளிநாட்டு மோகத்தால் ஏற்படும் தப்பு தாளங்கள் என்று எடுத்துக் கொண்டு அதனை களைய அனைவரும் முயற்ச்சி செய்ய வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்களுடைய தேவைகளை எல்லாம் சுருக்கிக் கொண்டு, சிறு துன்பமும் இல்லாது செல்லமாக வளர்க்கின்றார்கள். அனால் அந்தக் குழந்தைகள் பெரியவ்ரானதுடன் தங்களுடைய பாரம்பரியம் என்னவென்று அறியாமல் வாழ்க்கை முடிவுகளை சுயமாக அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். அப்படிப் பட்ட இளசுகளுக்கு அருகில் உள்ளது கள்ளிச்செடி என்று தெரிவதில்லை. மாறாக அவைகள் தாங்கள் சுற்றிக்கொள்ள விரும்பும் துணையாக எண்ணுகிறார்கள். அனால் அவைகளைத் தெரியாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மேலை நாட்டு நாகரியத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ தூபம் போடுகிறார்கள்.

ஒரு உண்மை நிகழ்ச்சியினை சொல்ல ஆசைப்படுகிறேன். பத்தாவது படிக்கும் ஜரினா என்ற சிறுமி அவள் பெற்றோருக்குச் செல்லப்பிள்ளை. அவளுடைய பிறந்த தின விழா முன்னிட்டு தனக்கு தன தோழிகளெல்லாம் வைத்திருப்பது போல ஒரு செல் போன் வேண்டும் என்று தன் பெற்றோரை நச்சரித்திருக்கிறாள். தன் செல்ல மகள் விருப்பப் பட்டுக் கேட்கின்றாலே என்று அந்த அப்பாவி பெற்றோரும் ஒரு செல் போன் வாங்கிக் கொடுகின்றார்கள். அனால் போன் வாங்கியதும் அவளுடைய நடை உடை பாவனை பேச்சு அதனையும் மாறிவிட்டது. அன்பான பெற்றோர்களிடம் கூட பேசுவதினைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விட்டாள். பெரும்பாலான நேரங்களில் அவள் படுக்கை அறையுலும் பாத் ரூமிலுமே அவள் காலத்தினை கழித்தால். அவள் படிப்பின் பிடிப்பும், பாசப் பிடிப்பும் பாழாகி விட்டது. அதற்கான காரணத்தினை அறியும் பொருட்டு அவளை ஒரு மனோதுத்துவ டாக்டரிடம் அழைத்துச்சென்றார்கள். அந்த டாக்டர் முதலில் செய்த காரியம் அவள் செல் போனை வாங்கி சோதனை செய்தபோது ஜரினா ஒரு ஆண் நண்பருடன் தொடர்பு வைத்து பள்ளிக்குச் செல்லாமல் அவனுடன் ஊர் சுற்றியது தெரிந்தது. அதன் பின்பு அந்த டாக்டரும் பெற்றோரும் நல் அறிவுரைகளை எடுத்துச் சொல்லியும் அந்த பையனை கண்டித்து அவனுடன் உள்ள தொடர்பையும் துண்டித்ததால் இன்று அவள் தன் படிப்பினை நல்ல முறையில் பின்பற்றுகிறாள், பெற்றோரிடமும் பாசத்துடன் பழகுகிறாள்.
இதுபோன்ற சம்பவம் தனிப் பட்டதா என்றால் இல்லையே! சென்னையிலுள்ள ஸ்கூல் ஆப் ஒர்க்ஸ் என்ற கல்லூரியில் ஒரு சர்வே சமீபத்தில் நடத்தி அதற்கான ஆய்வு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள். அதில் பெரும்பாலான செல் போன் அதிக நேரம் உபயோஹிக்கும் பையன்களும் சிறுமிகளும் மனோதுத்துவ பிரச்சனைகளுக்கு ஆளாகி விடுவதாக கூறுகிறார்கள். அதில் 33 விழுக்காடு சிறுமிகள் தங்களுடைய பெற்றோர்களிடம் அதிக நேரத்தினை செலவிடுவதில்லை என்றும், செல் போனிலே காலம் கழிப்பதாக சொல்கிறார்கள். 40 விழுக்காடு குழைந்தைகள் தங்கள் செல் போனை அரைமணிக்கு ஒரு தடவை செக் செய்வதாக சொல்கிறார்கள். ஒரு மனோதத்துவ டாக்டர் நம்பி கூறும்போது பதிமூன்று வயதிற்க்குக் குறைவான சிறுவர் சிறுமியர் கூட செல் போன் தொடர்பால் பாதிக்கப் பட்டவர்கள் வருவதினை பார்க்க பாவமாகவும், பரிதாபமாகவும் இருப்பதாக சொல்லுகிறார்.
சென்னை மண்ணடியில் வாழும் சிலர் கோட்டை எதிரில் உள்ள பூங்காவிற்கு அதிகாலை நடைப்பயிர்ச்சிக்கு செல்லவது வழக்கம். ஒருநாள் ஒரு புர்கா அணிந்த மாணவி தன் பள்ளி பையுடன் வேற்று மத வாலிபரோடு அந்தப் பார்க்குக்கு வந்து புர்கவை களைந்து வைத்து விட்டு அந்த வாலிபரின் கரங்களில் தஞ்சம் புகுந்து சல்லாபத்தில் திளைத்திருந்தால் . அதனை அறிந்த எங்களின் நண்பர் ஆறுமுகம் அந்த மாணவியிடம் சென்று கடிந்து விரட்டிவிட்டார். இதனை நான் எதற்காக சொல்கிறேனென்றால் பெற்றோர் தன் பிள்ளைகள் மேல் கல்வி படிக்க வேண்டும் என்று வாயை கட்டி வயித்தைக் கட்டி படிக்க வைக்கிறார்கள். ஆனால் அந்த குழந்தைகள் ஒழுங்காக பள்ளி செல்கின்றார்களா என்று கவனிக்க தவறி விடுகிறார்கள்.
2) பிள்ளைகள் நவீன கல்வி பெற இன்டர்நெட் வசதியுடன் கூடிய அதிக திறன் வாய்ந்த கணினியினை வாங்கிக் கொடுக்கிறார்கள் ஆனால் தங்கள் பிள்ளைகள் அந்த கணினிதான் உலகம் என்று முடங்கிக் கிடக்கும்போது கண்டிக்க தவறி விடுகிறார்கள். அந்த கணினியில் தன் செல்லக் குழந்தைகள் என்ன அப்படி செய்கிறார்கள் என்று அறியாமையினால் அந்தக் குழந்தைகள் தடம் மாறும்போது தெரிவதில்லை. பெற்றோர்களும் கணினியின் ஆரம்பக் கல்வி கற்க வேண்டும்.
3) பிள்ளைகள் உலகக் கல்வி பெற்றால் போதும் மர்க்க கல்வி தேவையில்லை என்ற ஒரு தவறான நிலைப்பாடு சில பணக்காரர்களிடம் இருப்பதினால் பல குழந்தைகள் வெளிநாட்டுக் கலாச்சாரத்தில் சீரழிந்து விடுகின்றனர். ஆகவே உலகக் கல்வியோடு மார்க்க கல்வியும், நல் ஒழுக்க போதனைகளும் வீட்டிலுள்ள பெரியோர் போதிக்க வேண்டும்.
4) பல மத குடும்பங்கள் ஒரு இடத்தில் வாழும் இந்த உலகத்தில் ஆண்களுடன் பெண்கள் சகசமாக குடும்ப நண்பர் என்ற போர்வையில் பழக விடக் கூடாது.
5) பிறந்த நாள் விழா மற்றும் குடும்ப விழாக்களில் வயது வந்த பெண்களை அழைத்துச் செல்லக்கூடாது.
6) டிவி மற்றும் கம்ப்யுட்டரினை பிள்ளைகள் படுக்கை அறைகளில் வைக்காது பொது அறையில் வைக்க வேண்டும். கணினியில் ஆடல் பாடல் ஆடம் பாட்டம் கொண்டாட்டம் என்ற போர்வையில் டிவியில் ஒளி பரப்பப் படும் ஆபாச காட்ச்சிகளை கண்டிப்பாக பிள்ளைகளுடன் அமர்ந்து பார்க்ககூடாது.
7) குழந்தைகள் தங்கம் போன்ற பெற்றோர்களுக்கு பாசமானவர்கள் தான், மறுக்கவில்லை, ஆனால் தங்கக் கம்பியினை நம் கண்ணில் குத்த விடலாமா? ஆகவே பாசம் உள்ள தாய்மார்களும், அரவணைப்புகொண்ட தந்தைமார்களும், அன்புடைய உடன் பிறப்புகளும், கண்ணியம் காக்கும் சமுதாய இயக்கங்களும் ஈமானை இழந்து, பண்பாடுகளுக்கு விடைகொடுத்து காதல் மோகத்தில் அற்ப சுகம் கிடைக்கும் என்று பக்குவமில்லாத பருவத்தில் வாழ்வினைத் துளைக்கும் வருங்கால சிறுவர்கள், சிறுமிகளை மனம் போன போக்கில் சீரழிய விடலாமா?

Sunday 9 October, 2011

வாழ்க்கை காலச்சக்கரம் சுழல்வது உங்கள் கையில்!

ஒரு ரயில் தன் இலக்கினை நோக்கி நகர்வதிற்கு சக்கரங்கள் தேவைபடுகின்றனவல்லவா? அதேபோன்று ஒரு மனிதன் தன் வழக்கை வெற்றிப் பாதையில் நடை போடுவதிற்கு அடித்தளமாக குறிகோள்கள் தேவைப்படுகின்றன.ஒரு தடகள வீரர் ஒலிம்பிக்கில் 10000
மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்திருக்கலாம், ஆனால் அவன் ஒலிம்பிக்கில் ஓடுவதிற்க்காக எடுத்துக்கொண்ட பயிற்சியும் முயற்சியுமே பிரதானமாகும்.நாம் சிறியவர்களாக இருந்தபோது சைக்கிள் பழகும்போது கீழே விழுந்து கை, கால்களில் அடிபடுகிறது. அதற்காக சைக்கிள் பழகாமல் இருந்து விடுகிறோமா என்ன?
அதேபோன்று தான் ஒரு மனிதன் தனது குறிக்கோளினை நோக்கி பயணம் செய்யும்போது தடைகள் கண்டு மனம் தளராது வீறு நடை போட வேண்டும்.கிராமத்தில் கண்மாய் கரை ஓரத்தில் இருக்கும் ஆல மரத்தினை எடுத்துக் கொள்ளுங்கள், அதன் பழத்தில் இருக்கும் சிறு விதை தரையில் விழுந்து பெரிய மரமாகிறது. அதேபோன்று தான் சிறு முயற்சி வெற்றி வாழ்வில் அடித்தளமாக அமையும்.ஒரு மலையின் உச்சியினை அடைய வேண்டுமென்றால் அதனை சுற்றியுள்ள குன்றுகளை பார்த்து பிரமிக்கக் கூடாது. மலை உச்சியினை அடைந்தே தீருவேன் என்ற மன உறுதி வேண்டும். ஒரு காது கேட்காத மற்று திறனாளிக்கு அவர் மீது பிறர் அள்ளி வீசுகின்ற வசைபாடுகள் மற்றும் கேளிப்பேச்சுகள் அறியாமல் இருப்பதால் தான் அவர் அன்றாட வேலையினை செய்ய முடிகிறது. அவர் காது கேட்கும் திறனிருந்தால் அவர் மீது வீசப்படுகின்ற வசைபடுகளால் ஒடிந்து மூலையில் முடங்கி விடுவார்.
வானத்தில் வட்டமிடும் பறைவைகளை எடுத்துக் கொள்ளுங்கள் அவைகள் தங்களுடைய இறகுகளால் எவ்வளவு தூரம் உயரமாகவும் வேகமாகவும் பறக்க முடியுமோ அதனைப் பொருத்து அது தன் இறைகளை தேடவும் வல்லூருகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளவும் முடியும்.ஆனால் மனிதன் பறப்பதிற்குப் பதிலாக பூமியில் வாழ்கின்றான். அவன் வெற்றிக் கனியினைப் பறிக்க தன் செயல்களில் விரைந்து செயல்பட்டால் வெற்றி இலக்கினை அடைய முடியுமல்லவா?
உங்கள் முயற்சியில் முழுப் பயன் பெற கீழ்க் கண்ட செயல் முறைகள் தேவை:
1) ஒரு கூட்டுக் குடும்பத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை பந்த பாசத்துடன் பழகுவதினை நாம் காணலாம். அதே குடும்பத்தில் இரு சகோதரர்களுக்கிடையே சண்டை வந்து அந்த வீட்டின் நடுவே சுவர் எடுத்தால் அவர்களுக்கிடையேயுள்ள மனக் கசப்பு மேலும் அதிகமாவதுடன், அவர்களுடைய குடும்பதினருக்குள்லேயுள்ள பந்த பந்த பாசமும் அறவே முறிந்து விடும். உதாரணத்திற்கு 1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெர்லின் சுவரால் ஜெர்மானிய மக்கள் மேற்கு கிழக்கு எனப் பிரிந்து வாழ்ந்தனர். பனிப்போர் முடிவுக்கு வந்ததும் அந்த சுவர் இடிக்கப் பட்டதால் இன்று ஒன்று பட்ட ஜெர்மானிய நாடு உலகில் சக்தி வாய்ந்த பெண் ஜனாதிபதியான மார்களினைகொண்டு விளங்குகின்றது. ஆகவே மனிதனின் பந்த பாசத்திற்கு எந்த தடையும் இருக்ககூடாது.
2) உங்கள் வாழ்வு பழமைவாதம், பிற்போக்கு மற்றும் புறையோடியதாக இருக்ககூடாது. புது அனுபவங்கள் மற்றும் புதுமைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.
3) உங்கள் வேலைகளில் அல்லது முயற்சிகளில் உங்கள் குடும்ப உறுப்பினர், சக ஊழியர், வேலையாட்கள் ஆகியோரின் ஒத்துழைப்பினை தேடுங்கள்.
திக்குதெரியாத காட்டில் விடப்பட்ட உங்களுக்கு முயல்கள் பதுங்கும் குழிகள், பதுங்கும் புலிகள், சீரும் பாம்புகள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் பெரிய யானைகளோ அல்லது உயர்ந்த ஒட்டகசிவிங்கிகளோ கண்ணுக்கு தெரியாமலிருக்க நியாயமில்லை. ஆகவே நீங்கள் எடுத்து வைக்கும் அடிகளை அளந்து வையுங்கள்.உங்களின் அறியாமையிலிருந்து தெளிவு பெற பிறரால் எடுத்துச் சொல்லப்படும் நல்ல அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது தான் வாழ்க்கையின் விபத்திலிருந்து தப்பிக்க முடியும். அதற்கு ஒரு உதாரணமாக 11.9.2011 இல் நீயுயார்க் உலக வர்த்தக மைய விமான தாக்குதல் நேரத்தில் நடந்த ஒரு சம்பவத்தினை சொல்லாலம் என நினைக்கின்றேன். 47 வது வட பகுதியின் தளத்தில் உள்ள பர்ஸ்ட் யூனியன் வங்கியில் வேலை பார்த்த நியூ ஜெர்செயினைச் சார்ந்த 49 வயதான ஜோஸ் என்பவர் தான் இருந்த கட்டிடத்தினை விமானம் தாக்கியதும் லிப்ட் வேலை செய்யததால் மாடிப் படி வழியே இறங்க ஆரம்பித்தார். தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால் சில வேலையாட்கள் வர மறுத்து லிப்ட் இயங்கும் என எதிர் பார்த்து நின்றனர். ஜோசுவுடன் வந்தவர்கள் மாடிபடியே இறங்கி கீழே வருவதற்கும் வர்த்தக மையம் முழுமையாக கீழே விழுவதிற்கும் சரியாக இருந்ததாக அவர் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். இது எதனைக் காட்டுகின்றது என்றால் நல்ல போதனைகளை நாம் ஒருபோதும் நிரகரிகக்கூடாது என்று இந்த சம்பவம் விளக்குகின்றதல்லவா?மனிதன் முன்னேற மனக்கிளர்ச்சி உந்துதல் வேண்டும். அப்போதுதான் ஒரு வெற்றிகரமான செயலை செய்ய முடியும். பல ஆண்டுகளுக்கு முன்னாள் ராமேஸ்வரம் தீவாக இருந்தது. அதனை தமிழ்நாட்டுடன் இணைத்து போக்கு வரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று ஆட்சியாளர்கள் நினைத்ததால் ஒரு பாம்பன் கடல் பாலம் உருவானது. அதேபோன்று தான் எந்த திட்டமும் செயல் படுத்த மன ஆர்வம் வேண்டும். ஒருவனுடைய வெற்றிபயணம் அவனுக்கு ஏற்படும் எதிர்ப்புகளை நேருக்கு நேர் சந்திப்பதில் அடங்கும். உங்கள் நடை முறைகளை மாற்றினால் உங்கள் எண்ணங்களை மாற்றலாம். எந்த வெற்றியும் ஒருவனுடைய குறிக்கோளின் முடிவாகாது. மாறாக அவனுடைய முயற்சிகளின் அடிகள் தான் முக்கியமாகும். ஜமைகா ஒலிம்பிக் ஓட்ட வீரர் ஹுசைன் போல்ட் நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் விசில் அடிப்பதிற்கு முன்பே ஓட எத்தநித்ததால் அந்த போட்டியில் ஓடும் தகுதியினை இழந்தார். அனால் தான் இருநூறு மீட்டர் ஓட்டத்தில் வெல்வேன் என்று சபதம் எடுத்து ஓடி வெற்றி பெட்டதோடு மட்டுமல்லாமல் நானூறு மீட்டர் ரிலே ஓட்டபந்தயத்தில் 37.04 வினாடி எடுத்து புதிய சாதனைப் படைத்தார். ஆகவே போல்ட் வெற்றிபெற எடுத்துக் கொண்ட முயற்சியே மேலானது.
உங்களுடைய வெற்றிக்கான முயற்சிகளுக்கு நேரம், காலம் பார்த்து காலவரையின்றி காத்திருக்க வேண்டாம். எண்ணிய உடனே செயலில் இறங்க தயக்கம் காட்டக் கூடாது. உலகில் வெறுப்பு , யுத்தம் , சாவு, நோய், பிணி, தனிமை,இழப்பு இன்னும் பல தடங்கள் நம்மை எதிர் நோக்கும். அவைகளை எதிர் கொள்ளுவதே வெற்றியினைக் கொடுக்கும். ஒரு மல்லிகை செடி வளர்க்க ஆசைப்பட்டு செடி வாங்கி வந்து தொட்டியில் நட்டு தண்ணீர் ஊற்றிய பின்பு அதனை பராமரிக்காமல் விட்டு விட்டால் அந்த செடி வாடி விடுமல்லவா? அதேபோன்று தான் முயற்சியில் பல சங்கடம் இருக்கின்றது என எண்ணி செயலில் இறங்காமல் வாழா இருக்கக்கூடாது. உலக மிடில் குத்துச் சண்டை வீரர் ரேயிடம் 2001 ஆம் ஆண்டு ஒரு நிருபர், 'எவ்வாறு எதிரி விட்ட அதனை குத்க்களையும் தாங்கினீர்கள்' என்று கேட்டார். அதற்கு ரே சொன்னார், 'பந்து அடிக்க அடிக்கத்தான் மேலே எழும் அதுபோன்று தான் நானும் அடி வாங்கி அடி வாங்கி ரோசப்பட்டு ஆக்ரோசமாக விட்ட குத்தில் எதிரியினை வீழ்த்தினேன்' என்று. அதேபோன்று தான் முயற்சிகளில் ஏற்படும் இடர்ப்பாடுகள் தனக்கு ஏற்படும் முடிவு என எண்ணாமல், அந்த இடர்பாடுகள் தனது வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளம் என்று எண்ணி செயலில் இறங்கினால் வாழ்வின் காலச்சக்கரம் சுழல்வது மிகவும் எளிதாகும் என்றால் மிகையாகாது!

Tuesday 20 September, 2011

நான் கண்ட வள்ளல் சீதக்காதி, பி.எஸ்.ஏ.

வரலாறு மாணவனாக சென்னை புதுக் கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியிலும் பயிலும் பொது கீழக்கரை சீதக்காதியின் வள்ளல் தன்மையினை படித்திருக்கிறேன், அனால் என் வாழ்க்கையில் கண்ணாரப் பார்த்த வள்ளல் சீதக்காதி ஒருவர் இருகின்றார் என்றால் அவர் தான் பெரியவர் பி.எஸ்.ஏ.
இணைந்த இராமநாதபுரம் மாவட்டம் கடற்க்கரை ஓரம் கீழக்கரையில் பிறந்து திரைகடல் ஓடி திரவியம் சேர்த்து எண்ணற்ற முஸ்லிம்கள் மட்டுமல்லாது பிற சமூகத்தினருக்கும் வேலைவாய்ப்பினை தந்து அவர்கள் குடும்பத்தில் விளக்கேற்றி வைத்துள்ள ஒளிவிளக்கு அவர்.
எங்கள் ஊர் இளையான்குடி மக்கள் பி.எஸ்.ஏ. கம்பெனியால் பயன் பெற்று வசதி வாய்ப்புடன் வாழ்கின்றதினை நான் கண்கூடாக காண்கிறேன்.
பி.எஸ்.ஏ.வினை நேரில் பார்க்கும் வாய்ப்பு 1946 ஆம் ஆண்டு பிறந்த எனக்கு 1983 இல் கிடைத்தது. அப்போது நான் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பீ. ஆகா பணியாற்றினேன். திருசெந்தூர் சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவித்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் சூடு பறக்க ஈடு பட்டிருந்த நேரம். குலசேகரபட்டினம் என்ற ஊரில் ஒரு இரவு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். பேசுவதாக இருந்ததால் நான் நேரடி பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தேன். எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்து பேசிகொண்டிருந்தார். அப்போது ஒரு நபர்(பின்பு தெரிந்து கொண்ட உடன்குடி தாஹா) வந்து உங்களுக்குத் தெரிந்த ஒரு பெரியவர் கூப்பிடுகிறார் என்றார். உடனே அவர் யார் என்று பார்ப்பதிற்காக அவரிடம் சென்றேன். கூடத்தின் ஒரு மூலையில் பொன் நிறத்தில் தற்போதைய இஸ்ரேயில் பிரதமர் நத்னாயகு போன்று இருந்த பி.எஸ்.ஏ.வினை முதன் முதலில் பார்த்தேன்.,
என்னை எந்த ஊர் என்றுக் கேட்டார். நான் இளையான்குடி என்றதும் அடே நம்ம மாவட்டம் என்றதோடு மட்டுமல்லாமல் எங்கலூரைச்சர்ந்த அவரிடம் வேலைப் பார்த்த யாசின் அவர் தம்பி தெரியுமா என்று கேட்டார். நான் அவர்கள் என் வீட்டு அருகில் உள்ளவர்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மேடை அருகில் சென்று விட்டேன். கூட்டம் முடிந்ததும் எம்.ஜி.ஆர். ஒரு பக்கம் காரில் ஏறினர் மறு பக்கம் பி.எஸ்.ஏ. ஏறியது கண்டு ஆச்சரியப் பட்டேன். அவரை இரண்டாவதாக சந்திக்கும் வாய்ப்பு 1985 ஆம் ஆண்டு கிடைத்தது.
விருந்தோம்பலுக்கு முன்மாதிரி
1985 ஆம் வருடம் நான் ஏ.டி.எஸ்.பி யாக ஊட்டியில் பணியாற்றினேன். எனது அலுவல் காரணமாக சென்னை சென்றேன். வெள்ளி ஜும்மா தொழுவதிற்கு அண்ணா சாலையிலுள்ள மக்கா மஸ்ஜித் சென்றேன். தொழுது முடிந்ததும் வெளியே வரும்போது பி.எஸ்.ஏ. மஸ்ஜித் நிர்வாகக் கமிட்டியிடம் பள்ளியினை புதுப்பிற்க ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் எங்கே வந்தீர்கள் என்று கேட்டுவிட்டு அங்கிருந்த மெஜெஸ்டிக் கரீம் மற்றும் நிர்வாகத்தினரிடம் அறிமுகப் படுத்தி விட்டு காரில் ஏறுங்கள் என்று அழைத்துக் கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள அவர் வீட்டுக்கு வந்து சாப்பாடு வைக்கச் சொன்னார். கறி சாப்பாடு பரிமாரிகொண்டிருண்டபோது பிரிட்ஜில் உள்ள நேற்றைய மீன் குழம்பையும் சூடு பண்ணி வைக்கச் சொல்லி தானே எடுத்து வைத்தார்.
1996 ஆம் ஆண்டு நான் குடும்பத்துடன் டெல்லி சென்றபோதும், 1999 ஆம் ஆண்டு அலுவல் காரணமாக மக்கா, மதீனா சென்றபோது பி.எஸ்.ஏ சென்னையில் இல்லை. அவருடைய பி.ஏ. ஹசனிடம் சொல்லி விட்டுச் சென்றேன். எங்களுடைய பயணம் ஹசன் மூலம் அறிந்து தேவையான உதவிகளைச் அங்கெல்லாம் செய்தார்.
1999 ஆம் ஆண்டு அவருடைய கூடுவான்சேரியிலுள்ள பண்ணை வீட்டுக்கு அபுல் ஹசன் ஐ.ஏ.எஸ், அலாவுதீன் ஐ.ஏ.எஸ் மற்றும் என் குடும்பத்தினரை ஒரு நாள் அழைத்திருந்தார்கள்.நாங்கள் அங்கு சென்றோம். குழந்தைகளை கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை, மீன் தொட்டிகளை சுற்றிக் காட்டினார்கள். பின்பு எனது மகன்களை குதிரை சவாரி செய்யச் சொன்னார். அங்குள்ள சிறிய நீச்சல் குளத்தில் குளிப்போமா என்று அழைத்துக்கொண்டு சிறு பிள்ளைபோல் நீச்சலடித்தார். மதிய சாப்பாடு ஆண்களும் குழந்தைகளும் ஒரு இடத்திலும் பெண்கள் ஒரு இடத்திலும் சாப்பிடும் போது இடையில் எழுந்து பெண்கள் சாப்பிடும் இடத்திற்குச் சென்று அவர்களிடம் கூச்சல்லாமல் சாப்பிடுங்கள் என்றும் சொல்லி வந்தார். அங்கிருந்து நாங்கள் கிளம்பும் போது எவ்வளவு பெரிய மனிதர் குழந்தைகள் முதல் பெண்கள் வரை மிகவும் எளிமையாக அன்புடன் விருந்தோம்பல் செய்கின்றாரே என்று நாங்கள் வியப்படைந்தோம் . ஆகவே தான் சொன்னேன் அவர் விருந்தோம்பலுக்கும் முன்மாதரி என்று.
பிற்பட்டோர் கல்வித்தந்தை:
ஒருங்கிணைத்த இராமநாதபுர மாவட்டம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பபில் மிகவும் பின் தங்கியது. அதுவும் பெண் கல்வியில் மிக, மிக பின் தங்கியது. ஆகையால் கீழக்கரையில் பெண்களுக்கான கல்லூரியினை நிறுவினார். அது மட்டுமல்லாமல் மதுரை மட்டும் நாகூரில் கல்லூரிகள் வரக் காரண கர்த்தாவாக இருந்தார். அது மட்டுமல்லாமல் அனாதை சிறுவர்களுக்கான இல்லங்களை மதுரை, ஓட்டபிடாரம், சக்கரைக்கோட்டை ஆகிய இடங்களில் நிறுவினார். என்னிடம் எப்போதும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேற வேண்டும் என அடிக்கடி சொல்லுவார். தன்னிடம் கல்விக்காக உதவி கேட்டு வருபவர்களை வெறுங்கையோடு ஒருபோதும் அனுப்பியதில்லை என்று 3 உதாரணத்தினை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.
1) இளையங்குடியில் கல்லூரி ஆரம்பிக்க காரண கர்த்தாவாக இருந்தவர்களில் நானும் ஒருவனாவேன். எனது உறவினரும் எங்களூர் கல்வித் தந்தையுமான அமீன் நைனார் ஹௌத் அவர்கள் பி.எஸ்.ஏ. அவார்களை 1971 ஆம் ஆண்டு சந்தித்து கல்லூரிக்கு உதவிக் கேட்டுள்ளார். பி.எஸ்.ஏ. எப்போதும் உதவி கேட்டு வரும் நபர்களை எடை போட தயங்க மாட்டார். பி.எஸ்.ஏ. அவர்கள் ஒரு சிறு தொகையினை சொல்லி அதுதான் தர முடியும் எனச் சொல்லி உள்ளார். உடனே நைனார் கோவித்துக்கொண்டு உங்க காசு எங்களுக்கு வேண்டாம் என்று கோபமாக சொல்லி விட்டு வெளியே செல்ல கதவு வரை சென்ற வரைக் கூப்பிட்டு சமாதானமாக என்னிடம் எவ்வளவு எதிர் பார்த்து வந்தீர்கள் என்று கேட்டு விட்டு நைனார் கேட்ட தொகையினை உடனே கொடுத்து அனுப்பியதாக நைனார் மட்டுமல்ல பி.எஸ்.ஏவும் சொல்லக் கேட்டுள்ளேன்.
2) 1999 ஆம் ஆண்டு இளையான்குடி கல்லூரிக்கு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுத்து அதன் நிர்வாகிகள் கல்லூரியில் ஒரு லேப் கட்ட தீர்மானித்து பி.எஸ்.ஏவினை அணுகலாம் என என்னிடம் செயலாளர் அப்துல் கரீம் தலைமையில் வந்தார்கள். நான் மதியெம் ஒரு மணிக்கு எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் அவர்களைக் கூட்டி கொண்டு புஹாரியா கட்டிடத்திற்குச் சென்றேன். பி.ஏ. ஹசன் 'சார், இப்போது பெரியார்கள் போர்டு மீடிங்கில் இருக்கிறார்கள், மீட்டிங் முடிந்ததும் அனைவருக்கும் இங்கேயே சாப்பாடு ஏற்ப்பாடு செய்யப் பட்டுள்ளது. ஆகவே இன்று சந்திப்பது முடியாது என்று சொல்லி விட்டார். நான் பிடிவாதமாக ஊரிலிருந்து பத்து பேர் வந்துள்ளார்கள் அவர்களை ஏமாற்றத்துடன் அனுப்ப முடியாது மறுத்து நாங்கள் மீட்டிங் முடியும் வரை நிற்கின்றோம், எங்களைப் பார்த்தால் சரி அல்லது போய் விடுகிறோம் என்றேன். மீட்டிங் சரியாக இரண்டரை மணிக்கு முடிந்தது. நான் மீட்டிங் அறைக்கு முன்னே நின்று கொண்டேன். பி.எஸ்.ஏவினைத் தொடர்ந்து அனைவரும் வந்தார்கள். என்னைப் பார்த்ததும் என்ன போலீஸ் காரர் வந்திருக்கார் கூட்டத்தோட நம்மை கைது செய்ய வந்திருக்கிறார என்று சொல்ல கேலியாக அனைவரும் சிரித்து விட்டார்கள் . பின்பு எ
ன்ன விஷயம், நாங்கள் சாப்பிடப் போறோமே என்றுக் கேட்டார். நான் உங்களை கல்லூரி நிர்வாகிகள் மரியாதை நிமித்தம் பார்க்க வேண்டும் ஒரு நிமிடம் தாங்கள் என்றேன். அவரும் சரியென்று அறைக்குள் அழைத்துச் சென்றார். உடனே இதுதான் சமயம் என்று பி.எஸ்.ஏவிடம் லேப் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றோம். அவரும் விபரம் கேட்டு விட்டு சரி என்று சொன்னதோடு அல்லாமல் கட்டியும் கொடுத்தார்.
3) என் இரண்டு மகன்களான பைசல் மற்றும் சதக்கத்துல்லாஹ்விற்கு பி.எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில் இலவசமாக இடம் கொடுத்ததினால் இன்று அவர்கள் இன்ஜிநீர்களாக அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார்கள்.
வண்டலூரில் உள்ள கிரசென்ட் பொறியியல் கல்லூரி மூலம் பயன் பெற்று நல்ல வேளையில் இருக்கும் பலரை நான் அமேரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும் சென்றபோது நேரில் கண்டேன். அவர்கள் வாழ்வில் ஒளியேற்றிய பி.எஸ்.ஏ.வின் முயற்சியினை அவர்கள் வாயார புகழக் கேட்டுள்ளேன். ஆகவேதான் பி.எஸ்.ஏ. பிற்பட்டோர் கல்வித் தந்தை என்றேன்.
சமூக சிந்தனை சிற்பி:
இஸ்லாமிய சமுதாயம் பொருளாதரத்தில் முன்னேற வேண்டும் என்று அடிக்கடி சொல்லிகொண்டிருப்பர்கள். அந்த சிந்தனையில் உதித்தது தான் யுனைட்டடு எகோநோமிக் பாரம். அதில் உறுப்பினர்களாக ஒத்தக் கருத்துடையவர்களை உறுப்பினர்களாக சேர்த்து தமிழலகம் எங்கும் சுற்றுப் பயணம் செய்து முஸ்லிம் ஊர்களுக்கு வேண்டிய பொருளுதவி செய்தார்கள். பி.எஸ்.ஏ. சிந்தனையில் முஸ்லிம்களுக்கென்ற தனி பத்திரிக்கை, தொலைக்காட்சி வேண்டும் என்றார். அவருடைய சிந்தனையில் உதித்தது தான் இன்று காணப்படும் பல பத்திரிக்கைகள் மற்றும் மூன் தொலைக்காட்சி என்றால் மிகையாகாது.
சமுதாயக் காவலர்:
பி.எஸ்.ஏ. எப்படி சமுதாயக் காவலர் என்று ஒரு உண்மை நிகழ்ச்சியினைக் கொண்டு விளக்கலாம் என நினைக்கின்றேன். 1983 திருசெந்தூர் சட்டமன்ற உப தேர்தலில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.ஏ. வந்திருந்தார் என முன்பு சுட்டிக் கட்டினேன். ஒரு இரவு காயல்பட்டினத்தில் எம்.ஜி.ஆர் பேசுவதாக இருந்தது. அங்கே உள்ள சுல்தான் ஹாஜியார் வீட்டில் இரவு விருந்து சாப்பிட்டு விட்டு தனது வாகனத்தில் பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு புறப்படும் முன்பு காயல் மௌலான என்ற கட்சிக் காரர் நீங்கள் தெருக்கள் வழியாக வந்தால் பெண்கள் உங்களைப் பார்க்க ஏதுவாகும் என்றதும் எம்.ஜி.ஆறும் போலிசுக்கு முன் அறிவிப்பின்றி வாகனத்தினை குறுகிய சந்துக்களில் விடச் சொல்லி விட்டார். ஆனால் ஒரு சவுக்கையில் டி.எம்.கே. கூட்டத்தில் அப்துல் சமது, சுப்புலட்சுமி ஆகியோர் அமர்திருன்தனர். எம்.ஜி.ஆர். வாகனம் வருவது அறிந்து டி.எம்.கே. தொண்டர்கள் கல்லெறிய ஆரம்பித்து விட்டார்கள். எம்.ஜி.ஆர். வாகனத்தில் கல்லும் விழுந்து விட்டது. உடனே எம்.ஜி.ஆர். தனது வண்டியினை பின் நோக்கி எடுக்கச் சொல்லி பொதுக்கூட்ட மேடைக்கு வந்து விட்டார். எம்.ஜி.ஆர் வாகனத்தில் கல் விழுந்ததும் ஏ.டி.எம்.கே. தொண்டர்கள் கொதித்தெழுந்து விட
்டார்கள். நிலைமையினை அறிந்து பி.எஸ். ஏ. மேடையில் ஏறி சிலர் தெரியாமல் கல் வீசியதிர்க்காக எம்.ஜி.ஆரிடம் மன்னிப்புக் கேட்பதாக பகிங்கரமாக அறிவித்தார். உடனே எம்.ஜி.ஆர் மைக்கினைப் பிடித்து முஸ்லிம்களைக் காப்பது நமது அரசாங்கத்தின் கடமை ஆகவே ஒரு சிலர் செய்த தப்பிர்க்காக முஸ்லிம் மக்களுக்கு தொண்டர்களால் எந்த தீங்கும் நான் சென்ற பின்பு ஏற்படாது என்று பி.எஸ்.ஏவிடம் உறுதி கூறுகிறேன் என்று தொண்டர்களை அமைதிப் படுத்தினார். இல்லையென்றால் பெரும்பாலான ஆண்கள் வெளி நாட்டில் இருக்கும் பொது பெண்கள் மட்டும் இருக்கும் காயல்பட்டினத்தில் அன்று கலவரம் எற்பட்டிரும். அதனை என்னுடைய, 'காக்கிச் சட்டைப் பேசுகிறது' என்ற புத்தகத்தில் சுட்டிக் காட்டியுள்ளேன்.

இன்னலிலும் இன்முகம் காட்டுபவர்:
பி.எஸ்.ஏவின் வெற்றிக்குப் பின்னணி ஆங்கில எழுத்தாளர் டேல் கார்நேஜ் எழுதிய 'ஹௌ டு வின் பிரெண்ட்ஸ் அண்ட் இன்ப்ளுவன்ஸ் தி பியுப்பில்' என்ற புத்தகத்தில் வெற்றிக்குப் பின்நெனி முகத்தில் புன்னகையும் மனிதர்களிடம் விருப்பு வெறுப்பு இன்றி பழகுவதுதான் என்று சொல்லி உள்ளார். அது பி.எஸ்.ஏக்கு நூறு விதத்தில் பொருந்தும். டிரைவரிலிருந்து பெரிய அதிகாரி வரை அவர் பேச்சில் மயங்கி விடுவார்கள். அதே நேரத்தில் துன்பத்திலும் மனம் தளராதவர் என்பதினை பி.எஸ்.ஏ துணைவியார் இறந்தபோது பார்த்தேன். துக்கம் விசாரிக்க வந்த ஆண் பெண் அத்தனை பேர்களிடமும் சக்கர நார்க்காலியில் உட்கார்ந்து கொண்டு நலம் விசாரித்தார். அது சஞ்சய் காந்தி இறந்ததும் பிரதமர் இந்திரா காந்தி துக்கம் கேட்க வந்த பிரமுகர்களை வரவேற்றது போல இருந்தது.
என் மகன் சதக்கத்துல்லாஹ் திருமண அழைப்பிதழ் 2007 இல் கொடுக்கும்போது படுக்கையில் இருந்தார் பி.எஸ்.ஏ.பத்திரிகையினை வாங்கி படித்துப் பார்த்து விட்டு டி கொடுக்கச்சொல்லி அனுப்பினார். திருமணம் ஹோட்டல் மெரினாவில் இரவில் நடந்தது. நான் நிக்கா மேடையில் இருந்தபோது என் உறவினர் ஓடி வந்து பி.எஸ்.ஏ சக்கர நாற்காலியிலும் அவர் துணைவியாரும் வருகிறார் என்றார். எனக்கு மட்டுமல்லாது அங்கு வந்திருந்த அனைவருக்கும் சந்தோசதினைத் தந்தது. இவ்வளவிற்கும் நான் அப்போது பதவியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். அதோடு அல்லாமல் விருந்தும் சாப்பிட்டுச் சென்றார்கள். இதனை எதற்கு இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் முடியாத நிலையிலும் தனக்குப் பிடித்தவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அங்கு வந்த தெரிந்தவர் அத்தனை பேர்களிடமும் பேசி மகிழ்ந்தார்கள்.
என்னிடம் என் மகன்களில் யார் என்னைப் போல் வருவார்கள் என்று பி.எஸ்.ஏ ஒரு சமயம் கேட்டார்கள். அதற்கு நான் நீங்கள் பெற்றது அனைத்தும் நன் முத்க்கள் அதில் தரம் பிரிக்கும் தகுதி என்னிடம் இல்லையென்றேன். அதுக் கேட்டு வாய் விட்டு சிரித்து விட்டார்கள் பி.எஸ்.ஏ. நான் அவரிடம் நீங்கள் நூறு வயதிற்கு மேல் வாழ்ந்து இந்த சமுதாயத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என்றேன். அதற்கு பி.எஸ்.ஏ. அது அல்லா கையிலல்லவா இருக்கிறது என்றார். இந்த தருணத்தில் சமுதாயத்திற்காக உழைத்த பி.எஸ்.ஏ நல்ல உடல் சுகத்துடன் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வினை வேண்டும் அனைவருடனும் நானும் சேர்ந்து துவாக் கேட்டு விடை பெறுகிறேன்.

Friday 16 September, 2011

இரு ரத யாத்திரை-ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்? (டாக்டர் ஏ.பீ. முஹம்மத் அலி, ஐ.பீ.ஏஎஸ்(ஓ)

சில தினங்களாக பரபரப்பாக பேசப்படும் செய்தி ரத யாத்திரை. அது என்ன ரத யாத்திரை என்று உங்களுக்கு கேட்க தோணும். சங்க காலத்தில் மன்னர்கள் தாங்கள் சொகுசாக சுற்றுபயணத்தின் போது மரத்தால் செய்யப்பட அலங்கரிக்கப்பட்ட வண்டியினை குதுரைகள் கொண்டு இழுக்கச் செய்யும் வாகனமே ரத யாத்திரையாகும். உடனே "ஆமாம் இப்போதுதான் சக்கர வண்டிகள் எல்லாம் மறைந்து சில தினங்களாக பரபரப்பாக பேசப்படும் செய்தி ரத யாத்திரை. அது என்ன ரத யாத்திரை என்று உங்களுக்கு கேட்க தோணும். சங்க காலத்தில் மன்னர்கள் தாங்கள் சொகுசாக சுற்றுபயணத்தின் போது மரத்தால் செய்யப்பட அலங்கரிக்கப்பட்ட வண்டியினை குதுரைகள் கொண்டு இழுக்கச் செய்யும் வாகனமே ரத யாத்திரையாகும். உடனே "ஆமாம் இப்போதுதான் சக்கர வண்டிகள் எல்லாம் மறைந்து பெட்ரோலியம் ப்ரோடக்ட்டுகள் உபயோகித்து வேகமாக செல்லும்
மோட்டார் வாகனங்கள் இருக்கும்போது இது என்ன புதுக்கதை" என்று கேட்கத்தோணும். ஆமாம் எதிகை மோனை இல்லாத புதுகவிதைபோல இதுவும் காவிச்சட்டை தலைவர்கள் கண்டுபிடித்த புதுகதைதான்.

1990ஆம் ஆண்டில் காவிச் சட்டை தலைவர்களால் பாரம்பரியமிக்க பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட துவங்கப்பட்ட ஏர் கண்டிஷன் பொருத்தப்பட்ட சொஹுசு வாகன யாதிரைதான் ரத யாத்திரையாகும்.அயோத்தியில் பாபரி மஸ்ஜிதும் 1992 இல் இடிதாச்சு, அதன் பின்பு மத்தியில் அரியணையிலும் 1996 ஆம் ஆண்டு ஏறியாச்சு. அதன் பின்பு 2002 இல் கோத்ர ரயிலில் தீ பிடித்ததும் மனித வேட்டையில் 2000 முஸ்லிம்களுக்கு மேல் கொன்று குவித்தாச்சு . அப்போதெல்லாம் ரத யாத்திரிகைக்கு வேலையில்லை என நினைத்திப்பிருப்பர்கள் போல இந்த புது காந்தி குள்ள வாதிகள்.குஜராத்தில் போலி என்கவுண்டர் என்ற பெயரில் சொஹ்ரபுட்டின் அவரது மனைவி கவுசர் பீ மற்றும் இஷராத் ஜஹான் போன்ற முஸ்லிம்கள் வேட்டையாடப்பட்ட போது ஹஜாரே என்ன செய்து கொண்டிருந்தார் என்று நாடு நிலையாளர்கள் கேள்வி எழுப்பாமளிலையே!கோத்ரா சம்பவத்திற்கு பின்பு கொல்லப்பட்ட எண்ணற்ற முஸ்லிம்கள் பற்றி விசாரணை நடத்த இப்போது ஹசாரே அணியில் உள்ள பிரபல வக்கீல்கள் சாந்தி பூசனும் அவர் அருமை மகனுமான பிரசாந்த் பூசன் நீதி விசாரணைக் கேட்டு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு ஏதும் தொடுக்கவில்லியே அது ஏன்? ஆனால் மனத் துணிச்சல் உள்ள பெண் வழக்கறிஞர் ச்டீல்வாத் மட்டும் வழக்குத் தொடர்ந்தாரே அது எப்படி என்று பலர் கேட்காமளில்லையே!பல தொண்டு நிறுவனங்களின் நிர்வாகியான ஹசாரே அணியின் கேஜ்ராவாளுக்கு வெளிநாட்டிலுருந்து பெறப்பட்ட பணம் எவ்வளவு என்றோ அல்லது கிரேன்பேடி, கேஜ்ராவால் மற்றும் பூசன் குடும்பச் சொத்தை இதுவரை அறிவிக்கவில்லையே அது ஏன்? அது போன்ற கேள்வி எழக்கரணம் சாந்தி பூசன் முன்னாள் ஜன சங் மத்திய அமைச்சராக இருந்தவர். கிரேன் பேடியும் முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். அதுபோன்று ஹசறேவும் இதுவரை தனது சொத்து பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை என்றே சொள்ளபடுகிறேதே! மத்திய பிரதேச மாநிலத்தில் ப.ஜ.க. தலைவர் ஒருவருக்கு 300 அரசு நிலம் ஒதுக்கப்பட்டதாக செய்திகள் வந்ததே ஏன் அங்கே சென்று ஹசாரே அணி ஆர்பாட்டம் செய்யவில்லை? அது மட்டுமா அந்த மாநிலத்தில் உள்ள முதல்வர் பற்றி செய்தி வெளியிட்ட பெண் நிருபர் ஷீலா மசூது என்பவர் சுட்டுக் கொல்லபட்டரே ஏன் அங்கே சென்று ஆர்ப்பாட்டம் ஹசாரே அணி செய்யவில்லை?
சரி பாபர் மஸ்ஜித் இடிப்பு புகழ் அத்வானி மறுபடியும் ஒரு ரத யாத்திரை என்று கூறியிருக்கிறரே அது ஏன் என்று பாமர மக்கள் கேட்காமலில்லையே! அது தான் காவி உடை நாணயத்தின் மறு பக்கம். கர்நாடகாவில் முதலில் எட்டியூரப்பவிற்கு எதிராக அமைச்சர் ஜனார்தன ரெட்டி மற்றும் அவர் சகோதரர் எதிர்ப்பு தெரிவிக்கும் பொது எட்டியூரப்பாவினை ஏன் ப.ஜ.க பதவி நீக்கம் செய்யவில்லை? எட்டியூரப்பவினை தொடர்ந்து ஜனார்தன ரெட்டியினை சி.பி.ஐ. கைது செய்த உடன் ஏன் அவர்களை கட்சியிலிருந்து நீக்கவில்லை என்று பொது மக்கள் கேட்கவில்லையா? பாராளு மன்றத்தில் ஆயிரம் ரூபாய் கட்டுகளை எடுத்துக் காட்டிய ப.ஜ.க. முன்னால் எம்.பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனரே அதற்கு அத்வானியின் பதில் இது வரை சொல்லவில்லையே? அது ஏன் என்று உங்களுக்கு கேட்கத் தோணுவது இயற்கைதானே!
முன்னால் ப.ஜ.க. தலைவர் பங்காரு லக்ஷ்மணன் கையூட்டுப் பெறும்போது ஒரு டி.வீ. சேனல் படம் போட்டு காட்டியதே அப்போது அவரை கட்சியிலிருந்து ப.ஜ.க. நீக்கியதா இல்லையே? இப்போது கூட டூ ஜி ஊழலில் அருண்குமார் மற்றும் அருண் சோரி பெயர்கள் அடிபடுகிறேதே அவர்களை கட்சி நீக்கியதா, இல்லையே! ஒடிசா மாநிலத்தில் ராஜ்ய சபா தேர்தலில் ஆளும் பி.ஜே.டி கட்சியுடன் சேர்ந்து பணம் கொடுத்து வெற்றி பெட்டதாக கூறப்படுகிறதே அப்படி பணம் வாங்கிய பி.ஜே.பே. எம்.எல்.ஏக்கள் கட்சியினை விட்டு நீகப்பட்டனரா, இல்லையே!மத்திய பிரதேச ப.ஜ.க. அரசு அரசின் 300 ஏக்கர் நிலத்தினை அந்த மாநில ப.ஜ.க தலைவர் நடத்தும் நிறுவனத்திற்கு தாரை வார்த்ததாக ஊடகங்கள் சொன்னதே அப்போது ஏன் எந்த யாத்திரையும் நடத்தவில்லை?
ஒரு ஜனநாயக நாட்டில் பாராளுமன்றம் தான் மிக சக்தி வாய்ந்த மக்கள் பிரதிநித்துவ சபை. அந்த சபை உறுப்பினர்களையே மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததால் ஹஜாரேயின் அணியினரான பிரசாந்த் பூசன், கிரேன் பேடி மற்றும் கேஜ்ராவால் போன்றோருக்கு உரிமை மீறல் பாராளுமன்றத்தில் கொடுக்கப்பட்டதாக ஊடகங்கள் சொல்லுகின்றன. அது எப்படி தவறாகும்? ஒரு நாட்டுக்கொடி மேல்நோக்கிதான் பறக்க விட வேண்டும். ஆனால் கிரேன் பேடி முன்னால் காவல் துறை அதிகாரி. அவர் ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும்போது தேசியக்கொடியினை பெரிய கம்பில் கட்டி கீழ் நோக்கி வீசுவதினை அனைவரும் தொலைகாட்சியில் பார்த்திருக்கலாம். அதனை எப்படி சரி என்று சொல்லாம்? சில ஆயிரம் பேர்களை கூட்டி அவர்களுக்கு சாதகமான காரியம் சாதிக்க நினைத்தால், 15 சதவீத மக்கள் உள்ள முஸ்லிம்கள் பத்து சதவீத ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் ஒதிக்கீடு செய்ய நீதிபதி ரங்கநாத மிஸ்ரா சொல்லியபடி கொடுங்கள் என்று ஏன் முஸ்லிம் தலைவர்களால் சொல்ல முடியவில்லை? காரணம் அந்த தலைவர்களிடையே ஒற்றுமை இல்லையே?
ஹசாரே என்ன நாட்டின் சுதந்தர வீரரா? இல்லையே? ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்று ஊடகங்கள் சொல்கின்றன. அத்வானி நாட்டின் சுதந்திர போராட்ட வீரரா? அவர்களுக்கு ஏன் அந்த முக்கியத்துவம்? 1965 ஆம் ஆண்டு ராணுவத்தில் ஹசாரே போன்று முன்னால் எஸ்.பீ. முஹம்மது இக்பாலும் இருந்து நாட்டுக்காக போராடினார். 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்பதூரில் விடுதலை புலிகள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீது நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிர் நீத்தார். அவரை எந்த அரசும் ஞாபகப் படுத்துகிறதா, இல்லையே! ஏன் இந்த பாரபட்சம்?
ஹசாரே என்ன பேட்டை முதலாளி காயிதே மில்லத் போன்று சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தன் செல்வதினை தொலைத்தவரா? இல்லையே!
அல்லது1924 இல் பள்ளிப் பருவத்தில் மாணவராக இருந்தபோது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதினால் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ஜெயிலில் ஓராண்டு வாடிய தியாகி அப்துல் சலாம் போன்று தியாகம் செய்தாரா? இல்லையே!
ஹசாரே அணியில் இருந்த சுவாமி அக்னிவேஷ் மற்றும் நடுநிலை எழுத்தாளரும், உயர்ந்த மேகசய்சே அவார்ட் வாங்கியவருமான அருந்ததி ராய் முதலில் ஹசாரே அணியில் இருந்தனர் பின் அவரை சில சுயநல வாதிகள் தங்கள் ஆளுகையில் வைத்து அதன் படி ஆட்டி வைத்ததால் ஹசாரே அணியிலிருந்து விலகவில்லையா? அது சரி, குஜராத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதில் ஊழல் நடந்ததாக முன்னாள் முதல்வர் சுரேஷ் மேஹ்தாவும், சடப்பியாஹ்வும் குற்றம் சாடியுள்ளனரே அதனால் தானே குஜராத்தில் ஊழலை விசாரிக்க லோகயுக்தா கவர்னர் நியமித்ததும் எதிர்த்து வழக்கும் தொடர்ந்துள்ளாரே ஏன் அங்கே சென்று அத்வானியும், ஹஜாரேயும் ரத எதிரியோ அல்லது ஆர்ப்பாட்டமோ அல்லது உண்ணாவிரதமோ செய்யவில்லை? முன்பு அத்வானி ரத யாத்திரையும், கரசேவகையும் தடுத்து நிறுத்த உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங்க் போன்ற ஒரு முதல்வரும், லாலுப் பிரசாத் யாதவ் போன்ற பீகார் முதல்வரும் இல்லையே என்ற தைரியத்தில் அத்வானி தனது திட்டத்தினை அறிவித்து விட்டார். அதுபோல ஹஜாரேயும் தனது திட்டத்தினை அறிவித்து விட்டார். அவர்களுடைய திட்டத்தின் பின்னணியில் பல கும்பல் இருக்கிறது என்று கூறப்படுகிறது. குறிப்பாக .ஆர்.எஸ். எஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவின் காங்கிரசில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஹிந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதகவும் ஊடகங்கள் சொல்லுகின்றன. அதற்கு முத்தாப்பு வைத்ததுபோல ஆஜ்மீர்,மலேகான்,ஹைதராபாத் போன்ற இடங்களில் குண்டு வெடிப்புகளில் சம்பத்தப்பட்ட அபினவ் பாரத் என்ற அமைப்பினரின் ஒன்பது பேர்களுடைய ஜாமீன் மனுவினை போலிசார் எதிர்க்க மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆகவே ரத யாத்திரை மூலம் அயோத்தியில் நாசவேலையை நடந்தது போல மறுபடியும் ஒரு நாச வேலை நடக்ககூடாது என்றும் பலரும் எதிர்பார்ப்பது இயற்கைதானே! அதற்குத்தானே மத்திய அரசு மத எதிர்ப்பு தடைச் சட்டம் கொண்டு வருகிறது. அதனை ஏன் ப.ஜ.கவும் அதன் கூட்டணிகளும் எதிர்க்கிறார்கள்.
இரு ரத யாத்திரைகளின் பின்னணியில் மூன்று மறைமுக திட்டம் உள்ளதாக நடுநிலையாளர்கள் எண்ணுகிறார்கள்:
1) 2004 ஆம் ஆண்டினுக்குப் பின்பு மத்தியில் ப.ஜ.க ஆட்சியினைப் பிடிக்க முடியவில்லை. வருகின்ற தேர்தலில் மோடியினை முன் நிறுத்தி ஆகவே இதுபோன்ற ரத யாத்திரை நடத்தி சிருபான்மையினரினைடியே பயத்தினை ஏற்படுத்தி வருகின்ற தேர்தலில் ஆட்சியினை பிடிப்பது.
2) அதன் பின்பு மத சார்பற்ற அரசியலமைப்பினை மாற்றி பெரும்பைமையினர் பயன்படும் மத சார்பான சட்டத்தினை கொண்டு வருவது.
3) அப்படியும் முடியவில்லையென்றால் நாடு முழுவதும் ஹசாரே டெல்லியில் நடத்திய தர்பார் போன்று நாடெங்கும் சடத்தி மத்திய அரசினை மாற்றுவது.
இந்த கருத்திற்கு முத்தாய்ப்பு வைத்ததுபோல அமெரிக்க காங்கிரசின் அறிக்கையில் வலது சாரி ஹிந்து அமைப்புகள் கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் சொல்லுகின்றன. அதற்கு அச்சாரமாக மலேகான், ஆஜ்மீர்,ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் தொடர்புள்ள அபினவ் பாரத் அமைப்பு தீவிரவாதிகளின் ஜாமீன் மனுவினை காவல் துறையினர் எதிர்க்க மாட்டார்கள் என்றும் ஊடகங்கள் சொல்லுகின்றன.
ஆகவேதான் இந்த தேவை இல்லா இரண்டு ரத யாத்திரையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றேன். அது சரிதானே!

Monday 5 September, 2011

கை விடப்படும் குழந்தைகள், கவனிக்குமா சமுதாயம்? டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ .பீ .எஸ் .(ஓ)

ஆறறிவுள்ள மனிதனுக்கு ' திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகிறது'. அந்த பாக்கியம் வில்ங்கினங்களுக்கில்லை.ஆணுக்குப் பெண் இளைப்பாறும் விளை நிலமாக அல்லாஹ்வால் பாரினிலே படைக்கபட்டாள். திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் அன்பு மற்றும் பாச பரிமாற்றத்தால் உண்டாகும் நன் முத்துக்கள் தான் குழந்தை பாக்கியம் என்றால் மிகையாகாது.விதைககபடும் எல்லா நிலங்களிலும் பயிர்கள் உண்டாகாது. அதேபோல் உண்டாகிய அணைத்து பயிர்களும் உயிருடன் நிலைத்து நிற்குமா என்றும் சொல்ல முடியாது. அதே போன்றுதான் தம்பதிகளுக்குப் பிறக்கும் அத்தனை குழந்தைகளும் உயிருடன் வாழ்வார்களா என்றும் அறிதியிட்டு உறுதியாக சொல்ல முடியாது. அடுத்தபடியாக ஓரிரு குழந்தைகள் உள்ளவர்கள் தான் உலகத்தில் வறுமை இல்லாமல் வாழ்வார்கள், அதிக பிள்ளை பெற்றவர்கள் எல்லாம் கஷ்ட கண்ணீர் கடலில் மூழ்குவார்கள் என்றும் சொல்ல முடியாது. ஐந்து அல்லது ஆறு ஆண் மக்களை பெற்ற பெற்றோர்கள் பஞ்சத்தில் துவல்வார்கள் ஆனால் ஏழு எட்டு பெண் மக்களை பெற்றவர்கள் செல்வக்கொளிப்பில் வாழ்வதினை நாம் கண்கூடாக காண்கிறோமல்லவா? அதுபோன்ற பாக்கியம் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருகிருபைதானே?
பெண்ணுக்குத்தான் தெரியும் ஒரு குழந்தையினை பெற்று எடுப்பது எவ்வளவு சிரமமென்று . சில பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்கும் போதே இறந்து விடும் பரிதாப நிகழ்வுகளை நாம் அன்றாட வாழ்வில் காணலாம். ஆகவே சாவின் விளிம்பிலிருந்து குழந்தைகளை பெற்றெடுக்கும் பெற்றோர் அந்தக் குழந்தைகளை ஒழுங்காக பராமரிக்காமல் பராரியாக விடப்பட்ட சில சம்பவங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வரலாம் என நினைக்கின்றேன்.
1)திருநெல்வேலி மாவட்டத்தில் டீக்கடையில் வேலை பார்த்து வந்த செய்யது யூசுபிற்கு இரண்டு பெண் குழந்தைகள். அவருடைய மனைவி பாத்திமா மூன்றாவது குழந்தைக்கு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது யுசுப் தினமும் குதித்துவிட்டு வேலைக்கு வருவதால் அவர் வேலை போய்விட்டது. பாத்திமாவும் அழகான மூன்றாவது பெண் குழந்தையினை பெற்றெடுத்தாள். வீட்டில் விளையாடிய பஞ்சத்தால் மனதினை கல்லாக்கிக் கொண்டு பிறந்தே ஒருமாத பெண் குழந்தையினை தாய் பாதிமவிற்குத் தெரியாமல் மும்பை வியாபாரிக்கு ரூ 40000/ விளை பேசி விற்றுவிட்டார். பெற்ற மனது பொறுக்குமா? கொதித்தெழுந்தாள் பாத்திமா. விளைவு காவல்துறையினரிடம் புகார் சென்றது. காவல்துறையினர் விரைந்து செயல் பட்டு குழந்தையினை மீட்டு பாத்திமாவிடம் கொடுத்ததோடு நில்லாமல் குடிகார கணவனான யூஸுபையும் கைது செய்ததாக செய்திகள் சொல்லுகின்றன.
2) கேரளா மாநிலம் கொசியினைச் சார்ந்த பேரலூர் என்ற நகரத்தில் பதிமூன்றே வயதான ஒரு சிறுமியை தன் குடும்ப வருமையினைப் போக்க தாய் விபச்சாரத்தில் தள்ளி உள்ளாள். ஒன்றும் அறியாத அந்த சிறுமியினை பால் படுத்தியாக கேரளா காவல் துறையினர் இது வரை எண்பது பேரை கைது செய்துள்ளனர். அதில் தமிழ்நாட்டினைச் சார்ந்த அதிகாரிகளும் பிரமுகர்களும் அடங்குவார்கள். இதுபோன்ற வெளி வராத செய்திகளும் தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் மறுக்க முடியாது என்றே சொல்லலாம்.
3) உத்திர பிரதேசம் லக்னோவில் ஒரு பார்க் அருகில் டீக்கடை வைத்து நடத்தி வருபவர் அக்கு லால். இவர் அனாதையாக இருக்கும்போது ஒரு முஸ்லிம் பிரமுகர் எடுத்து வளர்த்து ஆளாக்கினராம். ஒரு நாள் இரவு தனது டீக்கடையினை மூடி விட்டு வீட்டுக்குக் கிளம்பும்போது பார்க் அருகில் ஆறு வயது சிறுவன் முடங்கி படுத்து தூங்கியுள்ளான். அந்த பெரியவர் அவனை எழுப்பி அவனைப்பற்றிய விவரம் கேட்டபோது தனது பெயர் அக்பர் என்றும் தனது பெற்றோர் தன்னை விட்டு விட்டு சென்று விட்டனர் என்றும் சொல்லியுள்ளான். அந்தப் பெரியவர் அவனை தனது வீட்டுக்கு கூட்டிச் சென்று அவனை பராமரித்து வந்தது மட்டுமல்லாமல் அவனை ஏழாவது வரை படிக்க வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் அந்த சிறுவனை தொழுக வைத்தும், ரமழான் மாதத்தில் நோன்பு வைக்கவும் பழகிக் கொடுத்துள்ளார். அதனைப் பற்றி அந்தப் பெரியவர் சொல்லும்போது தன்னை வளர்த்த முஸ்லிம் பெரியவருக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்துவதிர்க்காக தானும் அக்பரை முஸ்லிமாக வளர்ப்பதாக பேட்டி கொடுத்துள்ளார்.
நான் மேலே குறிப்பிட்ட சம்பவங்களிருந்து கீழ்கண்டவைகள் தெளிவாக புரிகின்றன:
1)இருண்ட கால அரேபியாவில் பெண் குழைந்தைகளை ஒரு பாரமாக எண்ணி அவைகளை மண்ணில் புதைத்த நிலையிலிருந்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய ரசூலில்லாவின் போதனைகள் இன்னும் சமுதாய மக்களிடம் முழுமையாக போய் சேரவில்லையோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
அவ்வாறு பாரமாக இருக்கும் பெண் குழந்தைகளை பேணிகாக்க சமுதாயத்தில் ஏதும் திட்டம் இல்லையா என்ற கேள்விக்குறி எழாமலில்லையல்லவா?
அவ்வாறு பாரமாக இருக்கும் பெண் குழைதைகளுக்காக தனியாக மதர்சாவுடன் கூடிய அனாதை பெண் காப்பகம் நிறுவுவது காலத்தின் கட்டாயமல்லவா சகோதர, சகோதரிகளே?
2) ஆண் குழந்தைகளை பராமரிக்க எத்தனையோ அனாதை ஆசிரமங்களும், மதரசாக்களும், பிற்பட்டோருக்காக அரசு விடுதிகளும் உள்ளன. அவைகளில் மேற்குறிப்பிட்டது போன்ற குழந்தைகளை சேர்க்க உதவலாம்.
3) நோன்பு சகர் நேர பிரசங்கங்களில் ஏழை எளியோருக்கு உதவ பைத்துல் மால் நிதி வழங்குங்கள் என்று பிரச்சாரங்கள் சொல்லப்பட்டன. அனால் அதுபோன்று வசூல் செய்த பணம் ஒவ்வொரு வருடமும் எவ்வளுவு என்ற கணக்கினை இணைய தளத்திலோ அல்லது பொது விளம்பரத்திலோ வெளியிட்டர்களா என்றல் இது வரை இல்லை என்றே சொல்லலாம். அது போன்ற பைத்துல் மால் பணத்தினை சமுதாயத்தில் நலிந்தோர் வியாபாரம் செய்ய உதவலாம்.
குடி குடியினை கெடுக்கும் என்ற வாசகத்திணங்க நான் மேலே குறிப்பிட்ட நெல்லையினைச்ச்சர்ந்த யூசுப் குடித்து கேட்டது போன்று எந்தக் குடும்பத்திலும் நடக்காது பர்த்துகொள்ளுவது ஜமாத்தார்கள் மற்றும் சமுதாய இயக்கங்களின் கடமைகள் தானே என்றல் சரிதானே சகோதரர்களே?